இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

41. பிரபஞ்சப் பெருமை எல்லாவற்றையும் நிந்தித்துத் தள்ள வேண்டியது.

1. (கிறீஸ்துநாதர்) மகனே! பிறர் மகிமைப்படுத்தப்பட்டு உயர்த்தப்படும்போது நீ நிந்திக்கப்பட்டுத் தாழ்த்தப்படுகிறதைக் கண்டால், அதனால் சஞ்சலப்படாதே. உன் இருதயத்தை ஏறிட்டு நம்மை நோக்கிப் பார். அப்போது பூலோகத்தில் நீ மனிதர்களால் நிந்திக்கப்படுவதால் கஸ்திக்குள்ளாக மாட்டாய்.

(சீஷன்) ஆண்டவரே, நாங்கள் குருட்டாட்டமாய் நடக்கிறோம், வீண் பெருமை, வெகு சீக்கிரத்தில் எங்களை மயக்கிப் போடுகிறது. நான் என்னைச் சரியாய் ஆராய்ந்து பார்த்தால் ஒரு சிருஷ்டியும் எனக்கு ஒருபோதும் அநீதமாக நடக்கவில்லை; ஆதலால் உமது பேரில் முறையிடுவதற்கு எனக்குக் காரணமில்லை. ஆனால் நான் அத்தனை தடவையும் அத்தனை கனமாயும் உமக்குத் துரோகம் செய்த பின், சகல சிருஷ்டிகளும் என்பேரில் எதிர்த்து நிற்பது நியாயத்துக்கு ஏற்றதாயிருக்கும். ஆனதால் எனக்கு அவமானமும் நிந்தனையும், உமக்கோ புகழ்ச்சியும் பெருமையும் மகிமையும் உண்டாக வேண்டியது நியாயம். நிந்திக்கப்படுவதிலும் கைவிடப்படுவதிலும் முற்றும் ஒன்றுமில்லாமையாய்க் காணப்படுவதிலும் நான் சந்தோஷம் கொள்ள என்னைத் தயார்படுத்தினாலே தவிர மற்றபடி நான் உள்ளத்தில் சமாதானமாகவும் உறுதியாகவும் இருப்பது இயலாது. ஞான ஒளி அடையவும் உம்மோடு முழுமையும் ஒன்றித் திருக்கவும் கூடாது.

யோசனை

உண்மையில் வெளிச்சத்தில் தேவனுக்கு முன்பாகத் தன்னையே பரிசோதித்துப் பார்க்கிறவன் தன்னை முழுவதும் நிந்திப்பான்; ஏனெனில் தேவ கிருபையில்லாமல் போனால், தன்னிடத்தில் கெடுதல்களின் மிகுதியைத்தான் காண்பான். ஆனதால், பெருமையும், மகிமையும், மரியாதையும் தேடாமல் நிந்தையைத் தேடுவான். யார்தான் அவனை நிந்தித்த போதிலும், யார்தான் அவனை ஒரு பொருட்டாய் எண்ணாமல் போனபோதிலும் அவன் முறைப்படுவதில்லை, கோபிப்பதில்லை. அவர்கள் செய்வது நியாயம்தான் என்று ஒப்புக்கொள்கிறான். மற்றவர்கள் அவனைத் தாழ்த்துவதை விட அவன் தன்னை அதிகமாய்த் தாழ்த்திக் கொள்கிறான், ஏனெனில் சகலத்திலும் கடவுளை மாத்திரம் பார்க் கிறான், மனிதரைக் கவனிக்கிறதில்லை. யோபுவைப் போல: “நான் என்னை நீதிமானாக்கத் தேடினால், என் வாய் என்னைக் கண்டிக்கிறது; அது என் மாசற்றதனத்தை நிரூபிக்கத் தேடினால், அதுவே என் குற்றத்தை நிரூபிக்கிறது” என்று சொல். பிறகு அந்த யோபுவே, தன் இருதயக் கஸ்தியில் சர்வேசுரனுடைய இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடி, பரலோகப் பிதாவை நோக்கி, “ஆண்டவரே! தேவரீர் என் பாவத்தை மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் ஏன் தாமதம் பண்ணுகிறீர்? இதோ! தூசியில் நித்திரை கொள்ளப் போகிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுவீர், நான் இருக்கப் போவ தில்லை” என்று சொன்னார். தன் பேரில் குற்றஞ் சாட்டிக் கொள் கிறவன் பாக்கியவான், ஏனென்றால் அவன் தன் பாவத்திற்குப் பொறுத்தல் அடைவான். கடைசி ஸ்தானத்தைத் தெரிந்து கொள் பவன் பாக்கியவான். ஏனெனில் “சிநேகிதனே, மேல் ஸ்தானத்துக்குப் போ” என்று அவனுக்குச் சொல்லப்படும்.