இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

26. வாசகத்தைவிடத் தாழ்ச்சியுள்ள செபத்தால் அடையக்கூடுமான மனதின் மாட்சி

1. (சீஷன்) ஆண்டவரே! சாங்கோபாங்கமுள்ள மனிதன் எப்போதும் பரலோகத்தைச் சேர்ந்த காரியங்களை நினைப்பதும், பற்பல கவலைகள் மத்தியில் கவலை கொள்ளாதது போல நடப்பதுமா யிருப்பான்; தான் அசமந்தமுள்ளவனாயிருப்பதாலல்ல, ஆனால் சிருஷ்டிப்புகளின் பேரில் ஒழுங்கற்ற பற்றுதல் இல்லாதவனாய் சுயாதீன மனதை வகித்திருப்பதாலேயே.

2. மிகவும் கிருபையுள்ளவரான என் சர்வேசுரா! இச்சீவிய கவலைகளில் நான் மிதமிஞ்சிக் கலந்துகொள்ளாதபடி அவைகளி னின்றும், நான் ஆசாபாசங்களில் சிக்கிக் கொள்ளாதபடி சரீரத்தின் பல அவசரங்களினின்றும், நான் சஞ்சலங்களால் இடிபட்டு விழாதபடி ஆத்துமத்தைத் தடுக்கும் சகல தடைகளினின்றும் என்னைக் காப்பாற்றியருள உம்மை மன்றாடுகிறேன். நான் பேசுவது உலகத்தால் முழுப்பற்றுதலோடு தேடுகிற காரியங்களைப் பற்றி மட்டுமல்ல, ஆனால் சகலருக்கும் பொதுவாக விதிக்கப்பட்ட சாபத் தாலும் தண்டனையினாலும் நேரிடும் குறைவுகளையும் பற்றித்தான். இவைகள் என் ஆத்துமத்தை அமுக்கி வருத்தி நான் விரும்புகிற அளவில் மனச்சுயாதீனம் அடையாவண்ணம் தடுத்துக் கொண்டு வருகின்றன.

3. ஆ என் சர்வேசுரா! வாக்குக்கெட்டாத இன்பமே! இலெளகீக ஆறுதல் எல்லாவற்றையும் எனக்குக் கசப்பாக மாற்றிப் போடும், ஏனென்றால் அவை நித்திய நன்மைகளை நான் நினையாதிருக்கச் செய்கின்றன; மேலும் அவை தற்போதைய இன்பத்தைக் காட்டி என்னைத் தங்கள் வசம் இழுத்துக் கொண்டு வருகின்றன. என் ஆண்டவரே! மாமிசமும் இரத்தமும் என்னை மேற்கொள்ளாதிருக்கக்கடவது! உலகமும் அதன் நிலையற்ற மகிமையும் என்னை மோசம் போக்காதிருக்கக்கடவது. பசாசும் அதன் கபட மும் என்னை ஏமாற்றாதிருக்கக்கடவது. எதிர்க்கிறதற்குப் பலமும், சகிக்கிறதற்குப் பொறுமையும், உறுதியாய் நிற்க உறுதியும் எனக்குத் தந்தருளும். உலக ஆறுதல் யாவற்றிற்கும் பதிலாக உமது இஸ்பிரீத்துவின் இனிய தேற்றர வையும், இலெளகீக ஆசைக்குப் பதிலாக உமது நாமத்தின் நேசத்தையும் பொழிந் தருளும்.

4. இதோ! சரீரத்தைக் காப்பாற்ற அவசியமான அன்னபானம் ஆடை முதலிய யாவும் புண்ணிய ஆத்துமத்திற்கு ஒரு பாரமே. நான் இவைகளை மட்டோடு பயன்படுத்திக் கொள்ளவும், இவைகளின் பேரில் மிஞ்சிய பற்றுதல் வையாமலிருக்கவும் கிருபை புரியும். ஜீவனைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால் அவையெல்லாம் தள்ளி விடலாகாது; ஆனால் ஆத்துமத்தின் மேல் சரீரம் அகந்தையாய் எதிர்க்காதபடிக்கு அவற்றில் அவசியமற்றவைகளையும் புலன்களுக்கு அதிக பிரியமானவைகளையும் உதவிக் கொள்ளத் தேடுவது உமது பரிசுத்த கட்டளையால் விலக்கப்பட்டது. ஆனதைப் பற்றி நான் அவ்விஷயங்களில் ஒழுங்கு தப்பிப் போகாதபடிக்கு உமது கரம் என்னை வழிகாட்டி நடத்தக் கடவது.

