இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

22. தேவன் செய்து வரும் எண்ணிறந்த உபகாரங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளுதல்

1. (சீஷன்) ஆண்டவரே! உமது சித்தத்தை நான் நேசிக்கும்படிச் செய்தருளும்; உமது கற்பனைகளை அனுசரிக்க எனக்குப் படிப்பித் தருளும்; உமது சித்தத்தை நான் கண்டுபிடிக்கச் செய்தருளும். நான் உமக்குத் தகுந்தபடி நன்றியறிதலான தோத்திரங்களைச் செலுத்தக் கூடுமாயிருக்கும்படி, நீர் எனக்குச் செய்துவந்த பொது உபகாரங்களையும் விசேஷ உபகாரங்களையும் மகா சங்கையோடும், ஜாக்கிரதையோடும் நான் ஞாபகப்படுத்திக்கொள்ள எனக்கு அநுக்கிரகம் புரிந்தருளும். ஆனால் ஒரு சொற்ப சகாயத்துக்கு முதலாய்த் தக்க நன்றியறிதலான தோத்திரங்கள் செலுத்த நான் வல்லவனல்லவென்று அறிந்து ஒத்துக்கொள்கிறேன். நீர் எனக்குச் செய்த சகல சகாயங்களுக்கும் நான் தகுதியுடையவனல்லன். உமது மாட்சிமையை நான் யோசிக்கையில் அதன் மகத்துவத்தால் என் புத்தி மயங்கிப் போகின்றது.

2. சரீரமும் ஆத்துமமுமாக நாங்கள் இருப்பதெல்லாமும் எங்களுக்கு உள்ளேயும் புறம்பேயும், இயல்பாகவும் சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாயும் வைத்துக் கொண்டிருக்கிற நன்மைகள் அனைத்தும் உம்மால் அளிக்கப்பட்ட உபகாரங்களே. அவைகள் சகல நன்மைகளுக்குக் காரணமாயிருக்கிற உம்மை மகா உதார குண முள்ளவர் என்றும் பறைசாற்றுகின்றன. ஒருவன் கொஞ்சமாயும் மற்றொருவன் அதிகமாயும் பெற்றுக்கொண்டாலும், எல்லாம் உம்மிடத்தினின்று வருகிறது; உம்மையன்றி ஓர் அற்ப நன்மை முதலாய்க் கிடைக்க மாட்டாது. அதிகமாய்ப் பெற்றுக் கொண் டவன் தன் பேறுபலன்களைப் பற்றிப் பெருமை பாராட்டவும், மற்றவர்களுக்கு மேலாகத் தன்னை உயர்த்தவும், தன்னிலும் சிறியவனை நிந்திக்கவும் கூடாது; ஏனெனில் எவன் தன்னை அதிக தகுதியற்றவன் என்று எண்ணி, நன்றியறிதல் செலுத்துகையில் அதிக தாழ்ச்சியும் உருக்கமுமுள்ளவனாயிருக்கிறானோ, அவனே அதிகப் பெரியவன், அவனே அதிக உத்தமன், சகலரிலும் தன்னை அதிக தாழ்ந்தவனாகவும் அதிக அயோக்கியனாகவும் மதிக்கிறவன் எவனோ அவனே உத்தம மான வரங்களைப் பெற்றுக் கொள்ள அதிகத் தகுதியுடையவன்.

3. கொஞ்சமாய்ப் பெற்றுக்கொண்டவன் அதனால் கஸ்திப் படவும் முறைப்பாடிடவும், தன்னிலும் அதிகமாய்ப் பெற்றுக் கொண்டவன் மட்டில் பொறாமைப்படவும் கூடாது; ஆனால் உம்மையே பார்த்து, நீர் உமது வரங்களை அவ்வளவு தாராளமாகவும் மனப்பூரணமாயும் முகத்தாட்சணியமின்றியும் பொழிந்தருளு வதற்காக உமது நன்மைத்தனத்தை மிகவும் வாழ்த்தக்கடவான். சகலமும் உம்மிடத்தினின்று வருவதால் சகலத்திலும் நீர் புகழப்பட வேண்டியவர். ஒவ்வொருவனுக்கும் என்னென்ன கொடுப்பது உத்தமமென்றும், இவன் ஏன் குறைவாகவும், அவன் ஏன் அதிக மாகவும் அடைகிறான் என்றும் நீர் அறிவீர்; அதைக் கவனிப்பது எங்கள் வேலையல்ல. ஆனால் உமது வேலை. ஏனெனில் ஒவ்வொரு வனுடைய பேறுபலன்களையும் நீரே சரியாய் அறிந்திருக்கிறீர்.

