இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

18. இந்தத் தேவ திரவிய அனுமானத்தை மனிதன் வீண் ஆவல் கொண்டு ஆராயாமல் தனது புலன்களை விசுவாசத்திற்குக் கீழ்ப்படுத்தி கிறீஸ்துநாதரின் தாழ்ச்சியைக் கண்டுபாவிக்க வேண்டியது.

1. (கிறீஸ்துநாதர்) நீ சந்தேகக் கடலில் மூழ்கிப் போகாதிருக்க வேண்டுமாகில், மிகவும் ஆழ்ந்த இந்தத் தேவத் திரவிய அனுமா னத்தை வீண் ஆவலோடும் பிரயோசனமில்லாமலும் ஆராயாதே. “தேவ மகத்துவத்தை ஆராய்கிறவன் அதன் மகிமையால் நசுக்கப் படுவான்.” மனிதன் கண்டுபிடிக்கக் கூடுமானதை விட அதிகமாய்ச் செய்யச் சர்வேசுரன் வல்லவராய் இருக்கிறார். ஆயினும் (திவ்விய நற்கருணையைச் சேர்ந்த) உண்மைகளைப் பக்தியோடும், தாழ்ச்சி யோடும் தேடுவதில் யாதொரு குற்றமில்லை; அதாவது வேதபாரக ருடைய பரிசுத்த போதனையைப் பின்பற்ற முயலவும், பெரியவர்கள் கற்பிக்கிறதைக் கேட்கத் தயாராயிருக்கவும் வேண்டும்.

2. தர்க்கங்களின் வருத்தமான வழிகளை விட்டுவிட்டு சர்வேசுர னுடைய கற்பனைகளின் சமமானதும் உறுதியானதுமான பாதையில் சென்று நடக்கிறவன் பாக்கியவான்.

அநேகர் புத்திக்கெட்டாத காரியங்களை ஆராய மனது கொண்டதால் பக்தியை இழந்துவிட்டார்கள். புத்திக் கூர்மையும் தேவ இரகசியங்களில் ஆழ்ந்த ஆராய்ச்சியுமல்ல, ஆனால் விசுவாசமும் நேர்மையான சீவியமும்தான் உன்னிடத்தில் விளங்க வேண்டியது. எளிதாய்க் கண்டு பிடிக்கக் கூடுமான காரியங்களை நீ சரியாய் அறியாதிருக்கும்போது, உன் புத்திக்கெட்டாத காரியங் களைக் கண்டுபிடிக்கிறதெப்படி? சர்வேசுரனுக்குப பணிந்து நட; உன் புத்தியை விசுவாசத்திற்குக் கீழ்ப்படுத்து; அப்போது உன்னுடைய பிரயோசனத்திற்கும் அவசரத்திற்கும் தக்க விதமாக ஞான அறிவு உனக்கு அளிக்கப்படும்.

3. சிலர் விசுவாசத்திற்கு விரோதமாகவும் திவ்விய நற்கருணைக்கு விரோதமாகவும் பலமாய்ச் சோதிக்கப்படுகிறார்கள்; ஆனால் அது அவர்களால் அல்ல, அநேகமாய்ச் சத்துருவினால் உண்டாகின்றது.

நீ அப்பேர்ப்பட்ட சோதனைகளை அசட்டை செய்; அவைகளோடு தர்க்கம் செய்யாதே; பசாசினால் உண்டான சந்தேகங்களுக்கு மறுமொழி சொல்லாதே. ஆனால் சர்வேசுரனுடைய வார்த்தைகளை நம்பு; அவருடைய அர்ச்சியசிஷ்டவர்களையும் தீர்க்கதரிசிகளையும் நம்பு; துஷ்ட சத்துரு உன்னை விட்டோடிப் போகும்.

சர்வேசுரனுடைய ஊழியன் இப்பேர்ப்பட்ட தந்திரங்களைச் சகிப்பதால் அவனுக்கு அடிக்கடி மிகுந்த பிரயோசனமுண்டாகும். ஏனெனில் சத்துரு அவிசுவாசிகளையும் பாவிகளையும் சோதிப்பதில்லை, அவர்கள் தன் வசத்திலிருப்பதாக தனக்கு நன்றாய்த் தெரிகிறது ல் ஆனால் பக்தியும் விசுவாசமுமுள்ள ஆத்துமங்களைத்தான பல விதங்களில் சோதித்து வருத்தப்படுத்துகின்றது.

