இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மாற்கு சுவிசேஷம் - அதிகாரம் 10

சேசுநாதர் விவாகத்தைப் பிரிக்கலாகாதென்றதும், சிறு குழந்தைகளை ஆசீர்வதித்ததும், ஆஸ்திக்காரர் இரட்சண்ணியமடைவது அரிதென்று காண்பித்ததும், தம்முடைய பாடுகளை முன்னறிவித்ததும், பார்திமே யென்ற குருடனைச் சொஸ்தமாக்கினதும்.

1. பின்பு அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தான் நதிக்கப்பால் யூதேயா தேசத்தின் எல்லைகளில் வந்தார். அங்கே மறுபடியும் ஜனங்கள் அவரிடத்தில் கூட்டமாய் வரவே, அவர் தம்முடைய வழக்கத்தின் படியே மறுபடியும் அவர்களுக்குப் போதித்தார். (மத். 19:1.)

2. அப்போது பரிசேயர், அவரைச் சோதிக்கும்படியாக அவரிடத்தில் வந்து: புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிடலாமா என்று கேட்டார்கள்.

3. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தி யுத்தாரமாக: மோயீசன் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்னவென்றார்.

4. அதற்கு அவர்கள்: விலக்குச் சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோயீசன் உத் தரவு கொடுத்திருக்கிறார் என்றார்கள். (உபாக. 24:1-4.)

5. சேசுநாதர் அவர்களுக்குப் பிரத் தியுத்தாரமாகச் சொன்னதாவது: உங் கள் இருதயக் கடினத்தைப்பற்றியே, அவர் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதித்தந்தார்.

6. ஆகிலும் சிருஷ்டிப்பின் துவக் கத்தில் சர்வேசுரன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். (ஆதி. 1:27.)

7. அதனிமித்தம் மனுஷனானவன் தன் தந்தை தாயைவிட்டுத் தன் மனைவி யோடு சார்ந்திருப்பான்; (ஆதி. 2:24; மத். 19:5; 1 கொரி. 7:10; எபே. 5:31.)

8. இருவரும் ஒரே மாம்சமாயிருப் பார்கள்; ஆகையால் அவர்கள் இருவ ரல்லவே, ஒரே மாம்சமாயிருக்கிறார் கள். (1 கொரி. 6:16; ஆதி. 2:24.)

9. ஆனதால் சர்வேசுரன் இணைத் ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்றார்.

10. பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் மறுபடியும் இதைக்குறித்து அவரை வினாவினார்கள்.

11. அப்பொழுது அவர் அவர்களுக் குத் திருவுளம்பற்றினதாவது: யாதொ ருவன் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகஞ் செய்தால், அவளுக்கு விரோதமாய் விபசாரஞ் செய்கிறான். (மத். 5:32.)

12. அத்தன்மையே, மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொ ருவனை விவாகஞ் செய்தால், விபசாரி யாகிறாள் என்றார். (1 கொரி. 7:10.)

* 12-ம் வசனத்துக்கு மத். 19-ம் அதி. 9-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.

13. அத்தருணத்தில் பாலர்களை அவர் தொடும்படியாக அவர்களை அவ ரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்களோ கொண்டு வந்தவர்களை அதட்டினார்கள். (மத். 19:13-15.)

14. சேசுநாதர் இதைக்கண்டு விசனப்பட்டு, அவர்களுக்குச் சொன்னதாவது: பாலர்களை நம்மிடத்தில் வர விடுங்கள், அவர்களைத் தடுக்காதேயுங்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் இப்படிப்பட்டவர்களு டையதாயிருக்கிறது.

15. சிறுபிள்ளையைப்போல் சர்வேசுரனுடைய இராச்சியத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும் அதில் பிரவேசியானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

16. அவர்களை அரவணைத்து அவர்கள்மேல் தமது கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். (லூக். 18:15-17.)

17. பின்னும் அவர் பயணப்பட வெளியே வந்த போது, ஒருவன் ஓடி வந்து, அவருக்கு முன்பாக முழந்தா எட்டு: நல்ல குருவே, நான் நித்திய ஜீவியத்தை அடையும் பொருட்டு என்ன செய்யவேண்டும் என்று கேட் டான். (மத். 19:16; லூக். 18:18.)