4. ஆண்டவராகிய சர்வேசுரா! வெளியில் தெரிந்து மனித ருடைய புகழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் பெறுவிக்கும் வரங்கள் அதிகமாய் என்னிடமில்லாததைப் பெருத்த நன்மையாக எண்ணுகிறேன்; அதைப்பற்றியே ஒவ்வொருவனும் தன் எளிமைத் தனத்தையும் நீசத்தனத்தையும் உணர்ந்து, ஆயாசமும் சலிப்பும் அவநம்பிக்கையும் அடையாமல் அதற்கு விரோதமாகப் பெருத்த ஆறுதலும் சந்தோஷமும் அடையக்கடவான். ஏனெனில், என் சர்வேசுரா! நீர் ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் இவ்வுலகத்துக்கு முன்பாக நிந்திக்கப்பட்டவர்களையும் உமக்குச் சிநேகிதராகவும் தாசராகவும் தெரிந்து கொண்டீர். “பூலோக முழுமைக்கும் பிரதானி களாக நீர் நியமித்தருளின” உமது அப்போஸ்தலர்களே இதற்குச் சாட்சிகள். அவர்கள் பூலோகத்தில் முறையிடாமல் ஜீவித்தார்கள்; எவ்வளவு தாழ்ச்சியுள்ளவர்களும், சாந்தகுணமுள்ளவர்களும், கபடு, சூது அற்றவர்களுமாயிருந்தார்களென்றால், “உமது நாமத்துக்காக நிந்தை களைச் சகிக்கப் பிரியம் கொண்டு,” உலகத்துக்கு அருவருப்பாய் இருக்கிற காரியங்களை வெகு சந்தோஷத்தோடு கையேற்றுக் கொண்டு வந்தார்கள்.

5. ஆகையால் உம்மை நேசித்து உமது உபகாரங்களின் பெருந் தன்மையை அறிந்திருக்கிறவனுக்குத் தன்னில் உம்முடைய சித்தமும் நித்தியத் திருவுளமும் நிறைவேறுதலே சந்தோஷமாயிருக்குமொழிய மற்றெதைப் பற்றியும் அவனுக்குச் சந்தோஷமிராது. அந்தத் திருவுளத் தைக் குறித்து இவன் எவ்வளவு சந்தோஷமும் ஆறுதலும் அடைய வேண்டியதென்றால், மற்றவர்கள் மேன்மையுள்ளவராயிருக்க எவ்வளவு ஆசை கொள்கிறார்களோ, அவன் தாழ்ந்தவனாயிருக்க அவ்வளவு ஆசை கொள்ள வேண்டும். முதற்படியில் இருந்தால் எப்படியோ கடைசிப் படியிலும் அமரிக்கையாயும் சந்தோஷமாயும் இருக்க வேண்டியது; சங்கையும் மேன்மையும் பெற எப்படியோ, அப்படியே பெயரும் கீர்த்தியும் பெறாதிருக்கவும், நிந்திக்கப்படவும், வெறுக்கப்படவும் ஆசை கொள்ளக் கடவான். ஏனெனில் உமது சித்தமும் உமது மகிமையின் நேசமும் யாவற்றிற்கும் மேலிட்டதாய் அவனிடத்தில் இருக்க வேண்டியது; மேலும் அது அவனுக்குக் கிடைத்ததும் கிடைக்கப் போவதுமான சகல உபகாரங்களையும் விட அதிக ஆறுதலைத் தந்து அதிகப் பிரியமாய் இருக்க வேண்டியது.

