இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மாற்கு சுவிசேஷம் - அதிகாரம் 15

சேசுநாதர் குற்றஞ் சாட்டப்பட்டதும், பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி சேவகர்களுக்குக் கையளித்ததும், அவருடைய மரணமும், அடக்கமும்.

1. பின்பு விடியற்காலமானவுடனே பிரதான ஆசாரியர்கள் மூப்பரோடும், வேதபாரகரோடும், ஆலோசனை சங் கத்தாரனைவரோடும் கூடி ஆலோசனை செய்து, சேசுநாதரைக் கட்டிக் கூட் டிக்கொண்டுபோய், பிலாத்துவினிடத் தில் ஒப்புக்கொடுத்தார்கள். (மத். 27:1; லூக். 22:66; அரு. 18:28.)

2. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய இராஜாவோ என்று வினாவினான். அதற்கு அவர் மறு மொழியாக: நீர் (உள்ளபடியே) சொல்லுகிறீர் என்றார். (மத். 27:11.)

3. பிரதான ஆசாரியர்கள் அவர் மேல் அநேக விஷயங்களில் குற்றஞ் சாட்டிக்கொண்டிருந்தார்கள். (லூக். 23:2.)

4. அப்பொழுது பிலாத்து மறு படியும் அவரை நோக்கி: பார், உன் மேல் எத்தனையோ விஷயங்களில் குற்றஞ்சாட்டுகிறார்கள்; நீ யாதொரு மறுமொழியும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

5. சேசுநாதர் அதற்கும் யாதொரு மறு மொழியும் சொல்லாதிருந்தார். அதனால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.

6. அப்படியிருக்க, பண்டிகைதோறும் விலங்கில் கிடக்கிறவர்களில் எவனை ஜனங்கள் கேட்பார்களோ, அவனை அவர்களுக்கு விடுதலை செய்வது அவ னுக்கு வழக்கமாயிருந்தது. (மத். 27:15.)

7. அப்பொழுது ஓர் கலாபத்தில் கொலை செய்தவனும், கலாபக்காரரோடு விலங்கிடப்பட்டிருந்தவனுமாகிய பரபா ஸென்னப்பட்ட ஒருவனிருந்தான்.

8. ஜனங்கள் (பிலாத்து வினிடத் தில்) வந்து அவன் தங்களுக்கு எப் போதும் செய்துவந்ததுபோல் செய்ய வேண்டுமென்று மன்றாடத் தொடங் கினார்கள். )

9. பிலாத்து அவர்களுக்கு மறு மொழியாக: நான் யூதர்களுடைய இரா ஜாவை உங்களுக்கு விடுதலை செய்ய விரும்புகிறீர்களோ என்று கேட்டான்.

10. ஏனெனில் பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரைக் கைய ளித்தார்களென்று அறிந்திருந்தான்.

11. ஆனால் அவன் பரபாஸையே தங்களுக்கு விடுதலையாக்க வேண்டு மென்று ஜனங்கள் கேட்டுக்கொள் ளும்படி பிரதான ஆசாரியர்கள் அவர் களை ஏவிவிட்டார்கள்.

12. ஆகையால் பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதர்களு டைய இராஜாவுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டான். (மத். 27:22; லூக். 23:14-25.)

13. அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையிலே அறையுமென்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். (அரு. 18:40.)

14. ஆனால் அவன் என்ன தின்மை செய்தானென்று பிலாத்து அவர்க ளிடத்தில் கேட்க, அவர்களோ: அவ னைச் சிலுவையிலே அறையுமென்று அதிகமாய்க் கூக்குரலிட்டார்கள். .

15. ஆகையால் பிலாத்து ஜனங் களைப் பிரியப்படுத்த விரும்பி, பர பாஸை அவர்களுக்கு விடுதலை செய்து, சேசுநாதரைச் சாட்டைகளால் அடிப் பித்துச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களுக்குக் கையளித்தான்.

16. அப்பொழுது போர்ச்சேவகர் அவரை பிரேத்தோர் அதிகாரியின் நியாயசாலையின் முற்றத்துக்குக் கூட் டிக்கொண்டு போய், சேவகர் கூட்ட முழுமையும் அங்கே கூடிவரும்படி செய்து, (மத். 27:27; அரு. 19:2.)

17. ஓர் சிவப்பான போர்வையை யும் அவருக்கு உடுத்தி, ஓர் முள்முடி யையும் பின்னி, அவருக்குச் சூட்டி:

18. யூதருடைய இராஜாவே! வாழ்க வென்று அவருக்கு ஆசாரம் பண்ணத் துவக்கினார்கள்.

