இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மாற்கு சுவிசேஷம் - அதிகாரம் 09

சேசுநாதர் மறுரூபமானதும், எலியாஸ் ஏற்கனவே வந்தாரென்று காண்பித்ததும், செவிடும் ஊமையுமான பேயைத் துரத்தினதும், தாழ்ச்சியைப் படிப்பித்ததுமாகிய வர்த்தமானங்கள்.

1. ஆறுநாளைக்குப் பிற்பாடு, சேசுநாதர் இராயப்பரையும், யாகப்பரையும், அருளப்பரையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே ஏகாந்தமாய்க் கூட்டிக் கொண்டு போய், அவர்களுக்கு முன்பாக மறு ரூபமானார். (மத். 17:1; லூக். 9:28, 29.)

2. அப்போது அவருடைய வஸ்திரங்கள் பிரகாசித்து, உறைபனிபோல் அதி மிக வெண்மையாய்த் துலங்கின. அதைப் போல பூமியில் எந்தச் சலவைக்காரனும் வெண்மையாக்கமாட்டான்.

3. அன்றியும் எலியாசும், மோயீசனும் அவர்களுக்குத் தரிசனையாகி, சேசுநாதரோடு சம்பாஷித்துக்கொண் டிருந்தார்கள்.

* 3-ம் வசனத்துக்கு மத். 17-ம் அதி. 3-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.

4. அப்படியிருக்க, இராயப்பர் சேசுநாதரைப்பார்த்து: சுவாமி, நாம் இங்கேயிருக்கிறது நல்லது. ஆதலால் உமக்கு ஒரு கூடாரமும், மோயீசனுக்கு ஒரு கூடாரமும், எலியாசுக்கு ஒரு கூடாரமும், ஆக மூன்று கூடாரங்களை அடிப்போமாக என்றார்.

5. ஏனெனில் அவர் சொன்னது இன்னதென்று அவருக்கே தெரியாது; பயத்தால் அவ்வளவு திடுக்கிட்டிருந் தார்கள்.

6. அப்பொழுது ஓர் மேகம் தோன்றி அவர்களுக்கு நிழலிட, அந்த மேகத்தினின்று ஓர் குரலொலியுண்டாகி: இவர் நமக்கு மிகவும் பிரியமுள்ள குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று சப்தித்தது.

7. உடனே அவர்கள் சுற்றிலும் பார்க்கையில், தங்களோடு சேசுநாதர் ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.

8. அவர்கள் மலையைவிட்டு இறங்கும்போது, அவர் அவர்களை நோக்கி: மனுமகன் மரித்தோரிலிருந்து, உயிர்த்து எழுந்திருக்குமளவும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று கட்டளையிட்டார். (மத். 17:9.)

9. மரித்தோரிலிருந்து உயிர்த்த பிறகு என்பது என்னவென்று ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, இந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு :

10. அப்படியானால், எலியாஸ் முந்தி வரவேண்டுமென்று பரிசேயரும், வேதபாரகருஞ் சொல்லுகிறார்களே, அதென்னவென்று அவரை வினாவி னார்கள். (மலக். 4:5)

11. அதற்கு அவர் பிரத்தியுத்தாரமாக: எலியாஸ் முந்திவந்து, எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவாரென்பது மெய்தான். அல்லாமலும் மனுமகன் மிகவும் பாடு பட்டு நிந்தைப்பட வேண்டுமென்று எழுதியிருக்கிறபடியே அவருக்கு நடக்கும். (இசை . 53:3.)

12. ஆனால் எலியாஸ் வந்தாயிற்றென்றும், அவரைக்குறித்து எழுதியிருக்கிறபடியே தங்களுக்கு இஷ்ட மானதெல்லாம் அவருக்குச் செய்தார்களென்றும் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத். 11:14; 17:12.)

* 12-ம் வசனத்துக்கு மத்.11-ம் அதி. 14-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.

13. அவர் தம்முடைய சீஷர்களி டத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றிலும் திரளான ஜனக்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.

14. உடனே ஜனங்களெல்லோரும் சேசுநாதரைக்கண்டு, அதிசயமும், பயமுமடைந்து, ஓடிவந்து அவரைக் கும்பிட்டார்கள்.