18. சேசுநாதர் அவனை நோக்கி: நீ என்னை நல்லவனென்று சொல்லு வானேன்? சர்வேசுரன் ஒருவரைத் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.

19. விபசாரம் செய்யாதிருப்பா யாக; கொலை செய்யாதிருப்பாயாக; களவு செய்யாதிருப்பாயாக; பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; வஞ் சனை செய்யாதிருப்பாயாக; உன் பிதா வையும் மாதாவையும் சங்கித்திருப்பா யாக என்னுங் கற்பனைகளை அறிந் திருக்கிறாயே என்றார். (யாத். 20:12-16.)

20. அதற்கு அவன் மறுமொழியாக: குருவே, இவையெல்லாம் என்சிறுபந் துவக்கி அநுசரித்து வந்திருக்கிறேன் என்றான்.

21. அப்பொழுது சேசுநாதர் அவனை நோக்கிப்பார்த்து, அவன் மேல் அன்புவைத்து: உனக்கு ஒன்று குறைவாயிருக்கின்றது; நீ போய் உனக் குண்டான யாவற்றையும் விற்று, தரித் திரருக்குக்கொடு; மோட்சத்தில் உனக் குப் பொக்கிஷமுண்டாயிருக்கும்; பின் னும் வந்து என்னைப் பின்செல்லென்று அவனுக்குத் திருவுளம்பற்றினார்.

22. அவனோ, இந்த வாக்கியத்தால் துக்கமடைந்து, கிலேசத்தோடு போய் விட்டான். ஏனெனில் மிகுந்த சொத் துள்ளவனாயிருந்தான்.

23. ஆதலால் சேசுநாதர் சுற்றிலும் பார்த்து: பணக்காரர் சர்வேசுரனு டைய இராச்சியத்தில் பிரவேசிப்பது எவ்வளவோ அருமையாயிருக்கிற தென்று தம்முடைய சீஷர்களுக்குத் திருவுளம்பற்றினார்.

24. சீஷர்கள் அவருடைய வார்த் தைகளைக்குறித்து அதிசயப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சேசுநாதர் மறு படியும் அவர்களை நோக்கி: பிள்ளை களே, பணத்தின்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் சர்வேசுரனு டைய இராச்சியத்தில் பிரவேசிப்பது எவ்வளவோ அருமையாயிருக்கிறது.

25. ஆஸ்திக்காரன் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதுக்குள் நுழைந்து போகிறது அதிக எளிதாம் என்றார்.

* 25-ம் வசனத்துக்கு மத். 19-ம் அதி. 24-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க. 

26. அவர்கள் இன்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சணியமடையக்கூடுமென்று தங்க ளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

27. சேசுநாதர் அவர்களை நோக்கி: இது மனிதர்களால் கூடாததாயினும், சர்வேசுரனால் கூடாததல்ல; ஏனெனில் சர்வேசுரனால் சகலமும் கூடுமென்று திருவுளம்பற்றினார்.

28. அப்போது இராயப்பர்: இதோ நாங்கள் எல்லாவற்றையுந் துறந்து விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்று சொல்லத்தொடங்கினார். (மத். 19:27; லூக். 18:28-30.)

29. அதற்கு சேசுநாதர் பிரத்தியுத் தாரமாக: என்னிமித்தமாகவும், சுவி சேஷத்தினிமித்தமாகவும், வீட்டையா வது, சகோதரர், சகோதரிகளையா வது, தந்தை தாயையாவது, பிள்ளை களையாவது, காணிகளையாவது விட்டு விட்ட எவனும்,