யோசனை

உலக சீவியத்தில் மனிதர் எவ்வளவு அமிழ்ந்து கிடக்கிறார் களென்றும், அதைச் சேர்ந்த காரியங்களை எவ்வளவு கனமாய் எண்ணுகிறார்கள் என்றும், ஆஸ்தி சம்பாதிப்பதற்கு எவ்வளவு ஆவலா யிருக்கிறார்கள் என்றும், இவ்வுலகச் சந்தோஷமே எப்போதும் தங்க ளுக்கு நிலைக்க எவ்வளவு பிரயாசைப்படுகிறார்களென்றும் பார்த் தால், இந்தச் சீவியம் வெகு சீக்கிரத்தில் முடிந்து போகும் நிலையற்ற சீவியம் என்று நம்மில் யாராவது நம்புவார்களா? எல்லாம் செய் கிறார்கள், எல்லாம் தேடுகிறார்கள், பிற்காலத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்கிறார்கள், தங்களுக்கோ தங்கள் குடும்பத் திற்கோ அவசரமான சொத்து சுகங்களைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைப்பதில் ஏக கவலையாயிருக்கிறார்கள்; ஆனால் நித்தியத்தை மாத்திரம் மறந்து விடுகிறார்கள். அதைப்பற்றி அவர்கள் சுத்தமாய் நினைப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. நினைத்தாலும் சில சமயம் எப்போதாவது அதை மேலெழுந்தவாரியாய்க் கவனிக் கிறார்களே தவிர மற்றபடியல்ல. ஐயோ! நிர்ப்பாக்கியம்! சேசுநாதர் காண்பித்த மாதிரிகையோ, எவ்வளவு வித்தியாசமாயிருக்கின்றது. அவர், இவ்வுலகத்தில் பரதேசி போலவும் இளைப்பாறுகிறதற்காக கொஞ்ச நேரம் தங்குகிற பிரயாணக்காரனைப் போலவும் சீவித்து வந்தார். பிரயாணம் செய்கிறவன் வழியில் தனக்கு வேண்டிய வைகளை மாத்திரம் தன்னுடன் கொண்டு போகிறான்; அதுபோலவே பரலோகத்தை நாடி நாம் பிரயாணம் செய்கையில், நமது அவசரத் துக்கு உதவியான காரியங்களை மாத்திரம் நாம் பயன்படுத்த வேண்டியதே தவிர, மற்றப்படி அவசியமில்லாத காரியங்கள் உபயோகமற்றனவாயும் பாரச் சுமையாயும் ஆபத்திற்குரியன வாகவும் ஆகின்றன. தாகமுள்ள பிரயாணி அருகிலிருக்கிற ஊற்றருகில் போய்த் தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறான்; சற்று நேரம் வழியோரத்தில் இருக்கும் மரத்தடியில் உட்கார்ந்து இளைப் பாறுகிறான்; களைப்பாறின பிறகு எழுந்து திரும்பவும் நடக்கிறான்; குறித்த இடம் போய்ச் சேர வேண்டுமென்பதே அவனுடைய ஏக நோக்கம்; போகிற வழியில் தன் கண்ணுக்கு எதிர்ப்படுகிற காரியங்களில் தன் கவனத்தைச் செலுத்தி நின்றுவிடுவானோ? அல்லது நடுவழியில் தனக்கு ஒரு நிலைமையான இடம் ஏற்பாடு செய்வானோ? நாம்தான் அப்பேர்ப்பட்ட பிரயாணிகள். ஆ! என் சர்வேசுரா! பூலோகத்தினால் எனக்கென்ன பலன்? ஒரு நிமிஷத்தில் நான் விட்டுவிட வேண்டிய இந்த அழகிய நாட்டினால் எனக்கென்ன பிரயோசனமுண்டாகக் கூடும்? நான் என் பிதாவின் வீட்டுக்குப் போகிறேன்; மற்றதெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை. நான் ஆசிக்கிற இடம் சேருகிறதற்கு முன் வேலையோ, களைப்போ, மற்ற என்ன துன்பமோ நேர்ந்தாலும் என்ன! நான் போய்ச் சேர்ந்தாலே போது மானது. என் ஆத்துமம் ஆசையினால் களைப்புற்றது. சீவியரான கடவு ளுடைய வருகையின் சந்தோஷத்தால் என் இருதயமும் என் சரீரமும் துள்ளுகின்றன. உமது வாசஸ்தலங்கள் எம்மாத்திரம் இன்பமானவை களாயிருக்கின்றன! புண்ணியங்களின் தேவனே! என் இராசாவே! என் தேவனே! உமது பீடங்கள் எனக்குண்டு. ஆண்டவருடைய வீட்டில் வாசம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நான் விட்டுவிட வேண்டிய இந்த அழகிய நாட்டினால் எனக்கென்ன பிரயோசனமுண்டாகக் கூடும்? நான் என் பிதாவின் வீட்டுக்குப் போகிறேன்; மற்றதெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை. நான் ஆசிக்கிற இடம் சேருகிறதற்கு முன் வேலையோ, களைப்போ, மற்ற என்ன துன்பமோ நேர்ந்தாலும் என்ன! நான் போய்ச் சேர்ந்தாலே போது மானது. என் ஆத்துமம் ஆசையினால் களைப்புற்றது. சீவியரான கடவு ளுடைய வருகையின் சந்தோஷத்தால் என் இருதயமும் என் சரீரமும் துள்ளுகின்றன. உமது வாசஸ்தலங்கள் எம்மாத்திரம் இன்பமானவை களாயிருக்கின்றன! புண்ணியங்களின் தேவனே! என் இராசாவே! என் தேவனே! உமது பீடங்கள் எனக்குண்டு. ஆண்டவருடைய வீட்டில் வாசம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.