15. அவர் அவர்களை நோக்கி: உங்களுக்குள்ளே எதைக்குறித்துத் தர்க்கஞ் செய்கிறீர்களென்று கேட்க,

16. கூட்டத்தினின்று ஒருவன் மறு மொழியாக: குருவே! ஊமைப்பேய் பிடித்திருக்கிற என் மகனை உம்மிடத்தில் கொண்டு வந்தேன். (லூக். 9:38-43.)

17. அது அவனை எங்கே பிடித்தாலும், அவனைக் கீழே விழத்தாட்டு கிறது; அப்பொழுது அவன் நுரை கக்கிப் பல்லுகளையும் நெறுநெறெனக் கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்தும்படி உம்முடைய சீஷர்களிடத்தில் கேட்டேன், அவர்களால் கூடாமற் போயிற்று என்றான்.

18. அவர் அவர்களுக்குப் பிரத்தி யுத்தாரமாக: ஓ! அவிசுவாசமுள்ள சந்ததியே, எத்தனை காலம் உங்களோடிருப்பேன்? எத்தனை நாள் உங்களைச் சகிப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

19. அப்படியே அவனைக் கொண்டு வந்தார்கள். அவன் அவரைக் கண்ட வுடனே, அந்த அரூபி அவனை அலைக் கழித்தது; அவன் தரையிலே மோதி விழுந்து, நுரைகக்கிப் புரண்டுகொண் டிருந்தான்.

20. அப்பொழுது அவர்: இது இவ னுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற் றென்று அவனுடைய தகப்பனைக் கேட்க, அவன்: பாலத்துவம் முதற் கொண்டே உண்டாயிருக்கிறது.

21. அது இவனைக் கொன்றுபோடும் படி அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் இவனைத் தள்ளிற்று. ஆனால் நீர் ஏதா கிலும் செய்யக்கூடுமானால் எங்கள் பேரில் மனதிரங்கி, எங்களுக்கு உதவி செய்தருளும் என்றான்.

22. அதற்கு சேசுநாதர்: நீ விசுவசிக் கக்கூடுமானால், விசுவசிக்கிறவனுக் குச் சகலமும் கூடும் என்று அவனுக் குத் திருவுளம்பற்றினார்.

23. உடனே பிள்ளையின் தகப்பன் அழுகையோடு பேரொலியிட்டு: ஆண்ட வரே! விசுவசிக்கிறேன், என் விசுவாசக் குறையில் எனக்கு உதவிசெய்தருளும் என்றான்.

24. அப்பொழுது சேசுநாதர் ஜனக் கூட்டம் மொய்த்து வருகிறதைக் கண்டு, அசுத்த அரூபியை மிரட்டி: ஊமையும் செவிடுமான அரூபியே, நான் உனக்கு கட்டளையிடுகிறேன்: இந்தப் பிள் ளையை விட்டுப்போ, இனி இவனி டத்தில் பிரவேசியாதே என்றார்.

25. உடனே அது அலறிக் கொண்டு, பிள்ளையை வெகுவாய் அலைக்க ழித்து, அவனை விட்டுப் புறப்பட்டுப் போயிற்று. பிள்ளையோ செத்தவன் போலானான். இதனால் அநேகர் அவன் செத்தானென்று சொல்லும்படியாயிற்று.

26. ஆனால் சேசுநாதர் அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக் கவே, அவன் எழுந்திருந்தான்.

27. பின்னும் அவர் வீட்டில் பிர வேசித்தபோது, அவருடைய சீஷர்கள்: எங்களால் ஏன் அதைத் துரத்தக் கூடாமற்போயிற்றென்று அவரை இரக சியமாய் வினாவினார்கள்.

28. அதற்கு அவர்: இந்தவகைப் பசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தி னாலுமேயன்றி, வேறெந்தவிதத்திலும் போகமாட்டாதென்று அவர்களுக்குத் திருவுளம்பற்றினார்.

29. பிற்பாடு, அவர்கள் அவ்விடத் தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா நாட்டைக் கடந்து போனார்கள். அதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டு மென்று விரும்பினார்.