30. இப்பொழுது இம்மையிலே துன்பங்களோடு நூறத்தனையாய் வீடுகளையும், சகோதரரையும், சகோதரி களையும், தாய்மார்களையும், பிள்ளை களையும், நிலங்களையும் பெற்றுக் கொள்வதுமன்றி, மறுமையிலே நித்திய ஜீவியத்தையும் அடையாதிருப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* 30. சேசுநாதரைப் பின்செல்லும்படி இவ்வுலக நன்மைகளை விட்டுவிடுகிறவர்கள் அவைகளுக்குப் பதிலாய் ஞான நன்மைகளைக் கைக்கொள்ளுவார்கள். அவைகளால் இவ்வுலகத்திலே முதலாய் உண்டாகும் மனச்சமாதானமும் ஞான சந்தோஷமும், தாங்கள் துறந்துவிட்ட இலெளகீக நன்மைகளிலும் நூறுமடங்கு மாத்திரமல்ல, இன் னும் அதிகமான பெரிய நன்மைகளாகவேயிருக்கின்றன. மேலும் சேசுநாதர்சுவாமி யைப்பற்றியும், மோட்ச இராச்சியத்தைப்பற்றியும், தங்கள் தாய் தகப்பன், சகோதரர், வீடுவாசல், காணி பூமிகளை விட்டுவிடுகிற சந்நியாசிகளுக்கு நூறு பங்கு அதிக பட்ச முள்ள சிரேஷ்டர்களும், மற்றுஞ் சந்நியாசிகளும், தாய் தந்தைகள் சகோதரரிடமா யிருப்பதுமல்லாமல், அவர்கள் போகுமிடமெல்லாம் அவர்களுக்கு வீடுவாசல் காணி பூமியாகிற மடங்களும் நிலங்களும் அனுபவிக்கக் கிடைக்குமென்று அர்த்தமாம்.

31. ஆகிலும் முதலானவர்கள் அநேகர் கடைசியானவர்களாகவும், கடைசியான வர்கள் அநேகர் முதலானவர்களாகவும் இருப்பார்கள் என்றார். (மத். 19:30; 20:16.)

* 31-ம் வசனத்துக்கு மத். 20-ம் அதி. 16-ம் வசனத்தின் வியாக்கியானம் காண்க.

32. பின்னும் அவர்கள் ஜெருச லேமை நோக்கி பிரயாணமாய்ப் போகையில், சேசுநாதர் அவர்களுக்கு முன்னே நடந்து போக, அவர்கள் பிரமித்துப் பயத்தோடு அவர் பின்னே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் மறுபடியும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப் போகிறவைகளை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.

33. இதோ, ஜெருசலேம் நகருக்குப் போகிறோம்; அங்கே மனுமகன் பிரதான ஆசாரியர்களுக்கும், வேதபாரகர்களுக் கும், மூப்பர்களுக்கும் கையளிக்கப்படு வார்; அவர்கள் அவரை மரணத் தீர்வை யிட்டு, புறஜாதியாரிடத்தில் அவரை ஒப்புக்கொடுப்பார்கள். (மத். 20:17-19.)

34. அவர்கள் அவரை நகைத்து, அவர்மேல் துப்பி, அவரைச் சாட்டை யால் அடித்து, அவரைக் கொலைசெய் வார்கள், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்திருப்பார் என்றார்.

35. அப்பால் செபதேயுவின் குமார ராகிய இயாகப்பரும், அருளப்பரும் அவரண்டையில் வந்து: சுவாமி, நாங்கள் உம்மை எதெதைக் கேட்டாலும், அதை நீர் எங்களுக்குச் செய்தருளவேண்டு மென்று விரும்புகிறோம் என்றார்கள். (மத். 20:20.)

36. அதற்கு அவர்: நான் உங்க ளுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்க,

37. அவர்கள்: உமது மகிமையிலே எங்களில் ஒருவன் உமது வலது பாரி சத்திலும், ஒருவன் உமது இடது பாரி சத்திலுமாக உட்காரும்படி எங்களுக் குச் செய்தருளும் என்றார்கள்.

38. சேசுநாதர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறது இன்னதென்று அறி யீர்கள். நான் பானஞ்செய்யும் பாத்திரத் தைப் பானஞ்செய்யவும், நான் பெறுகிற ஸ்நானத்தைப் பெறவும், உங்களால் கூடுமோ என்றார். (லூக். 12:50.)

