இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மாற்கு சுவிசேஷம் - அதிகாரம் 16

சேசுநாதர் உயிர்த்துத் தம்முடைய சீஷர் களுக்குத் தரிசனையானதும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்ததும், மோட்சத்துக்கு ஆரோகணமானதுமாகிய வர்த்தமானங்கள்.

1. ஓய்வுநாள் கடந்தபின், மரிய மதலேனம்மாளும், யாகப்பருடைய தாயாகிய மரியம்மாளும், சலோமையம்மாளும் வந்து, சேசுநாதருக்குப் பூசும்படியாகப் பரிமளவர்க்கங்களை விலைக்கு வாங்கிக்கொண்டு, (மத். 28:1; லூக். 24:1; அரு. 20:1.)

2. வாரத்தின் முதலாம் நாள் அதி காலமே சூரியன் உதயமானபோது கல்லறைக்கு வந்தார்கள். .

3. (வருகிறபோது) கல்லறை வாசலினின்று யார் நமக்குக் கல்லைப் புரட்டித் தள்ளுவானென்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண் டார்கள்.

4. ஏனெனில் அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; ஆனால் அவர்கள் ஏறெடுத்துப் பார்க்கையில், கல் புரட் டப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.

5. பின்னும் அவர்கள் கல்லறைக் குள் பிரவேசித்தபோது, வெள்ளை அங் கியைத் தரித்து, வலது பக்கத்தில் உட் கார்ந்திருந்த ஒரு வாலனைக் கண்டு, திடுக்கிட்டார்கள். (மத். 28:5; லூக். 24:4; அரு. 20:12.)

6. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் அஞ்சவேண்டாம்; சிலுவையில் அறை யுண்ட நசரேனுவாகிய சேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார். இங்கேயில்லை; அவரை வைத்த இடம் இதுவே.

7. நீங்கள் அவருடைய சீஷர்க ளிடத்திலும், இராயப்பரிடத்திலும் போய் உங்களுக்குமுன் அவர் கலிலே யாவுக்குப் போகிறாரென்றும், அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தது போல அவரை அங்கே காண்பீர்களென்றும் அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றார். (மாற். 14:28.)

8. நடுக்கமுந் திகிலும் அவர்களைப் பிடித்திருந்ததினாலே, அவர்கள் வெளியே புறப்பட்டுக் கல்லறையை விட்டு ஓடிப்போனார்கள். அல்லாமலும் அவர்கள் பயந்திருந்தபடியினாலே எவனுக்கும் ஒன்றும் சொன்னவர்களல்ல.

9. சேசுநாதர் வாரத்தின் முதல் நாள் காலையில் உயிர்த்தெழுந்து, முந்தமுந்த மரியமதலேனம்மாளுக்குத் தரிசனையானார். இவளிடமிருந்தே அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந் தார். (அரு. 20:16; லூக். 8:2.)

10. அவள் போய் அவரோடுகூட இருந்தவர்கள் துக்கித்து, அழுது கொண் டிருக்கையில், அவர்களுக்கு இந்த செய்தியை அறிவித்தாள்.

11. அவர் உயிரோடிருக்கிறாரென்றும், அவளுக்குத் தரிசனையானாரென்றும் அவர்கள் கேட்டும், நம்பவில்லை.

12. இவைகளுக்குப்பின், அவர்க ளில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு அவர் வேறு ரூபமாய்த் தரிசனையானார். (லூக். 24:13.)

13. இவர்களும் போய், மற்றவர்க ளுக்கு அறிவித்தார்கள். இவர்களையும் அவர்கள் நம்பவில்லை .

14. கடைசியாய்ப் பதினொருவரும் பந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனையாகி, தாம் உயிர்த்திருக்கிற தைக் கண்டவர்களை அவர்கள் விசு வசியாமற்போனதைப்பற்றி அவர்க ளுடைய அவிசுவாசத்தையும் இருதயக் கடினத்தையுங் கண்டித்தார்.

15. பின்னும் அவர் அவர்களுக்குத் திருவுளம் பற்றினதாவது: நீங்கள் உலக மெங்கும் போய், எல்லாச் சிருஷ்டிகளுக் கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

16. விசுவசித்து, ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சண்ணியமடைவான், விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வை யிடப்படுவான்.

17. மேலும் விசுவசிக்கிறவர்களைத் தொடர்ந்து வரும் அற்புதங்களாவன: என் நாமத்தினால் பேய்களைத் துரத்து வார்கள், நூதனமான பாஷைகளைப் பேசுவார்கள். (அப். 2:4; 10:46; 16:18; 28:5.) -

18. பாம்புகளைப் பிடித்துத் தூக்கு வார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைப் பானஞ்செய்தாலும், அது அவர்களுக்குப் பொல்லாப்பு செய்யாது. நோயாளிகளின்மேல் கைகளை நீட்ட, அவர்கள் செளக்கியமடைவார்கள் என்றார்.

19. கர்த்தராகிய சேசுநாதர் இவ் விதமாய் அவர்களுடன் பேசினபின்பு, பரலோகத்திற்கு எழுந்தருளி சர்வேசுர னுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

20. அவர்கள் புறப்பட்டுப்போய் எங்கும் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுக்கு உடனுதவி செய்து தொடர்ந்து நடந்த அற்புதங்களால் அவர்களுடைய வாக்கியத்தை உறுதிப் படுத்தினார்.

அர்ச். மாற்கு சுவிசேஷம் முற்றிற்று.