4. ஆனதால் கபடற்றதும் தத்தளிப்பற்றதுமான விசுவாசத் தோடு நடந்து கொள்; தாழ்ச்சியுள்ள வணக்கத்தோடு தேவ திரவிய அனுமானத்தை அண்டிவா; நீ கண்டுபிடிக்கக் கூடாததைச் சர்வ வல்லபமுள்ள சர்வேசுரனிடத்தில் அச்சமில்லாமல் ஒப்பித்துவிடு. சர்வேசுரன் உன்னை ஏமாற்றுகிறதில்லை, ஆனால் தன்னைத்தானே மிதமிஞ்சி நம்புகிறவன் ஏமாந்து போகிறான். சர்வேசுரன் கபடற்றவர் களுக்குத் துணையாய் இருக்கிறார், தாழ்ச்சியுள்ளவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார், “சிறுவர்களின் புத்தியைத் தெளிவிக் கிறார்,” சுத்த மனதுள்ளவர்களுடைய ஞானக் கண்ணைத் திறக் கிறார்; வினோதப் பிரியருக்கும் ஆங்காரிகளுக்குமோ வரப்பிரசாதத் தைக் கொடுக்க மாட்டார்.

மனித புத்தி பலவீனமானது, அது எளிதில் மோசம் போகும்; மெய்யான விசுவாசமோ, மோசம் போவது கூடாத காரியம்.

5. மானிட அறிவும் சுபாவ ஆராய்ச்சியும் எப்போதும் தேவ விசுவாசத்தைப் பின்பற்ற வேண்டியது; அதற்கு முன்னே போக லாகாது, அதற்கு விரோதமாகவும் இருக்கக்கூடாது. ஏனெனில் இத்தேவதிரவிய அனுமானத்தில் விசுவாசமும் நேசமும் உந்நத விதமாய் விளங்கி வருகின்றன; அவைகள் இந்த மிகவும் பரிசுத்தமும் அதி உன்னதமுமான தேவதிரவிய அனுமானத்தில் இரகசிய மேரையில் நன்மை பயக்கின்றன.

நித்தியரும், அளவற்றவரும், மட்டில்லா வல்லவருமான சர்வேசுரன் வானத்திலும், பூமியிலும் “மகத்தானவையும் புத்திக் கெட்டாதவையுமான காரியங்களைச் செய்து வருகிறார்.” அவருடைய அற்புதமான செயல்களை ஆராய்ந்து கண்டுபிடிப்பவன் ஒருவனு மில்லை.

சர்வேசுரனுடைய செயல்கள் மானிட புத்தியைக் கொண்டு எளிதாய்க் கண்டுபிடிக்கக் கூடுமானவையாய் இருந்தால், அவை களை ஆச்சரியத்துக்குரியவையென்றும் வாக்குக்கெட்டாதவை என்றும் சொல்லத் தகாதிருக்குமே.

