இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மாற்கு சுவிசேஷம் - அதிகாரம் 12

சேசுநாதர் கொலைபாதகரான திராட்சத் தோட்டத்தாரையும், மூலைக்கல்லையும் பற்றிச் சொல்லிய உவமைகளும், செசாருடையதைச் செசாருக்குச் செலுத்தவேண்டு மென்பதும், மரித்தோருடைய உத்தானமும், பிரதான கற்பனையும், பரிசேயருடைய பெருமை சிலாக்கியமும், விதவையின் காணிக்கையுமாவன.

1. பின்னும் அவர் உவமைகளாக அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினதாவது: ஒரு மனிதன் திராட்சத் தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து அதில் ஆலைத் தொட் டியையும் உண்டுபண்ணி, கோபுரமுங் கட்டி, அதைக் குடியானவர்கள் வசமாய்க் குத்தகைக்கு விட்டு, புறதேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். (இசை. 5:1; எரே. 2:21; மத். 21:33; லூக். 20:9.)

2. மேலும் அந்தக் குடியானவர்களிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் பாகம் வாங்கிவரும்படிக்குப் பருவகாலத்திலே ஓர் ஊழியனை அவர்களிடம் அனுப்பினான்.

3. அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பி விட்டார்கள்.

4. பின்பு வேறொரு ஊழியனை அவர்களிடத்தில் அனுப்பினான். அவனை அவர்கள் தலையிலே காயப்படுத்தி நிந்தை அவமானம் பண்ணினார்கள்.

5. திரும்பவும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினவிடத்தில், அவர்கள் சிலரை அடித்தும், சிலரைக் கொன்றும் போட்டார்கள்.

6. இப்படியாகையில், அவனுக்கு மிகவும் பிரியமான ஏக குமாரன் இன்னும் இருந்தான். அவர்கள் என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, கடைசியாக அவனையும் அவர்களிடத்தில் அனுப்பினான்.

7. குடியானவர்களோ: இவனே சுதந்தரவாளி, வாருங்கள், இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சுதந்தரம் நம்முடையதாகுமென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு,

8. அவனைப் பிடித்துக் கொலை செய்து, திராட்சத் தோட்டத்துக்குப் புறம்பே எறிந்துவிட்டார்கள்.

9. ஆகையால் திராட்சத் தோட் டத்து எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து, அந்தக் குடியானவர்களைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பானல்லோ !

10-11. வீடு கட்டுகிறவர்கள் தள்ளி விட்ட இந்தக் கல்லே மூலைக்குத் தலைமையான கல்லாயிற்று. இது ஆண்டவரால் ஆனது; எங்கள் கண்களுக்கும் ஆச்சரியமாயிருக்கிறதென்று வேதத் தில் எழுதியிருக்கிறதை நீங்கள் வாசித்த தில்லையோ என்றார். (சங். 117:22; இசை . 28:16; மத். 21:42; அப். 4:11; உரோ . 9:33; 1 இரா . 2:7, 8.)

* 10-ம் வசனத்துக்கு மத்தேயு 21-ம் அதி. 42-ம் வசனத்தின் வியாக்கியானம் காண்க.

12. இந்த உவமையைத் தங்களைக் குறித்தே சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்கும்படி வகை தேடினார்கள். ஆயினும் ஜனங்களுக்கு அஞ்சி, அவரைவிட்டுப் போய்விட்டார் கள்.

13. பின்னும் அவர்கள் அவரைப் பேச்சில் பிடிக்கும்படி, பரிசேயரிலும் எரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள். (மத். 22:15; லூக். 20:20.)

14. அவர்கள் வந்து: போதகரே! நீர் சத்தியவந்தரென்றும், எவன்மட்டி லும் தாக்ஷண்யமில்லாதவரென்றும் அறிந்திருக்கிறோம். ஏனெனில் நீர் மனிதருடைய முகத்தைப் பாராமல் சர்வேசுரனுடைய மார்க்கத்தை உள்ள படியே போதிக்கிறீர். செசார் இரா யனுக்கு வரி செலுத்தலாமோ அல் லது செலுத்தாதிருப்போமோ என்று அவரை வினாவினார்கள்.

15. அவர்களுடைய கபடத்தை அவர் அறிந்து: நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? தெனியரென்கிற நாணயத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்; நான் பார்க்கட்டுமென்று அவர்களிடத்தில் சொன்னார்.

