இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

48. நித்தியத்தின் பேரிலும் இச்சீவியத்தின் துன்பங்களின் பேரிலும்.

1. (சீஷன்) மோட்ச இராச்சியமே! அதிக பாக்கியமான ஸ்தலமே! இரவின் இருளால் ஒருக்காலும் மூடப்படாமல் சர்வ சத்தியத்தின் ஒளிகளால் எப்போதும் துலங்குகின்ற நித்தியத்தின் நாளே! ஒருக்காலும் முடிவுபெறாத சந்தோஷத்தையும் அமரிக்கையையும் தருகிற நாளே! எவ்வித மாறுபாடில்லாத நாளே! ஓ! அந்த நாள் எப்போது பிரகாசிக்குமோ! இந்த உலக காரியங்கள் யாவும் எப்போது முடிவடையுமோ! அந்த நாள் முடிவில்லாத பிரகாசமிக்க ஒளியுடன் அர்ச்சியசிஷ்டவர்களுக்கு இப்போது பிரகாசிக்கின்றது என்பது மெய். ஆனால் உலக யாத்திரைக்காரருக்கோ அது “தொலைவிலும் கண்ணாடியில் காணப்படும் தோற்றம் போலவும்” மட்டும் பிரகாசிக்கின்றது.

2. அந்தப் பிரகாசம் எவ்வளவு இன்பமான பிரகாசமென்று பரலோகவாசிகள் அறிகிறார்கள்; பரதேசிகளான ஏவையின் மக்களோ, இவ்வுலக வாழ்நாட்கள் எவ்வளவு கசப்பும் சலிப்பு மானவையென்று புலம்புகிறார்கள். “இச்சீவியத்தின் நாட்கள் சொற்பமானவை, கெடுதலானவை,” கஸ்தியும் சஞ்சலமும் நிறைந் தவை; இவ்விடத்தில் மனிதன் அநேக ஆசாபாசக் கண்ணிகளில் அகப்படுகிறான், அநேக பயத்தால் நெருக்கப்படுகிறான், அநேக கவலைகளால் அலைக்கழிக்கப்படுகிறான், அநேக விநோதங்களால் இழுக்கப்படுகிறான், அநேக வீண் காரியங்களில் பராக்காகிறான், அநேகத் தப்பறைகளால் வளைத்துக்கொள்ளப்படுகிறான், அநேக பிரயாசைகளில் நொந்து சோர்வடைகிறான், தந்திரச் சோதனைகளில் அமிழ்த்தப்படுகிறான், இன்பத்தால் பலனற்றுப் போகிறான், துன்பத் தால் வாதிக்கப்படுகிறான்.

3. ஓ! இந்தத் தீமைகளின் முடிவு எப்போது? துர்க்குணங் களின் நிர்ப்பாக்கிய அடிமைத்தனத்தினின்று எப்போது மீட்கப் படுவேன்? ஆண்டவரே! எப்போது உம்மை மாத்திரம் நினைக்கப் போகிறேன்? எப்போது உம்மிடத்தில் சம்பூரணமாய்ச் சந்தோஷம் கொள்ளப் போகிறேன்? எப்போது யாதொரு விக்கினமின்றியும், ஆத்தும சரீர தொல்லையின்றியும் மெய்யான மனச்சுதந்திரத்தோடு சீவிக்கப் போகிறேன்? நிலையான சமாதானம், ஸ்திரமும் இனி அசைக்கப்படாததுமான சமாதானம், உட்சமாதானம், புறச் சமாதானம், எவ்விஷயத்திலும் பலமான சமாதானம் எப்போது உண்டாகும்? நல்ல சேசுவே! உம்மைத் தரிசிக்கப் போவது எப்போது? உமது இராச் சியத்தின் மகிமையை நான் கண்குளிரப் பார்ப்பது எப்போது? நீர் எனக்குச் சர்வத்திலும் சர்வமாயிருப்பது எப்போது? ஆதிமுதல் உமது நேசருக்கு நீர் ஆயத்தம் செய்திருக்கும் உமது இராச்சியத்தில் உம்மோடுகூட நான் எப்போது இருப்பேன்? பகைமை கொண்ட பூமியில் நான் எளியவனும் பரதேசியுமாய் விடப்பட்டிருக்கிறேன்; இங்கே ஓயாத யுத்தம், மிகப் பெரும் நிர்ப்பாக்கியங்கள்.