19. பின்னும் மூங்கில் தடியால் அவரைச் சிரசிலடித்தார்கள்; அவர் மேல் துப்பினார்கள், முழந்தாட்படி யிட்டும் அவரை நமஸ்கரித்தார்கள்.

20. அப்படி அவரை ஆகடியஞ் செய்தபின்பு, சிவப்புப் போர்வையைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, சிலுவையில் அறை யும்படிக்கு வெளியே கூட்டிக்கொண்டு போனார்கள்.

21. அப்பொழுது அலெக்சாந்தர், ரூப்புஸ் என்பவர்களுக்குத் தகப்பனும், சிரேனே ஊரானுமாகிய சீமோனென் னப்பட்ட ஒருவன் கிராமத்திலிருந்து வந்து, அவ்வழியாய்ப் போகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயம் பண்ணினார்கள். (மத். 27:32; லூக். 23:26.)

22. மேலும் கபால ஸ்தலமென்று அர்த்தங்கொள்ளும் கொல்கொத்தா என்னப்படுகிற இடத்திற்கு அவரைக் கூட்டிக்கொண்டு போய்,

23. வெள்ளைப்போளம் கலந்த திராட்ச ரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

24. பின்னும் அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, அவனவன் எதெதை எடுத்துக்கொள்வதென்று அவைகளின் மேல் சீட்டுப் போட்டார் கள். (மத். 27:35; லூக். 23:34; அரு. 19:23.)

25. அவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம் மணி நேரமாய் இருந்தது.

* 25. யூதர் தங்கள் காலக் கணிதத்தை, இத்தேசக் கணிதத்துக்கு ஒப்பாக, ஒரு பகல் 30 நாழிகையை, மூன்று மணிநேரம் அதாவது, ஏழரை நாழிகையடங்கிய நான்கு சாமங்களாக வகுத்து, முதலாம், மூன்றாம், ஆறாம், ஒன்பதாம் மணியென்று குறிப்பிடு வார்கள். சூரியன் உதயமாகிற ஆறுமணி முதல் ஒன்பது மணி வரையில் செல்லும் 7 1/2 நாழிகையாகிய முதல் சாமத்தை முதல் மணியென்றும், 9 மணி முதல் 12 மணி வரையில் செல்லும் இரண்டாஞ் சாமத்தை மூன்றாம் மணியென்றும், 12 மணி முதல் பின்நேரம் 3 மணி மட்டுமுள்ள மூன்றாஞ் சாமத்தை ஆறாம் மணியென்றும், 3 மணி முதல் பொழுது அஸ்தமாகும் நேரம் வரையில் செல்லும் நாலாஞ் சாமத்தை ஒன்பதாம் மணியென்றுங் கணக்கிட்டு வருவார்கள். அர்ச். மாற்கு அந்த ஒழுங்குக்கு இசைவாக எழுதுகிறபடியால், மூன்றாம் மணி நேரத்தில் சேசுநாதரைச் சிலுவையில் அறைந்தார்க ளென்கும்போது, காலை 9 மணி முதல் 12 மணி மட்டுமுள்ள இரண்டாஞ் சாமத்தைக் குறிக்கிறார். ஆகையால் தால்லியோலி என்ற சாஸ்திரி குறிப்பிட்டிருக்கிறது போல 3-ம் மணி முடிந்து, 6-ம் மணி துவக்கப் போகையில் கர்த்தரைச் சிலுவையில் அறைந் தார்கள் என்று எண்ணத்தகும். கர்த்தர் மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி ஒன்பதாம் மணி வேளையில், அதாவது, பின்நேரம் மூன்று மணிக்கு உயிர்விட்டாரென்று அறியவும்.

26. அவருடைய தீர்ப்பின் அறிக் கைப்பத்திரமாக: யூதருடைய இராஜா என்று தலைப்பில் எழுதி வைக்கப்பட் டிருந்தது.

27. அன்றியும் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும், இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளரை அவ ரோடுகூடச் சிலுவைகளில் அறைந்தார் கள். 28. அக்கிரமிகளோடு எண்ணப்பட்டாரென்கிற வேத வாக்கியம் இவ் விதமாய் நிறைவேறிற்று. (இசை. 53:12.)

29. அவ்வழியாய்ப் போனவர்களும் அவரைத் தூக்ஷணித்து, தங்கள் தலை களை அசைத்து: ஆ! ஆ! சர்வேசுர னுடைய ஆலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே திரும்பக் கட்டுகிற வனே , (அரு. 2:19.)