* 15. தெனியர் என்பது யூதர்களில் ஒவ்வொருவரும் வருஷந்தோறும் உரோமாபுரி இராயனுக்குச் செலுத்தவேண்டிய ஆள்வரிப் பணமாம். இதைத்தான் அர்ச். மத். 22-ம் அதி. 10-ம் வசனத்தில் வரிப்பணமென்று சொல்லியிருக்கிறது.

16. அப்படியே அவர்கள் அதைக் கொண்டுவந்து கொடுக்க, அவர்: இந்த ரூபமும் மேலெழுத்தும் யாருடைய தென்று அவர்களைக் கேட்டார். அதற்கு அவர்கள்: செசாருடையது என்றார்கள்.

17. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தியுத்தரமாக: அப்படியானால், செசாருடையதைச் செசாருக்கும், சர்வேசுரனுடையதைச் சர்வேசுரனுக் கும் செலுத்துங்கள் என்றார். அவர் களோ அவர்பேரில் ஆச்சரியப்பட் டார்கள். (உரோ . 13:7.)

18. அதன்பின், மாம்ச உத்தான மில்லையென்று சாதிக்கிற சது சேயர் அவரிடத்தில் வந்து, அவரை வினாவிச் சொன்ன தாவது: (மத். 22:23; லூக். 20:27.)

19. போதகரே! ஒருவனுடைய சகோதரன் புத்திர சந்தானமில்லா மல், தன் மனைவியை விட்டு இறந்து போனால், அவன் சகோதரன் அவ னுடைய மனைவியை விவாகம்பண் ணித் தன் சகோதரனுக்குப் புத்திர சந்தானமுண்டாக்க வேண்டுமென்று மோயீசன் எங்களுக்கு எழுதிவைத் திருக்கிறார். (உபாக. 25:5.)

20. அப்படியிருக்க, சகோதரர் ஏழு பேரிருந்தார்கள். மூத்தவன் ஒரு பெண் ணை விவாகம்பண்ணி, புத்திரசந்தான மில்லாமல் இறந்துபோனான்.

21. இரண்டாஞ் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தான மில்லாமல் இறந்துபோனான். மூன்றஞ் சகோதரனும் அப்படியேயானான்.

22. ஏழுபேரும் இந்தப்பிரகாரமாய் அவளை விவாகம்பண்ணிச் சந்தான மில்லாமல் இறந்துபோனார்கள். எல்லா ருக்குங் கடைசியாய் அந்த ஸ்திரீயும் மரணமானாள்.

23. ஆதலால், உத்தான நாளில் அவர்கள் உயிர்த்து எழுந்திருக்கும் போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந் தார்களே என்றார்கள்.

24. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தியுத்தாரமாக: நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவ வல்லைைம யையும் அறியாமலல்லோ தவறிப் போகிறீர்கள்?

25. ஏனெனில் மரித்தோரினின்று உயிர்த்த பின்பு, பெண் கொள்வது மில்லை, பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் பரலோகத்திலே தேவ தூதர்களைப் போலிருப்பார்கள்.

26. மேலும் மரித்தோர் உயிர்ப்ப தைப்பற்றி: நாம் அபிரகாமின் தேவ னும், ஈசாக்கின் தேவனும், யாக்கோ பின் தேவனுமாயிருக்கிறோமென்று சர்வேசுரன் முட்செடியிலிருந்து மோயீசனுக்கு எவ்விதம் திருவுளம் பற்றினாரென்பதை நீங்கள் அவ ருடைய ஆகமத்தில் வாசித்ததில் லையோ ? (யாத். 3:6; மத். 22:32.)

27. அவர் மரித்தோருக்கல்ல, ஜீவிய ருக்கே தேவனாயிருக்கிறார். ஆகையால் நீங்கள் மிகவும் தவறிப்போகிறீர்கள் என்று திருவுளம்பற்றினார்.

28. அப்பொழுது, வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகி றதைக் கேட்டு, சேசுநாதர் அவர்க ளுக்கு நன்றாய்ப் பதில் சொன்னா ரென்று கண்டு, அவர் கிட்ட வந்து : எல்லாக் கற்பனைகளிலும் முதன்மை யான கற்பனை எது வென்று கேட் டான். (மத். 22:35.)

29. சேசுநாதர் அவனுக்குப் பிரத் தியுத்தாரமாக: எல்லாக் கற்பனைகளி லும் முதன்மையான கற்பனை எது வென்றால்: இஸ்ராயேலே கேள், உன் சர்வேசுரனாகிய ஆண்டவர் ஒருவரே சர்வேசுரன். (உபாக. 6:4, 5.)

