இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

20. தன் சுய துர்ப்பலத்தை அறிவித்தனும் இகலோக வாழ்வின் துன்பங்களும்

1. (சீஷன்) “எனக்கு விரோதமாய் என் அநீதத்தைச் சங்கீர்த்தனம் செய்வேன்;” ஆண்டவரே! என் பலவீனத்தை உமக்கு வெளிப்படுத்துவேன். அநேக விசை சொற்பக் காரியம் முதலாய் என்னைச் சோர்வுக்கு உள்ளாக்கி என்னைக் கஸ்தியில் வீழ்த்துகின்றது. தைரியமாய் நடந்துகொள்ளப் பிரதிக்கினை செய்கிறேன். ஆயினும் சொற்ப சோதனை வந்த மாத்திரத்தில் பெருத்த சங்கடத்துக்கு உள்ளாகிறேன். மிகவும் சொற்பமான காரியம்தான் சிலமுறை பலமான சோதனையை எனக்கு வருவிக்கின்றது. சிலவேளை நான் உள்ளத்தில் அமைதியாயிருந்து இனி ஆபத்தில்லை என்று எண்ணியிருக்கிற போது திடீரென சுவாசம் போன்ற சொற்ப சோதனையால் ஏறக்குறைய தாழ்த்தப் படுகிறேன்.

2. ஆனதால், ஆண்டவரே! உமது கண்களுக்கு முன்பாக எங்கு மிருந்தும் வெளிப்படுகிற என் நீசத்தனத்தையும் பலவீனத்தையும் பார்த்து என்பேரில் இரக்கமாயிரும்; நான் விழுந்து கிடக்கும் சகதியில் அமிழ்ந்து எப்போதைக்கும் அழுந்தியிராதபடி, அதினின்று என்னைத் தூக்கி விடும். உமது சமூகத்தில் எனக்கு அடிக்கடி கஸ்திக்கும் கலக்கத்துக்கும் காரணமாயிருப்பது என்னவென்றால் நான் இவ்வளவு பலவீனனாயிருப்பதுதான். நான் அவைகளுக்கு முழு சம்மதம் கொடாதிருந்தாலும் அவை என்னைத் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்குக் கடினமும் சஞ்சலமும் உள்ளதாய் இருக் கின்றது. இப்படி நாள்தோறும் போராட்டத்தில் ஜீவிப்பது மிகவும் சலிப்பாயிருக்கிறது. அவலட்சணத் தோற்றங்கள் என்னை விட்டகன்று போகும் எளிமையை விட அதிக எளிதாய் என் உள்ளத்தில் பிரவேசிக்கின்றன; அதிலேதான் என் துர்ப்பலம் எவ்வளவு அதிகமாய் இருக்கிறதென்று நன்றாய் விளங்குகிறது.

3. இஸ்றாயேலின் மிக்க வல்லவரான சர்வேசுரா! பிரமாணிக்க முள்ள ஆத்துமங்களைப் பாதுகாப்பவரே! உமது தாசனுடைய வருத்தத்தையும் துன்பத்தையும் நோக்கி, அவன் செய்யத் தொடங்குகிற சகலத்திலும் அவனுக்கு ஒத்தாசை புரிந்தருளும். இன்னும் புத்திக்கு முழுதும் கீழ்ப்படுத்தப்பட்டிராததும், இந்தத் துன்பம் நிறைந்த உலகத்தில் ஜீவிக்கும் வரையும் நான் போராடி விரோதிக்க வேண்டியதுமான இந்த நிர்ப்பாக்கிய சரீரமென்கிற பழைய மனிதன் வெற்றிகொள்ளாதபடி பரலோக பலத்தினால் என்னைத் திடப்படுத்தியருளும். ஐயோ! துன்பங்களும் நிர்ப்பாக் கியங்களும் நிறைந்து கண்ணிகளாலும் சத்துருக்களாலும் எங்கும் சூழப்பட்ட இச்சீவியம் எவ்வளவோ ஆபத்துக்குரியதாயிருக்கிறது. ஏனெனில் ஒரு துன்பம் அல்லது ஒரு சோதனை ஒழிந்தவுடனே மற்றொன்று என்னை நெருங்கி வருகின்றது; முந்தின சத்துருவினால் உண்டான கலகம் முடிந்தும் முடியாமுன்னே வேறு அனேக கலகங்கள் திடீரென்று நேரிடுகின்றன.

