இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

12. கிறீஸ்துநாதரை உட்கொள்ளப் போகிறவன் மகா ஜாக்கிரதையோடு ஆயத்தம் செய்யவேண்டியது.

1. (கிறீஸ்துநாதர்) நாம் பரிசுத்ததனத்தை நேசிக்கிறவர், சர்வ அர்ச்சியசிஷ்டதனத்தையும் தந்தருளுகிறவர்.

நாம் சுத்த இருதயத்தைத் தேடுகிறோம், அதுவே நாம் இளைப் பாறுமிடம். 

“நமக்கு ஒரு பெரிய அசனசாலையை நன்றாய்ச் சோடித்து ஆயத்தம் செய், நமது சீஷரோடு உன்னிடம் பாஸ்காவைக் கொண் டாடுவோம்.” 

நாம் உன்னிடம் வந்து, உன்னிடத்தில் தங்க உனக்கு மனதுண் டானால், உன் பழைய புளித்த மாவை (துர்க்குணத்தை) ஒழித்துவிடு, உன்னிருதய வாசஸ்தலத்தைச் சுத்திசெய்.

உலக கவலைகளையும், துர்க்குணங்களின் சகல மயக்கத்தையும் அகற்றிவிடு; “கூரைமேல் ஊர்க்குருவி தனித்து உட்கார்ந்திருப்பது போல” நீ தனித்து உட்கார்ந்து, “உன் பாவங்களைத் துக்க மனஸ் தாபத்தோடு நினைத்துக் கொள்.” 

ஏனெனில் எந்தச் சிநேகிதனும் தன்னை நேசிக்கும் நேசனுக்கு அதிக மேலானதும் அலங்காரமுள்ள இடத்தை தயார் செய்கிறான்; அவ்விதம் தன் அன்பனை ஏற்றுக் கொள்ளும் நேசம் விளங்குகின்றது.

2. ஆயினும் ஒரு வருஷ முழுமையும் வேறெதையும் சிந்திக் காமல் நீ ஆயத்தம் செய்துகொண்டே வந்தாலும் உன் சொந்தச் செயலின் பேறுபலனால் நீ தக்க ஆயத்தம் செய்யக் கூடுமானவனல்ல என்று அறிந்திரு. அதெப்படியெனில் ஒரு ஏழை, செல்வந்தனுடைய விருந்துக்கு அழைக்கப்பட்டால் அந்த உபகாரத்திற்கு நன்றி செலுத்த அவன் தன்னைத்தானே தாழ்த்தி நன்றியறிந்த தோத்திரம் செய்ய லாமே தவிர மற்றென்ன செய்யக்கூடும்? அவனைப் போலவே நீயும் நமது விருந்துக்கு வர உத்தரவளிக்கப்படுகிறாய்.

உன்னால் கூடிய ஆயத்தம் செய், சுறுசுறுப்பாய்ச் செய்; உன்னிடத்தில் எழுந்தருளி வரச் சித்தமாயிருக்கிற உன் தேவனாகிய அன்புள்ள ஆண்டவருடைய திருச்சரீரத்தை, வாடிக்கையைப் பற்றியல்ல, ஆனால் பயத்தோடும், வணக்கத்தோடும், நேசத் தோடும் உட்கொள். உன்னை அழைத்தவர் நாமே, உன்னிடத்தில் குறையானதைத் தீர்ப்பவரும் நாமே. நீ வந்து நம்மை உட்கொள்.

3. பக்தியின் வரத்தை நாம் உனக்குக் கொடுக்கும்போது உன் தேவனுக்கு நீ நன்றி செலுத்து; நீ பாத்திரவானாய் இருக்கிறாய் என்றல்ல, ஆனால் நாம் உன் மட்டில் இரக்கம் வைத்ததினால் அவ்வரத்தைப் பெற்றுக் கொண்டாய். இந்த வரம் உனக்கு இல்லாமல் போய் இருதய வறட்சியால் வருத்தப்படுகிறாய் என்றால், அவ்வுத்தமவரத்தில் ஒரு சொற்பப் பங்காவது, ஒரு துளியாவது நீ அடையப் பாத்திரவானாகும் வரையில் செபத்தில் நிலைத்திரு, பிரலாபி, நமது இருதய வாசலைத் தட்டு, ஓயவும் ஓயாதே.

நாம் உனக்கு அவசியம், நீ நமக்கு அவசியமில்லை. நீ நம்மை அர்ச்சிக்க வருகிறதில்லை, நாம் உன்னை அர்ச்சிக்கவும், அதிக உத்தம னாக்கவும் வருகிறோம். நம்மால் அர்ச்சிக்கப்படவும், நம்முடன் ஐக்கியமாக்கப்படவும் நவமான வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் மறுபடியும் சீர்திருத்தத்திற்குத் தூண்டப்படவும் நீ நம்மிடத்தில் வருகிறாய். இந்த வரப்பிரசாதத்தை அசட்டை செய் யாதே; ஆனால் சர்வ ஜாக்கிரதையோடு உன்னிருதயத்தை ஆயத்தப் படுத்தி உனக்குள்ளாக உன் நேசரை அழைத்துக் கொண்டு வா.

