இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மாற்கு சுவிசேஷம் - அதிகாரம் 11

கிறீஸ்துநாதர் ஓட்டோலகமாய் ஜெருசலேம் பட்டணத்தில் பிரவேசித்ததும், அத்திமரத்தைச் சபித்ததும், தேவாலயத்தினின்று வியாபாரிகளைத் துரத்தினதுமாகிய விசேஷங்கள்.

1. அவர்கள் ஜெருசலேம் நகருக் கும், ஒலிவ மலையருகிலுள்ள பெத்தானியா ஊருக்கும் சமீபமாய் வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இருவரை அனுப்பி : (மத். 21:1; லூக். 19:29; அரு. 12:12-15)

2. அவர்களுக்குச் சொன்னதாவது: உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத் துக்குப் போங்கள். நீங்கள் அங்கே பிர வேசித்தவுடனே, இன்னும் ஒருவனும் ஏறியிராத ஒரு வேசரிக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.

3. நீங்கள் என்ன செய்கிறீர்களென்று யாதொருவன் உங்களிடத்தில் கேட்டால், இது ஆண்டவருக்குத் தேவையாயிருக்கிறது என்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடம் அனுப்பி விடுவான் என்றார்.

4. ஆதலால் அவர்கள் போய், இரு வழிச்சந்தியில் வெளியே ஒரு வாசலுக்கு முன் கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.

5. அங்கே நின்றவர்களில் சிலர் அவர்களை நோக்கி: நீங்கள் இந்தக் குட்டியை அவிழ்த்து, என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

6. சேசுநாதர் தங்களுக்குக் கற்பித் தபடியே அவர்கள் பதில் சொல்லவே, அதைக் கொண்டு போகும்படி விட் டார்கள்.

7. அவர்கள் அந்தக் குட்டியை சேசு நாதரிடத்தில் கொண்டுவந்து, அதன் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதன்மேல் ஏறி உட் கார்ந்தார். (அரு. 12:14.)

8. அப்போது அநேகர் தங்கள் வஸ்தி ரங்களை வழியில் விரித்தார்கள், வேறு சிலர் மரங்களின் கிளைகளை ஒடித்து வழியிலே பரப்பினார்கள். .

9. முன்னால் போகிறவர்களும் பின்னால் வருகிறவர்களும் ஆர்ப்பரித்து: ஓசன்னா !

10. ஆண்டவருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப் பட்டவர். எங்கள் பிதாவாகிய தாவீதின் இராச்சியம் வருகிறது; அது ஆசீர்வதிக்கப்படுவதாக, உன்னதத்திலே ஓசன்னா! என்றார்கள். (மத். 21:9; லூக்.19:38; சங். 117:26.)

11. அவர் ஜெருசலேம் நகரில் பிர வேசித்து, தேவாலயத்தில் சேர்ந்து, எல்லாவற்றையுஞ் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவ ரோடுங்கூடப் புறப்பட்டுப் பெத்தா னியாவுக்குப் போனார். (மத். 21:10-17.)

12. மறுநாள் அவர்கள் பெத்தா னியாவிலிருந்து புறப்பட்டு வருகை யில், அவர் பசியாயிருந்தார்.

13. அப்பொழுது, இலைகளுள்ள ஓர் அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதிலே ஒருவேளை எதாகிலும் அகப் படுமாவென்று பார்க்கும்படி வந்தார். அவர் அதன்கிட்ட வந்தபோது இலை களைத் தவிர அதில் வேறொன்றையுங் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக் காலமல்ல. (மத். 21:19.)

14. அப்போது சேசுநாதர் அந்த மரத்தை நோக்கி: இனி ஒருபோதும் எவனும் உன்னிடத்தில் கனிகளைப் புசியாதிருப்பானாக என்றார். இதை அவருடைய சீஷர்கள் கேட்டுக்கொண் டிருந்தார்கள். (லூக். 13:6-9; மத். 21:19.)

* 14-ம் வசனத்துக்கு மத். 21-ம் அதி. 19-ம் வசனத்தின் வியாக்கியானம் காண்க.

15. பிற்பாடு அவர்கள் ஜெருசலேம் நகருக்கு வந்தார்கள். சேசுநாதர் தேவா லயத்தில் பிரவேசித்து, தேவாலயத்தில் விற்கிறவர்களையும், வாங்குகிறவர்க ளையும் துரத்தத் துவக்கினார். காசுக் காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து , (மத். 21:12-16; லூக். 19:45-47.)