39. அதற்கு அவர்கள்: எங்களால் கூடும் என்றார்கள்; அப்போது சேசு நாதர் அவர்களுக்குத் திருவுளம்பற்றின தாவது: நான் பானஞ்செய்யும் பாத் திரத்தை நீங்களும் பானஞ்செய்வீர்க ளென்பதும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்களென்பதும் மெய் தான்.

40. ஆயினும், என்னுடைய வலது பாரிசத்திலாவது, இடதுபாரிசத்திலாவது உட்காரும்படி உங்களுக்கு அருளுவது என் காரியமல்ல. எவர்களுக்கு ஆயத் தம்பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர் களுக்கே அது கிடைக்கும் என்று திரு வுளம்பற்றினார்.

41. மற்றப் பத்துப்பேர்களும் அதைக் கேட்டு, இயாகப்பர்மேலும், அருளப்பர் மேலும் எரிச்சல் கொள்ளத் துவக்கி னார்கள்.

42. அப்பொழுது சேசுநாதர் அவர் களை வரவழைத்து, அவர்களுக்கு வச் னித்ததாவது: புறஜாதியாருக்குள் அதிபதி களாகக் காணப்படுகிறவர்கள் அவர் களைக் காறுமாறு பண்ணுகிறார்களென் றும், அவர்களுக்குள்ளே பெரியவர்கள் அவர்கள்மேல் அதிகாரஞ் செலுத்துகிறார் களென்றும் அறிவீர்களே. (லூக். 22:25.)

43. உங்களுக்குள் அப்படியல்லவே. ஆனால் உங்களுக்குள்ளே எவனாவது அதிக பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்கார னாயிருப்பானாக.

44. உங்களுக்குள்ளே எவனாவது தலைவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியனாயிருப்பானாக.

45. ஏனெனில் மனுமகன் பணிவிடை கொள்வதற்கு வராமல், பணிவிடை செய்யவும், அநேகருடைய மீட்பாகத் தம்முடைய உயிரைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

46. பின்னும் அவர்கள் ஜெரிக்கோ நகருக்கு வந்தார்கள். அவரும், அவரு டைய சீஷர்களும், திரளான ஜனங்களும் ஜெரிக்கோ நகரத்தைவிட்டு புறப்பட்டுப் போகையில், திமேயுவின் குமாரனாகிய பார்திமே என்னும் ஒரு குருடன் வழிய ருகே உட்கார்ந்து பிச்சை வாங்கிக் கொண்டிருந்தான். (மத். 20:29; லூக். 18:35.)

47. அவன், நசரேனுவாகிய சேசுநாதர் அவர்தான் என்று கேள்விப்பட்டு: சேசுவே! தாவீதின் குமாரனே, என் பேரில் இரக்கமாயிருமென்று கூப்பிடத் துவக்கினான்.

48. அவன் பேசாதிருக்கும்படி அநே கர் அவனை அதட்டினார்கள். ஆனால் அவன்: தாவீதின் குமாரனே! என் பேரில் இரக்கமாயிரும் என்று அதிகமதிகமாய்க் கூப்பிட்டான். 49. ஆகையால் சேசுநாதர் நின்று, அவனை அழைத்துவரக் கட்டளையிட் டார். அவர்கள் குருடனை அழைத்து: தைரியமாயிரு, எழுந்திரு, உன்னைக் கூப் பிடுகிறாரென்று அவனுக்குச் சொன் னார்கள்.

50. அவனோ , தன் (மேல்) வஸ்தி ரத்தை எறிந்துவிட்டு, துள்ளியெழுந்து அவரிடத்தில் வந்தான்.

51. சேசுநாதர் அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டு மென்று விரும்புகிறாய் என்றார். அதற் குக் குருடன்: என் குருவே! நான் பார்வையடைய வேண்டும் என்றான்.

52. சேசுநாதர் அவனை நோக்கி: நீ போகலாம்; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். என்றவுடனே அவன் பார்வையடைந்து, வழியில் அவரைப் பின்தொடர்ந்து போனான்.