30. சிலுவையினின்று இறங்கி, உன் னையே இரட்சித்துக்கொள் என்பார்கள்.

31. அத்தன்மையே பிரதான ஆசா ரியர்களும் அவரைப் பரிகாசம்பண்ணி, வேதபாரகரோடு ஒருவன் ஒருவனைப் பார்த்து: இவன் மற்றவர்களை இரட்சித் தான்; தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ள இவனால் கூடவில்லை.

32. நாம் கண்டு விசுவசிக்கும் பொருட்டு, இஸ்ராயேலுக்கு இராஜா வாகிய கிறீஸ்து இப்போது சிலுவையி னின்று இறங்கட்டும் என்பார்கள். அவரோடுகூடச் சிலுவைகளில் அறை பட்டவர்களும் அவரை நிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

33. ஆறாம் மணி நேரமுதல் ஒன்ப தாம் மணி நேரம் வரைக்கும் பூமண் டலமெங்கும் அந்தகாரம் உண்டா யிற்று.

34. மேலும் ஒன்பதாம் மணி நேரத் தில் சேசுநாதர் மிகுந்த சத்தமாய்: எலோயி, எலோயி, லம்மா சபக்த்தானி என்று கூப்பிட்டார். அதற்கு என் சர்வே சுரா, என் சர்வேசுரா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர் என்றர்த்தமாம். (சங். 21:2; மத். 27:46.)

35. அப்பொழுது சூழ நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு: இதோ, எலியா ஸைக் கூப்பிடுகிறான் என்றார்கள் .

36. ஒருவன் ஓடிப்போய், கடற் காளானைக் காடியில் நிறையத் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து : பொறுங் கள், இவனை இறக்கிவிட எலியாஸ் வருவாரோ, பார்ப்போம் என்றான்.

37. சேசுநாதர் பேரொலியாய்க் கூப்பிட்டு உயிர்விட்டார்.

38. அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேல் துவக்கிக் கீழ்வரைக் கும் இரண்டாய்க் கிழிந்தது. |

39. அன்றியும் அவருக்கு எதிரே நின்ற செந்தூரியன் அவர் இப்படிக் கூப்பிட்டு உயிர்விட்டதைக் கண்டு: இந்த மனிதன் மெய்யாகவே சர்வே சுரனுடைய குமாரன்தான் என்றான்.

40. அப்பொழுது அநேக ஸ்திரீகள் தூரத்தினின்று பார்த்துக்கொண்டிருந் தார்கள். அவர்களுக்குள் மரிய மதலே னம்மாளும், சின்ன யாகப்பருக்கும், யோசேப்புக்கும் தாயான மரியம்மா ளும், சலோமையம்மாளும் இருந்தார் கள். (மத். 27:55, 56.)

41. இவர்கள் அவர் கலிலேயா நாட் டிலிருக்கும்போது அவரைப் பின்சென்று, அவருக்கு ஊழியஞ் செய்து வந்தவர்கள். இன்னும் அவருடன் ஜெருசலேமுக்கு ஏறிவந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடு இருந்தார்கள். (லூக். 8:2.)

42. ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்த நாளாயிருந்தபடியினாலே, சாயங்காலமானபோது, (லூக். 23:50.)

43. உயர்குல ஆலோசனைக்கார ரும், சர்வேசுரனுடைய இராச்சியத்துக்கு எதிர்பார்த்திருந்தவருமாகிய அரிமத்தி யாவூர் யோசேப்பென்பவர் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்து போய், சேசுநாதருடைய சரீரத்தைக் கேட்டார்.

44. அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்திருப்பாரோவென்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, செந்தூரியனை வர வழைத்து, அவர் இத்தனை சீக்கிரத் தில் மரித்தாரோவென்று அவனைக் கேட்டான்.

45. செந்தூரியன் வழியாக அதை அறிந்து கொண்டபின், சரீரத்தை யோ சேப்பென்பவருக்குக் கொடுத்தான்.

46. யோசேப்பென்பவர் ஓர் பரி வட்டச் சீலையை விலைக்குவாங்கி, அவ ரைச் (சிலுவையிலிருந்து) இறக்கி, பரி வட்டச் சீலையால் சுற்றிக் கற்பாறை யில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் அவரை வைத்து, கல்லறை வாசலில் ஓர் படலைக் கல்லைப் புரட்டி வைத்தார்.

47. மரியமதலேனம்மாளும், யோ சேப்பின் தாயாகிய மரியம்மாளும் அவர் வைக்கப்பட்ட இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.