இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

36. மனிதருடைய வீண் தீர்மானங்களின் பேரில்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! உன் இருதயத்தை ஆண்டவரிடம் உறுதியாய் ஒப்புவித்துவிட்டு, உன் மனசாட்சி உன் பக்திக்கும் மாசற்ற தனத்துக்கும் அத்தாட்சி சொல்லும் பட்சத்தில், மனிதருடைய தீர்மானத்திற்கு அஞ்சாதே. மனிதரால் தூற்றப்படுவது நலமும் பாக்கியமுமாகும்; தன்னை நம்பாமல் சுவாமியின்பேரில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிற மனத் தாழ்ச்சியுள்ளவன் அதனாலே கஷ்டப் படமாட்டான். பலர் பலவிதமாய்ச் சொல்கிறார்கள்; ஆனதால் அதை அதிகமாய் நம்பலாகாது. மேலும் எல்லாருக்கும் திருப்தியாக நடப்பது கூடுமான காரியமல்ல. அர்ச். சின்னப்பர் ஆண்டவரிடம் சகலருக்கும் பிரியப்பட்டு நடக்கவும், சகலரோடு சகலமுமாகவும் முயன்று வந்த போதிலும், மனிதரால் தீர்மானிக்கப்படுவதைப் பற்றி அவர் ஏக்கப்படவில்லை. பிறருடைய நன்மாதிரிகைக்காகவும் இரட்சணியத்திற்காகவும் தம்மால் செய்யக்கூடுமானதைப் போது மான மட்டும் செய்தார்; ஆயினும் அயலார் சில சமயங்களில் தன்மட்டில் தீர்மானம் செய்வதையும் தன்னை நிந்திப்பதையும் தடுக்க அவரால் முடியாமல் போயிற்று. ஆனதால் சகலத்தையும் அறிந் திருக்கிற கடவுளுக்குச் சகலத்தையும் ஒப்புக்கொடுத்து, தனக்கு விரோதமாய் அநீதம் பேசுகிறவர்களுடனும், வாயில் வந்தபடி பிதற்றி வீணானதும் பொய்யானதுமான தீர்மானம் செய்பவர் களுடனும் வாதாடாமல் தாழ்ச்சியும் பொறுமையுமாயிருந்தார். ஆயினும், விசுவாசத்தில் பலவீனராயிருப்பவர்களுக்குத் தன் மவுனத் தினால் துர்மாதிரிகை வராதபடிக்கு, சில சமயங்களில் எதிர் நியாயம் சொன்னார். 

2. சாவுக்குரிய மனிதனுக்கு நீ பயப்படுவது ஏன்? அவன் இன்றைக்கு இருக்கிறான், நாளைக்கு இறப்பான். சர்வேசுரனுக்குப் பயப்படு, மனிதருடைய பயமுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டாய். யாதொருவன் உன்னைக் குறைவாகப் பேசினாலும் அவமானப்படுத் தினாலும் அவன் உனக்கு என்ன நஷ்டம் வருவிக்க முடியும்? உன்னைவிடத் தன்னையே அதிக நஷ்டப்படுத்துகிறான், ஏனெனில் அவன் எவனாயிருந்தாலும் தேவனுடைய தீர்ப்புக்குத் தப்பித்துக் கொள்ள மாட்டான். நீ எப்போதும் தேவனுடைய சன்னிதானத்தில் இரு; ஒருபோதும் முறையிடாதே, வாதாடாதே. நீ இப்பொழுது யாதொரு நியாயமுமின்றித் தாழ்ந்துபோய் அவமானப்படுவதாக உனக்குத் தோன்றினால், அதைப்பற்றி நீ கோபங் கொள்ளாதே; பொறுமையற்றதனத்தால் உன் கிரீடத்தின் சிறப்பைக் குறைக்காதே; ஆனால் கண்ணை ஏறெடுத்து நம்மை நோக்கிப் பார்: சகல கலகத் திலும் நிந்தையிலும் நின்று மீட்கவும் ஒவ்வொருவனுக்கும் அவனவ னுடைய கிரியைகளுக்குத் தக்கபடி சம்பாவனை கொடுக்கவும் வேண்டிய வல்லபம் உடையவராயிருக்கிறோம்.

யோசனை

மனிதருடைய தீர்மானங்களைப்பற்றி நீ கலங்குவது ஏன்? அவர் களுடைய வீணான எண்ணங்கள் உனக்கென்ன செய்யக்கூடும்? அவர்கள் வெளியில் நடப்பதை மாத்திரம் காண்கிறார்கள். ஆத்துமத் திற்குள்ளாக அவர்களுடைய கண்கள் ஊடுருவிப் பார்க்கிறதில்லை. அதற்குள்ளாக அல்லவா நன்மையும் தீமையும் மறைந்து கிடக் கின்றன? நீ குற்றவாளி என்று அவர்கள் சொன்னால் அதற்காகக் கஸ்திப்படாதே; உன்னைப் புகழ்ந்தால் அதற்காக நீ உயர்ந்து போகாதே. ஆனால் கடவுளுக்கு முன்பாக சாஷ்டாங்கமாகப் பணிந்து அவரை நோக்கி: “ஆண்டவரே! நீர் என் அக்கிரமங்களைப் பரிசோதித்துப் பார்த்தால், உமது பார்வைக்கு முன் நிற்பவன் யார்?” என்று மன்றாடு. சிலர் தங்களுடைய புகழை எவ்வளவு பெருத்த காரியமாக எண்ணுகிறார்கள் எனில், அதைக் காப்பாற்றுகிறதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் பிரயாசையைப் பார்த்தால், சுயநேசத்தை முன்னிட்டு அப்படிச் செய்கிறதாக நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. நிந்தை அவமானங்களால் நிரப்பப்பட்ட சேசுநாதர்சுவாமி நமக்கு வேறு மாதிரிகை காண்பித்திருக்கிறார். அவர் மவுனமாயிருந்தார். தமது வாயைத் திறக்கவில்லை. ஆதலால் நமது பேரில் அவதூறு சொல்லப்படும் காலத்தில் நாமும் மெளன மாயிருத்தல் வேண்டும். நமது சகோதரருக்குத் துர்மாதிரிகை உண்டாகாதபடி சில சமயங்களில் பேசுவது கடமையாகக் கூடும்; அதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்தான பிறகு மனசாட்சி அமைதியாயிருக்க வேண்டியது. தாழ்ச்சியோடு சமாதானத்தில் நிலைத்திருக்க வேண்டியது. ஆண்டவர் சகலமும் அறிவார். இதுவே நமக்குப் போதுமானது. அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு: “உங்க ளாலோ, மற்றெந்த மனித நீதிமன்றத்தாலோ தீர்மானிக்கப்படுவதை நான் பிரமாதமாய் எண்ணுவதில்லை; நான் என்னைத்தானே தீர்மானிப்பதில்லை; என்னைத் தீர்மானிக்கிறவர் ஆண்டவர்” என்று சொன்னார். ஆண்டவர் வருகிறவரையில், காலம் வருகிறதற்கு முந்தி, நீ தீர்மானியாதே; இருளில் மறைந்திருக்கிறதை அவர் காண்பித்து விடுவார், இரகசியமான யோசனைகளை வெளியாக்குவார், அப்போது ஒவ்வொருவனும் தனக்குரிய புகழ்ச்சியைச் சர்வேசுர னிடத்தினின்று பெற்றுக் கொள்வான்.