16. ஒருவனும் தேவாலயத்தின் வழி யாக யாதொரு பண்டத்தையும் கொண்டு போக விடாமல்,

17. என்னுடைய வீடு சகல ஜாதி ஜனங்களுக்கும் ஜெப வீடென்று சொல்லப்படும் என்று எழுதியிருக் கிறதல்லோ ? நீங்களோ அதைக் கள்ள ருடைய குகையாக்கினீர்கள் என்று சொல்லி அவர்களுக்குப் பிரசங்கித் தார். (இசை . 56:7; எரே. 7:11.)

18. அதைக்கேட்டு, பிரதான ஆசா ரியரும், வேதபாரகரும் அவரை எப்படிச் சங்கரிக்கலாமென்று வகை தேடிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் ஜனங்க ளெல்லாரும் அவருடைய போதகத் தின்மேல் ஆச்சரியப்பட்டிருந்ததினால், அவருக்கு அஞ்சியிருந்தார்கள்.

19. சாயரட்சையானபோது அவர் பட்டணத்தைவிட்டு வெளியே புறப் பட்டுப் போனார்.

20. காலையில் அவர்கள் அவ்வழி யாய் வரும் போது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருப்பதைக் கண்டார்கள்.

21. அப்போது இராயப்பர் நினைவு கூர்ந்து, அவரை நோக்கி: சுவாமி! இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப் போயிற்று என்றார்.

22. சேசுநாதர் பிரத்தியுத்தாரமாக அவர்களுக்குத் திருவுளம்பற்றினதாவது: சர்வேசுரன்பேரில் விசுவாசமாயிருங்கள். (மத். 21:21.)

23. எவனாகிலும் இந்த மலையை நோக்கி: நீ பெயர்ந்து சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவென்று சொல்லி, தான் சொன்னபடியே ஆகுமென்று தன் இருத யத்தில் தத்தளியாமல் விசுவசித்தால், அவனுக்கு அநுகூலமாகுமென்று மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

24. ஆதலால் நீங்கள் ஜெபம் பண் ணும் போது கேட்கிறதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்களென்று விசுவசி யுங்கள். அவைகள் உங்களுக்குச் சம்ப விக்குமென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். (மத். 7:7; 21:22; அரு. 14:13.)

25. நீங்கள் ஜெபம்பண்ண நிற்கும் போது, யாதொருவன்மேல் உங்களுக்கு ஏதேனும் மனத்தாங்கலிருந்தால், பரலோ கத்திலிருக்கிற உங்கள் பிதாவானவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, நீங்களும் அவனுக்கு மன்னியுங்கள்.(மத். 6:14; 18:35; லூக்.11:4)

26. நீங்கள் மன்னிக்காவிட்டால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன் னிக்கமாட்டார் என்றார்.

27. பின்பு அவர்கள் மறுபடியும் ஜெருசலேம் நகருக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்தில் உலாவிக்கொண்டிருக் கையிலே, பிரதான ஆசாரியரும், வேத பாரகரும், மூப்பரும் அவரிடத்தில் வந்து:

28. நீர் எந்த அதிகாரத்தைக் கொண்டு இவைகளைச் செய்கிறீர்? நீர் இவைகளைச் செய்யும்படியாக இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யாரென்று அவரைக் கேட்டார்கள். (லூக். 20:2; மத். 21:23.)

29. சேசுநாதர் அவர்களுக்கு மாறுத் தாரமாக: நானும் உங்களை ஒரு வார்த்தை கேட்பேன். எனக்கு மறு மொழி சொல்லுங்கள். அப்போது நானும் எந்த அதிகாரத்தைக் கொண்டு இவைகளைக் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.

30. அருளப்பர் கொடுத்த ஞானஸ்நானம் மோட்சத்திலிருந்து உண்டா னதோ, மனிதர்களால் உண்டானதோ? எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார்.

31. அப்பொழுது அவர்கள் தங்களுக்குள்ளே ஆலோசித்து: மோட்சத்திலிருந்து வந்தது என்போமாகில், நீங்கள், ஏன் அதை விசுவசியாமற் போனீர்கள் என்பார்.

32. மனிதர்களால் உண்டானது என்போமாகில், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம். ஏனெனில் எல்லாரும் அருளப்பரை மெய்யாகவே தீர்க்க தரிசியென்று எண்ணியிருந்தார்களே என்று யோசித்து,

33. சேசுநாதரை நோக்கி: அது எங்களுக்குத் தெரியாதென்று பதில் சொன்னார்கள். அப்பொழுது சேசுநாதர்: நானும் இன்ன அதிகாரத்தைக்கொண்டு இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.