யோசனை

அவிசுவாசி அறியத் தேடுகிறான், அதுவே அவனுடைய கேட் டுக்குக் காரணமாகின்றது. கல்வி சாஸ்திரத்தில் இரட்சணியத்தைத் தேடுகிறான், ஆங்காரத்தில் அதைத் தேடுகிறான், ஆனால் அவனது இருள் நிறைந்த புத்தியினின்று, அவனுடைய கெட்டுப்போன சுபாவத்தினின்று மரணமே மறுமொழியாகப் புறப்படுகிறது. கிறீஸ்தவர்களே! “நீதிமான் விசுவாசத்தினால் சீவிக்கிறான்” என்பதை மறந்துவிடாதீர்கள். ஆராதிக்கத்தக்க தேவ நற்கருணையால் சீவித்து, விசுவாசத்தினால் சீவியுங்கள். அதில்தான் உங்களுடைய விசுவாசம் பலமாய் விளங்கும். அதுதான் உங்கள் விசுவாசத்தின் அத்தாட்சி யாகும். சர்வேசுரனுடைய குமாரனாகிய சேசுகிறீஸ்துநாதர், “வழியும் உண்மையும் சீவியமுமாயிருக்கிறவர்,” இது நம்முடைய சரீரம், இது நம்முடைய இரத்தம் என்று திருவுளம்பற்றின பிறகு, “இதை நீ இவ்விதம் விசுவசிக்கிறாயோ?” என்று கேட்கிறார். ஆம் ஆண்டவரே! நான் இவ்விதமே விசுவசிக்கிறேன்; “வானமும் பூமியும் கடந்து போகும், ஆனால் உமது வாக்கியங்களோ ஒருபோதும் கடந்து போகாது.” அப்பமாயிருந்தது மெய்யாகவே உமது சரீர மாயிற்று என்றும், இரசமாயிருந்தது மெய்யாகவே உமது இரத்த மாயிற்றென்றும் விசுவசிக்கிறேன், அறிக்கையிடுகிறேன். என் புத்தி தன்னைத் தாழ்த்தி, விசுவசிக்க மனம் கொள்ளாத புலன்களைக் கண்டித்து அடக்குகிறது. சர்வேசுரன் மனிதனை மிகவும் நேசித்தார், அவனுக்காகத் தமது ஏக குமாரனைக் கையளித்தார். இவரோ இந்தப் பெரிய வரத்தைப் பூரணமாக்கி என்றென்றைக்கும் நீளிக்கச் செய்வதற்கு, திருப்பந்தியில் நாள்தோறும் தம்மையே மெய்யாகவே முழுமையும் மனிதனுக்குக் கொடுக்கிறார். சர்வேசுரனுக்கு எங்கள் மட்டில் உண்டான நேசத்தை, பிதாவின் நேசத்தை, சுதனுடைய நேசத்தை நான் விசுவசிக்கிறேன். இந்த அளவில்லாத நேசமேச சகலத்திற்கும் காரணமாயிருக்கின்றது. நாம் கண்டுபிடித்தால்தான் என்ன, கண்டுபிடியாமல் போனால்தான் என்ன? “உமது வழிகள் ஊடுருவப்படக் கூடாதவையென்றும் உமது மகத்துவத்தை ஆராய் கிறவன் அதன் மகிமையால் நசுக்குண்டு போவான்” என்றும் நாங்கள் அறியோமோ? கண்டுபிடியாமல் விசுவசிப்பதே எங்கள் பாக்கியம். கண்களை மூடிக் கொண்டு உமது நேசத்தின் புத்திக்கெட்டாத பாதாளத்தில் அமிழ்ந்து மூழ்கிக் கிடப்பதே எங்களுடைய பாக்கியம். தர்க்கிக்கிற குணமுள்ள ஆங்காரம் படைத்த நியாயம் மவுனமா யிருக்கக் கடவது. அது தன் பலவீனத்தால் உமது சர்வ வல்லமையை எதிர்க்கத் துணியாதிருக்கக்கடவது. அதன் சந்தேகங்களுக்கும் வீணான கேள்விகளுக்கும் “சர்வேசுரன் நம்மை எவ்வளவோ நேசித்தார்” என்ற மறுமொழியொன்றே நாம் சொல்ல வேண்டியது. இதைவிடச் சிறந்த மறுமொழி வேறில்லை. சர்வேசுரன் அப்பத்தின் குணங்களுக்குள்ளே தம்மை மறைத்துக் கொள்வதைப் பற்றியும் இரட்சகர் தம்மைத்தாமே போசனமாக மனிதருக்குக் கொடுப்பதைப் பற்றியும் ஆச்சரியப்படுகிறீர்களா? விசுவசிக்கத் தயங்குகிறீர்களோ? உங்கள் விசுவாசம் தத்தளிக்கின்றது; காரணமென்ன? நீங்கள் நேசிக் கிறதில்லை. ஆனால் விசுவசிக்கிற ஆத்துமங்களே! பிரமாணிக்க முள்ள ஆத்துமங்களே, நீங்கள் சந்தோஷத்தோடும், உறுதியோடும், நம்பிக்கையோடும் பீடத்தருகில் போங்கள்; சேசுநாதரிடம் போங்கள்; நேசத்தின் பரம இரகசிய விருந்திற்குப் போங்கள்; ஆண்டவரே, உம்மை விட்டு நாங்கள் எங்கே போகிறது, சரீரமும், இரத்தமும் உள்ளவர்களிடத்திலா? நியாயத்தினிடத்திலா? தர்க்க சாஸ்திரத்தினிடத்திலா? உலக ஞானிகளிடத்திலா? முறுமுறுக் கிறவர்களிடத்திலா? அவிசுவாசிகளிடத்திலா? “அவர் எப்படித் தமது மாமிசத்தைப் போசனமாகக் கொடுக்கக் கூடும்? அவரைப் பூமியில் போசனமாகப் புசிக்கிறீர்கள் என்றால் அவர் எப்படி அதே காலத்தில் பரலோகத்திலும் இருக்கக் கூடும்?” என்று நாள்தோறும் இன்னமும் எங்க ளைக் கேட்பவர்களிடத்திலா நாங்கள் போகிறது? இல்லை ஆண்டவரே! அவர்களிடம் நாங்கள் போக மாட்டோம். உம்மை விட்டுப் பிரிந்திருக்கிற அவர்களை நாங்கள் பின்செல்ல மாட்டோம். அர்ச். இராயப்பரைப் பின்சென்று, “போதகரே! நாங்கள் உம்மைவிட்டு எங்கே போவோம்? நித்திய ஜீவியத்தின் வார்த்தைகள் உம்மிடமல்லவா இருக்கின்றன” என்று அவரோடு உறுதியாகச் சொல்லுவோம்.