30. உன் சர்வேசுரனாகிய ஆண்ட வரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோ டும் சிநேகிப்பாயாக; இதுவே முதன் மையான கற்பனை.

31. இதற்குச் சரியொத்த இரண் டாம் கற்பனை ஏதென்றால்: உன்னைப் போல உன் பிறனையுஞ் சிநேகிப்பா யாக, என்பதாம். இவைகளிலும் பெரி தான வேறே கற்பனை இல்லை என்றார். (லேவி. 19:18; மத். 22:39; உரோ . 13:9; கலாத். 5:14; இயா . 2:8.)

32. அப்பொழுது வேதபாரகன் அவரை நோக்கி: சரிதான் போதகரே! ஒரே சர்வேசுரன் உண்டென்றும், அவரல்லாதே வேறே சர்வேசுரன் இல்லையென்றும்,

33. அவரை முழு இருதயத்தோ டும், முழு புத்தியோடும், முழு ஆத் துமத்தோடும், முழு சத்துவத்தோடும் சிநேகிப்பதும், தன்னைப்போலத் தன் பிறனைச் சிநேகிப்பதும் எல்லாத் தகனபலிகளிலும் மற்றப் பலிகளிலும் மேன்மையானதென்றும் நீர் சத்தியத் தின்படியே சொன்னீர் என்றான்.

34. அவன் ஞானமாய்ப் பதில் உரைத்தானென்று சேசுநாதர் கண்டு: நீ சர்வேசுரனுடைய இராச்சியத்துக் குத் தூரமானவனல்லவென்று அவ னுக்குத் திருவுளம்பற்றினார். அதன் பின், ஒருவரும் அவரைக் கேள்வி கேட்கத் துணியவில்லை.

35. பின்பு சேசுநாதர் தேவால யத்திலே உபதேசம் பண்ணும் போது வசனித்ததாவது: கிறீஸ்துநாதரைத் தாவீதின் குமாரனென்று வேதபார கர் சொல்லுவது எப்படி?

36. தாவீதுதாமே இஸ்பிரீத்துசாந்து வினால் ஏவப்பட்டு: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்படியாகப் போடுமட்டும், நீர் என் வலது பாரிசத் தில் உட்கார்ந்திருமென்று ஆண்டவர் என் ஆண்டவருக்குச் சொன்னார் என்று சொல்லுகிறாரே. (சங். 109:1; மத். 22:44; லூக். 20:42.)

37. ஆகையால் தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவருக்கு அவர் குமாரனாயிருப்ப தெப்படி என்று திருவுளம்பற்றினார். திரளான ஜனங்கள் அவருடைய வாக் கியத்தை விருப்பத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

38. மீளவும் அவர் போதிக்கையில் அவர்களுக்குத் திருவுளம்பற்றினதா வது: நீங்கள் வேதபாரகர்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீடிய அங்கிகளோடு உலாவவும், தெருக் களில் வந்திக்கப்படவும் விரும்புகி றார்கள். (மத். 23:6; லூக். 11:43; 20:46.)

39. ஜெப ஆலயங்களில் முதல் ஆசனங்களில் உட்காரவும், விருந்து களில் முதன்மையான இடங்களில் ருக்கவும் விரும்பி,

40. நெடும் ஜெபம் பண்ணுகிறதாகப் பாராட்டி, விதவைகளுடைய வீடுகளைப் பட்சிக்கிறார்கள்; அவர்கள் அதிக கண்டிப்பான தீர்ப்பை அடைவார்கள் என்றார். (மத். 23:6; லூக். 11:43; 20:46.)

41. பின்பு சேசுநாதர் காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் அதில் காணிக்கை போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஐசுவரியமுள்ள அநேகர் மிகுதியாய்ப் போட்டார்கள். (லூக். 21:1-4.)

42, ஏழையான ஓர் விதவை வந்து, ஒரு காசு பெறுமான இரண்டு சல்லி யைப் போட்டாள்.

43. அப்பொழுது அவர் தம்மு டைய சீஷர்களை அழைத்து அவர்க ளுக்குச் சொன்னதாவது: காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போட்ட எல்லா ரையும்விட, இந்த எழைக் கைம்பெண் அதிகமாய்ப் போட்டாளென்று மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;

44. எப்படியெனில், அவர்களெல்லாரும் தங்கள் நிறைவாகரத்திலிருந்து எடுத்துப் போட்டார்கள். இவளோ, தன் வறுமையில் தன் ஜீவனத்துக்குண்டா யிருந்ததெல்லாவற்றையும் போட்டாளென்று திருவுளம்பற்றினார்.