4. இவ்வளவு கசப்புள்ளதும் இத்தனை துன்ப துரிதங்களுக்கு உட்பட்டதுமான சீவியத்தை எப்படித்தான் நேசிக்கக் கூடும்? சாவுக் குரியதும் அழிவுக்குரியதுமான இந்த ஜீவியத்தை ஜீவியமென்று எப்படித்தான் சொல்லக்கூடும்? ஆயினும் அநேகர் அதனை நேசித்துக் கொண்டு வருகிறார்கள். அதனில் தங்கள் பாக்கியத்தைத் தேடு கிறார்கள். அநேக தடவை நாம் உலகம் வியர்த்தமும் மோசமும் உள்ளதா யிருக்கிறதென்று சொல்லுகிறோம், ஆயினும் ஐம்புலன்களின் இச்சைகளால் அரசாளப்படுவதால், அதனை விட்டு விடுகிறோமில்லை. உலகத்தை நேசிக்க ஒருபக்கத்தில் இழுக்கப்படுகிறோம். மற்றொரு பக்கத்தில் அதை நிந்திக்கத் தூண்டப்படுகிறோம்; சரீர இச்சை, கண்ணிச்சை, மனக்கர்வம் இவைகள் உலகப் பற்றுதலை நம்மிடத்தில் கிளப்புகின்றன; ஆனால் அவைகளை நீதிப்படியே தொடர்ந்து வரும் துன்பங்களும் நிர்ப்பாக்கியங்களும் இவ்வுலகத்தின்மீது நம் மனதில் பகைமையையும் அருவருப்பையும் பிறப்பிக்கின்றன.

5. ஆனால் ஐயோ! உலகத்தைச் சார்ந்த ஆத்துமத்தில் தீய இச்சைகளே மேற்படுவதால், புலன்களுக்குக் கீழ்ப்படிவது அதற்கு மிக இன்பமாய்த் தோன்றுகிறது; ஏனெனில் சர்வேசுரனுடைய மதுரத்தையும் புண்ணியத்தின் உள்ளரங்க இன்பத்தையும் அது கண்டதுமில்லை, சுவை பார்த்ததுமில்லை. மாறாக, உலகத்தை முழு மனதோடு வெறுத்து, உத்தம கட்டுப்பாட்டுக்கு அடங்கி, தேவனுக் காக ஜீவிக்க முயலுகிறவர்களோ, உண்மையாய்ச் சகலத்தையும் துறந் தவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேவ மனோகரத்தை அறிந்து கொள்வதுமன்றி உலகம் எவ்வளவு கனமாய்ப் பிசகிப் போகிற தென்றும் எத்தனை வித அபத்தங்களுக்கு உள்ளாகிறதென்றும் காண்கிறார்கள்.

யோசனை

நமது உள்ளத்தில் உண்டாகும் சங்கடங்களுக்கு, கவலைகளுக்கு முன்பாக வெளிக்கவலைகள் அவ்வளவு பிரமாதமானவையல்ல. வெளிக் கவலைகளைத் தன் பலமெல்லாம் கொண்டு எதிர்க்கலாம்; உட்கவலைகளிலோ ஆத்துமத்தில் உண்டான சத்துவங்கள் ஒன்றோ டொன்று போராடுகின்றன. பயங்கரமான யுத்தம்! ஆனதினால்தான் அப்போஸ்தலர்: “நான் ஆசிக்கும் நன்மையை நான் செய்கிறதில்லை, நான் ஆசியாத தின்மையை நான் செய்கிறேன்; உள்ளரங்க மனித னுக்குத் தக்கபடி சர்வேசுரனுடைய கற்பனையைப் பற்றிச் சந்தோஷம் கொள்கிறேன்; ஆனால் என்னுடைய உறுப்புகளில் வேறோர் சட்டத் தைக் காண்கிறேன், அது என் உள்ளத்தின் சட்டத்துக்குச் சரிப்பட வில்லை, என் உறுப்புகளிலுள்ள பாவச் சட்டத்திற்கு என்னை அடிமை யாக்குகிறது” என்கிறார். இப்படிப்பட்ட வெட்கத்துக்குரிய யுத்தத் தால் பிரமாணிக்கமுள்ள ஆத்துமங்கள் தாழ்த்தப்பட்டு எங்கே தந்திரங்களில் விழுந்துவிடப் போகிறோமோ என்று பயந்து வருகின்றன. அதனால் அப்போஸ்தலர்: “இந்தச் சாவின் சரீரத்தினின்று என்னை இரட்சிப்பது யார்?” என்று சொன்ன பிறகு, உடனே “நமது ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய பேறுபலன் களால் உண்டான தேவ இஷ்டப்பிரசாதம்” என்கிறார். வாக்குக் கெட்டாத அன்போடு நம்மை ஏற்றுக்கொள்ளத் தமது கரங்களை விரித்துக் காட்டும் சர்வேசுரனுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து, அவருடைய இருதயத்தை அண்டிப் போவோம். அவரால் பலமடைவோம். அவரே நமது ஏக நம்பிக்கை; அவரை நோக்கி: “ஆண்டவரே! என்னை இரட்சித்தருளும்; என்னையும் உம் பக்கத்தில் வைத்துக்கொள்ளும். அப்போது யார் வேண்டுமானாலும் எனக்கு விரோதமாய் வரட்டும். ஆண்டவரே! நீரே என் ஆதரவு, என் அடைக் கலம், என் இரட்சகர், என் தேவன், என் உதவி. உமது பேரில் என் நம்பிக்கையை வைக்கிறேன். நீர்தான் என்னைக் காப்பவர்; இரட்சணி யத்தின் பலம் நீர்தான்; என் புகழ்ச்சிகளால் உம்மை மன்றாடுவேன்; என் சத்துருக்களினின்று இரட்சிப்பீர்” என்று வேண்டிக்கொள்.