4. இந்தப் பரதேசத்தில் எனக்கு ஆறுதலாயிரும், என் கஸ்தி யைத் தணித்தருளும்; ஏனெனில் என் சகல ஆசையும் உம்மைத் தாவு கின்றது. இவ்வுலகம் ஆறுதலாகக் கொடுப்பதெல்லாம் எனக்கு முழு பாரமாயிருக்கிறது. உம்மை அந்நியோன்னியமாய் அநுபவிக்க ஆசைப்படுகிறேன், ஆனால் அந்த ஐக்கியத்தை அடையக் கூடுமா யில்லை. பரலோகக் காரியங்களில் பற்றுதல் வைத்திருக்க விரும்பு கிறேன், ஆனால் என் அடங்காத ஆசாபாசங்களும், பூலோகக் காரி யங்களும் என்னை அமிழ்த்திப் போடுகின்றன. என் ஆத்துமத்தைச் சகல காரியங்களின்மேல் உயர்த்தி வைக்க ஆசிக்கிறேன். ஆனால் என்னை மீறி என் சரீரம் என்னை அவைகளுக்கு அடக்கி விடுகின்றது. இவ்விதமாக நிர்ப்பாக்கியனான நான் என்னுடனே போராடுகிறேன். “எனக்கே பாரமாகிறேன்,” ஏனெனில் ஆத்துமம் பரலோகத்தை நோக்கி ஏற விரும்புகின்றது, ஆனால் சரீரம் எப்போதும் பூலோகச் சுகங்களை நாடித் தேடுகின்றது.

5. நான் பரலோகக் காரியங்களைத் தியானிக்கையில் உலகக் கவலைகள் திரளாய் என் புத்தியில் வந்து கூடும்போது, என் உள்ளத்தில் நான் எவ்வளவோ வருத்தப்படுகிறேன். “என் தேவனே! என்னை விட்டு அகன்று போகாதேயும், உமது கோபத்தில் உமதடியானைக் கைவிடாதேயும். உமது மின்னலை அனுப்பி, அந்தக் கவலைகளைச் சிதறடித்துவிடும். உமது அம்புகளை எய்து சத்துருவின் சகல மாய்கை களையும் கலைத்து விடும்.” என் புலன்கள் அனைத்தும் உம்மைத் தேடக் கடவன. நான் உலகக் காரியங்களை எல்லாம் மறந்து விடும்படி செய்யும்; துர்க்குணங்களின் தோற்றங்களை நான் உடனே தள்ளி விட்டு அவைகளை நிந்திக்கும்படி எனக்குக் கிருபை செய்யும். சர்வ நித்திய சுரூபியே! எந்த வீண் பெருமையும் என்னைத் தூண்டாதபடி எனக்கு உதவி செய்தருளும். பரலோக இன்பமே! எழுந்தருளி வாரும், அசுத்தம் என்பது யாவும் உமது சமூகத்தினின்று மறைந்து போகக் கடவது. மேலும் செபத்தியானத்தில் உம்மையன்றி வேறெதையாவது நான் நினைக்கும்போதெல்லாம் எனக்குப் பொறுத்தல் தந்து என் பேரில் தயாளமாயிரும். ஏனென்றால் மெத்தவும் பராக்காயிருப்பது எனக்கு வழக்கமாயிருக்கிறது என்று உண்மை யாகவே சங்கீர்த்தனம் செய்கிறேன். அநேக முறை, என் சரீரம் நின்று அல்லது உட்கார்ந்திருக்கிற இடத்தில் நானிருப்பதில்லை; நினைவு களால் எங்கே கொண்டு போகப்படுகிறேனோ, அங்கே அதிகமா யிருக்கிறேன். என் நினைவு இருக்கிற இடத்தில் நானும் இருக்கிறேன்; எனது நினைவோ நான் நேசிக்கிற காரியம் இருக்கிற இடத்திலேயே சாதாரணமாய் இருக்கின்றது. சுபாவத்தினாலாவது பழக்கத் தினாலாவது எனக்குப் பிரியப்படுகிற காரியம்தான் என் புத்திக்கு அதிகமாய்த் தென்படுகிறது.