4. தேவநற்கருணை உட்கொள்வதற்கு முன் பக்திச் சுறுசுறுப்பு உன்னிடத்தில் உண்டாகும்படி செய்வது போதாது; ஆனால் திவ்விய நற்கருணை வாங்கின பின்பு, இந்தப் பக்திச் சுறுசுறுப்பு உன் மனதில் நிலை கொள்ளும்படி விழித்திரு. திவ்விய நற்கருணை வாங்குவதற்கு முன் ஆயத்தம் செய்வது எவ்வளவு அவசியமோ, திவ்விய நற்கருணை உட்கொண்டபின் பக்தி குறையாமலிருக்க விழித்திருப்பது அவ்வள வாக அவசரமே; ஏனெனில் அதிகமாய் மேலான வரப்பிரசாதங் களைப் பெறுவதற்கு இந்த ஞானக் கவலை நேர்த்தியான சாதனமா யிருக்கும். உள்ளபடியே தேவ நற்கருணை வாங்கின உடனே வெளி ஆறுதல்களை மிதமிஞ்சின ஆசையோடு தேடுகிறவன் மேற்படி வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளத் தன்னை நன்றாய் ஆயத்தப் படுத்துகிறதில்லை. ஆதலால் அதிக பேச்சு வைத்துக் கொள்ளாதே, தனித்திரு, உன் சர்வேசுரனைத் தியானித்து இன்பத்தை அனுபவி, ஏனெனில் எவனாலும் உன்னிடமிருந்து அகற்ற முடியாதவரை நீ வைத்துக் கொண்டிருக்கிறாய்.

நீ இனிமேல் உன்னிடத்தில் சீவியாமல் கவலையெல் லாம் அற்று நம்மிடத்தில் சீவிக்கும்படியாக, நமக்குத்தான் நீ உன்னை முழுதும் வசீகரம் செய்ய வேண்டியது.

யோசனை

புதுப் பாஸ்காவுக்கு ஆயத்தம் இரண்டு காரியங்களில் அடங்கி யிருக்கின்றது; அசனசாலையைச் சுத்தம் செய்யவும் வேண்டியது, அதை அலங்கரிக்கவும் வேண்டியது. அதாவது, சேசுநாதருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் தகுந்தபடி உட்கொள்வதற்கு, முதலில் கனமான பாவமில்லாதிருக்க வேண்டியது; அவ்வித பாவமிருந்தால் பாவசங்கீர்த்தனத்தின் தண்ணீரில் அது கழுவப்பட வேண்டியது; பிறகு தன்னைச் சர்வேசுரனுக்குப் பிரியமாக்கக் கூடுமான புண்ணிய முயற்சிகளில் பழக வேண்டியது. ஆண்டவருக்குப் பிரியப்பட்டு அவருடைய வரப்பிரசாதத்தை இழுக்கிறது என்னவென்றால் ஆழ்ந்த தாழ்ச்சி, தன்னை நிந்தித்தல், உயிருள்ள விசுவாசம், அவருடைய சித்தத் திற்குத் தன்னை முழுதும் கையளித்தல், பூலோகக் காரியங்களை விட்டொழித்தல், பரலோக பாக்கியத்தை நாடுதல், இவைதான் ஆண்டவ ருக்குப் பிரியமானவை. இன்னும் அவருக்கு முக்கியமாய்ப் பிரியமானதென்னவென்றால் தேவசிநேகம், பிறர்சிநேகம். “சிநேகம் பொறுமையாயிருக்கின்றது, தயவுள்ளதாயிருக்கின்றது; சிநேகம் காய்மகாரப்படுவதில்லை, இறுமாப்பாய் எதையும் செய்யாது, பெருமையைத் தேடாது, பேராசை கொள்வதில்லை, சுயலாபத்தை நாடுவதில்லை, ஆத்திரப்படுவதில்லை, பொல்லாங்கு நினைப் பதில்லை, அநியாயத்தில் சந்தோஷம் கொள்ளாது; அது சத்தியத்தில் ஆனந்தம் கொள்ளும், சகலத்தையும் சகிக்கும், சகலத்தையும் தாங்கும்.” மெய்யாகவே தெய்வீக சிநேகம், அப்போஸ்தலர் போதிப்பது போல, சகலத்திற்கும் மேலான புண்ணியம்: “நான் மனிதருடைய பாஷைகளையும் சம்மனசுக்களுடைய பாஷை களையும் பேசினாலும், தேவசிநேகம் என்னிடத்தில் இல்லாமல் போகுமேயானால், சப்திக்கும் வெண்கலம் போலும், தொனிக்கும் கைத்தாளம் போலும் ஆவேன்; நான் தீர்க்கதரிசன வரத்தையடைந் திருந்தாலும், சகல இரகசியங்களையும் சகல சாஸ்திரங்களையும் அறிந்திருந்தாலும், மலைகளைப் பெயர்த்து வைப்பதற்கான யாதொரு குறையற்ற விசுவாசம் எனக்கிருந்த போதிலும், சிநேகம் என்னிட மில்லாமல் போனால் நான் ஒன்றுமில்லை. எளியவர்களுக்கு அன்ன தானம் செய்வதற்காக என் ஆஸ்தியெல்லாம் நான் பகிர்ந்து கொடுத்த போதிலும், சுட்டெரிக்கப்படுவதற்கு நான் என் சரீரத்தைக் கையளித்த போதிலும், என்னிடத்தில் தேவசிநேகமில்லாமல் போகுமேயாகில், எனக்கு இந்தக் கிரியைகளால் பிரயோசனம் ஒன்றுமில்லை.” 

கலியாண விருந்துக்கு ஆசைப்படுகிற கிறீஸ்தவ ஆத்துமமே, புத்தியுள்ள கன்னிகைகளைக் கண்டுபாவி: “பத்தாவின் முன்பாகச் செல்லுவதற்கு, எண்ணெய் ஊற்றி உங்களுடைய விளக்குகளை ஏற்றுங்கள்;” ஏனெனில் எவர்களுடைய விளக்குகள் அணைந்து போயிருக்கின்றனவோ, அவர்கள் “மெய்யாகவே நாம் உங்களை அறிய மாட்டோம்” என்ற பயங்கரமான வாக்கியங்களைக் கேட்பார்கள்.