யோசனை

நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களைவிட மற்றவர்களுக்கு அதிகமாய்க் கொடுக்கப்பட்டிருக்கின்றனவோ என்று கவலைப்படு வதற்குப் பதிலாய் நாம் அடைந்த வரங்களைபயன்படுத்திக் கொள்ளக் கடவோம். சர்வேசுரன் தம் விருப்பம் போலத் தம்மைக் காண்பிக் கிறார், அவர் தமது வரங்களுக்கு எஜமானராயிருக்கையில் அவை களைப்பற்றி அவரைக் கணக்குக் கேட்பதற்கு நாம் யார்? அவர் தயவாய் வலிய நமக்குத் தந்தருளும் வரங்களுக்காக அவருக்கு நன்றியறிந்திருப்போம். நமக்குக் கொடாதவைகளைப் பற்றியும் அவருக்குத் தோத்திரம் செலுத்துவோம். அவர் உபகாரங்களுக்கு நாம் தகுதியற்றவர்களல்லோ? நீ தாழ்ச்சியுள்ளவனானால் விசேஷ வரங்களையடைய ஆவல் கொள்ள மாட்டாய். தாழ்ச்சி உன்னிட மில்லையானால், அந்த வரங்களால் உனக்குப் பயனுண்டாவதற்குப் பதிலாக கெடுதி சம்பவிக்கக் கூடும். ஏனெனில் உனக்கு ஆங்காரம் உண்டாகக் காரணமாகும். ஆண்டவருக்கு உயிருள்ள நன்றியறி தலையும் அவருடைய சித்தத்துக்கு முழு கீழ்ப்படிதலையும் அவர் உன்னைக் கூட்டிப்போகிற வழியில் பிரமாணிக்கத்தையும் இவை களையே நீ ஆசிக்க வேண்டியது. இவ்விதம் செய்து வந்தால் நீ சமாதானத்தில் இளைப்பாறுவாய். ஏனென்றால், நீ சர்வேசுரனிடம் இளைப்பாறி, அவரிடம் சோதனைகளைச் ஜெயிக்க ஒத்தாசையும், துன்பங்களில் அமரிக்கையும், உன் ஜீவிய காலத்தில் உனக்கு வரக் கூடிய நிர்ப்பாக்கிய கஸ்தி வருத்தங்களில் ஆறுதலும், சகலத்தையும் எளிதாக்கும் நேசத்தையும் கண்டடைவாய். நாம் சர்வேசுரனை மெய்யாகவே நேசிப்போமேயானால், வேறு அந்தஸ்தை நாம் விரும்பு வோமா? வேறு பிரியமானதொன்றைத் தேடுவோமா? ஆனால் சிநேகிக்க நாம் அறியோம். நமது வெதுவெதுப்பைப் பற்றி நாம் பெருமூச்செறிந்து நம்மிடத்தில் பக்திச் சுறுசுறுப்பு உண்டாகவும், நமது சோர்வடைந்த இருதயம் தேவ சிநேகத்தால் பற்றி எரியும்படி செய்யவும் நமது ஆண்டவரை மன்றாடக் கடவோம். அப்போது தான் அர்ச். சின்னப்பரோடு: “கிறீஸ்துநாதருடைய நேசத்தினின்று என்னைப் பிரிக்கத் துணிபவன் யார்? துன்பமோ? கஸ்தியோ? பசியோ? வறுமையோ? ஆபத்தோ? ஆக்கினையோ? வாளோ? நம்மை நேசித்து வருகிறவரைப் பற்றி இவை யாவையும் நாம் மேற்கொள்வோம்; ஏனெனில் மரணமாகட்டும், சீவியமாகட்டும், தூதராகட்டும், பிராதமிகராகட்டும், பலவத்தராகட்டும், நிகழ்காலமாகட்டும், வருங் காலமாகட்டும், வறுமையாகட்டும், பெருமையாகட்டும், தாழ்மை யாகட்டும், வேறெந்த சிருஷ்டியாகட்டும், நமது ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதரிடம் உண்டான சர்வேசுரனுடைய நேசத்தினின்று என்னைப் பிரிக்கக் கூடுமானதாயிராது” என்று சொல்லலாம். பிராதமிகராகட்டும், பலவத்தராகட்டும், நிகழ்காலமாகட்டும், வருங் காலமாகட்டும், வறுமையாகட்டும், பெருமையாகட்டும், தாழ்மை யாகட்டும், வேறெந்த சிருஷ்டியாகட்டும், நமது ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதரிடம் உண்டான சர்வேசுரனுடைய நேசத்தினின்று என்னைப் பிரிக்கக் கூடுமானதாயிராது” என்று சொல்லலாம்.