6. ஆகவேதான், சத்திய சுரூபியானவரே! “உன் பொக்கிஷம் இருக்கிற இடத்தில் உன் இருதயமும் இருக்கும்” என்று நீர் தெளிவாய்த் திருவுளம்பற்றினீர். நான் மோட்சத்தை நேசித்தால் மோட்சக் காரியங்களை எளிதாய் நினைப்பேன். உலகத்தை நேசித் தால், உலகப் பாக்கியங்களில் சந்தோஷம் கொள்வேன், அதன் துன்பங்களில் கஸ்தியடைவேன். சரீரத்தை நேசித்தால், சரீரத்துக் கடுத்த காரியங்களில் அடிக்கடி சிந்தையாயிருப்பேன். ஆத்துமத்தை நேசித்தால், ஞானக் காரியங்களைப் பற்றி யோசனை செய்யப் பிரியப் படுவேன். எதெதை நேசித்துக்கொண்டு வருகிறேனோ, அததைப் பற்றிச் சந்தோஷமாய்ப் பேசுவேன், கேட்பேன், அதனதன் ஞாபகத்தை என்னுடன் என் வாசஸ்தலத்திற்கு இட்டுக் கொண்டு போவேன். ஆனால் ஆண்டவரே! அமரிக்கையான மனசாட்சி யுடையவனாய்ப் பக்தியுள்ள செபத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கவும், சகல உலகக் காரியங்களையும் உள்ளும் புறமும் போக்கி விட்டவனாய் சம்மனசுக்களுடைய கூட்டத்தில் சேரவும் வேண்டி, எவன் உம்மைப் பற்றியே சகல சிருஷ்டிகளையும் தன் மனதினின்று அகற்றி, தன் சுபாவத்தை அடக்கி, பக்தி விவேகத்தினால் பாவ நாட்டங்கள் அனைத்தையும் சிலுவையில் அறைந்து வருகிறானோ, அவன் பாக்கியவான்.

யோசனை

வியாதிகள், வருத்தங்கள், நோக்காடுகள், சோதனைகள், இவ்வுலகில் நாம் அடையக்கூடாத பாக்கியத்தின் மேல் பெரும் ஆசைகள், இவை யாவும் இடைவிடாமல் நித்தியத்தை நமக்கு நினைப்பூட்டுகின்றன. நித்தியத்தில் நாம் சர்வேசுரனையடையலாம் என்று விசுவாசத்தைக் கொண்டு அறிந்திருக்கிறோம். நித்தியத்தில்தான் மெய்யான இளைப் பாற்றி, மெய்யான சமாதானம், மெய்யான அளவில்லாத பாக்கியம்; நமது பலமெல்லாம் கொண்டு அதையல்லவா நாம் தேடுகிறோம், நாம் ஆசிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக அல்லவா புண்ணிய வான்கள் இன்னும் தங்களைப் பூலோகத்தோடு சேர்த்துக் கட்டி யிருக்கும் பாசங்களைப் பற்றி பெருமூச்சு விட்டு அழுது புலம்பு கிறார்கள். இதனாலேதான் அப்போஸ்தலர்: “சேசுநாதரோடு நான் இருக்கும்படியாக என் சரீரம் கரைந்து போக ஆசிக்கிறேன்” என்கிறார். அப்போது பயமில்லை, கண்ணீரில்லை, யுத்தமில்லை, ஆனால் நித்திய வெற்றி, நித்திய ஆனந்தம் உண்டு. சத்திய சுரூபியானவரின் ஓர் அற்புதக் கதிர் நமது புத்தியைப் பரவசமாக்குகின்றது என்றால், அவரை முகமுகமாய்த் தரிசிக்கும்போது எவ்வளவு ஆனந்தமடை வோம்! இப்போதே அவரை நேசிப்பது இன்பமானால், நேசத்தின் ஊறணியிலேயே நாம் தாகம் தீர்த்துக் கொள்ளும்போது எவ்வளவு இன்பமடைவோம்! ஆம், ஆண்டவரே! உம்மோடுகூட இருக்கும்படி என் சரீரம் கரைந்துபோக ஆசிக்கிறேன்! இந்த நம்பிக்கையே எனக்கு ஆறுதல் தருகின்றது, இதுவே என் முழுச் சீவியம். பூலோகம் எனக்கென்ன? அது எனக்கென்ன கொடுக்கக்கூடும்? “சேதாரின் சனங்களோடு நான் தங்கியிருந்தேன், என் ஆத்துமம் அவர்கள் நடுவில் அந்நியனைப் போலிருந்தது.” ஆண்டவரே! உமது இராச் சியத்தைவிட வேறு எனக்குச் சொந்த தேசம் இல்லை. இந்தப் பரதேசியை உம்மிடம் அழைக்கத் தயைகூரும், அவன் என்றென் றைக்கும் உமது இரக்கத்தைக் கொண்டாடுவான்.