30. ஆனால் அவர் தம்முடைய சீஷர் களுக்கு உபதேசித்து: மனுமகன் மனி தர்களுக்குக் கையளிக்கப்படுவார். அவர் கள் அவரைக் கொலை செய்வார்கள். கொலையுண்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருப்பாரென்று அவர் களுக்குச் சொன்னார். (மத்.17:21; லூக். 9:22, 44.)

31. அவர்களோ அந்த வார்த்தை யைக் கண்டுபிடியாதிருந்ததுந் தவிர, அதைப்பற்றி அவரைக் கேட்கவும் பயந்திருந்தார்கள்.

32, அதன்பின் அவர்கள் கப்பர்னா வும் ஊருக்கு வந்து, வீட்டிலிருக்கும் போது: நீங்கள் வழியிலே எதைக் குறித்துப் பேசிக்கொண்டு வந்தீர்கள் என்று அவர்களைக் கேட்டார்.

33. அவர்களோ மெளனமாயிருந் தார்கள். ஏனெனில் தங்களில் எவன் பெரியவனென்று வழியில் தங்களுக் குள்ளே தர்க்கித்திருந்தார்கள். (மத். 18:1-5; லூக். 9:46-48.)

34. அப்போது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் வரவழைத்து, அவர் களுக்குச் சொன்னதாவது: எவனா வது முதல்வனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் கடைசியானவனு மாய் எல்லாருக்கும் பணிவிடைக்காரனு மாய் இருப்பானாக என்று சொல்லி,

35. ஓர் பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அரவணைத்துக்கொண்டு, அவர்களுக் குச் சொன்னதாவது;

36. இப்படிப்பட்ட பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக் கொள்ளுகிற எவனும், என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். ஆனால் என்னை ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

37. அப்போது அருளப்பர் அவரை நோக்கி: குருவே! நம்மைப் பின்செல் லாத ஒருவன் உமது நாமத்தினாலே பசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டு அவனைத் தடுத்தோம் என்றார். (லூக். 9:49.)

38. அதற்கு சேசுநாதர்: அவனைத் தடுக்கவேண்டாம்; ஏனெனில் என் நாமத்தினாலே அற்புதத்தைச்செய்து, எளிதாய் என்னைக் குறித்துத் தீங்கு பேசக்கூடியவன் ஒருவனுமில்லை . (1 கொரி. 12:3.)

39. அதேதெனில், உங்களுக்கு விரோ தமாயிராதவன் உங்கள் பாரிசமாயிருக் கிறான்.

40. அன்றியும் நீங்கள் கிறிஸ்துவி னுடையவர்களாய் இருக்கிறதைப்பற்றி, எவனாவது என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு பாத்திரந் தண்ணீர் குடிக்கக் கொடுப்பானாகில், அவன் தன் சம்பாவனையை இழந்து போவதில்லை யென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத். 10:42.)

41. ஆனால் என்பேரில் விசுவாசமா யிருக்கிற இச்சிறியோரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவன் கழுத்திலே கழுதை சுழற்றும் எந்திரக் கல் கட்டுண்டு, சமுத்திரத்திலே தள்ளப் பட்டால் அவனுக்கு அதிக நலமா யிருக்கும். (மத் 18:6; லூக். 17:2.)

42. உன் கையானது உனக்கு இடற லாயிருந்தால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுள்ளவனாய் நரகத் திலும், அவியாத அக்கினியிலும் போவதைவிட, கை முடவனாய்ச் ஜீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். (மத். 5:30; 18:8.)

43. அங்கே அவர்களுடைய புழுவும் சாகாது, அக்கினியும் அவியாது.

44. அவ் வண்ண மே, உன் கால் உனக்கு இடறலாயிருந்தால் அதை வெட்டிப்போடு; நீ இருகாலுள்ள வனாய் அவியாத அக்கினி நரகத்தில் தள்ளப்படுவதைவிட நொண்டியாய் நித்திய ஜீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

45. அங்கே அவர்களுடைய புழு வும் சாகாது, அக்கினியும் அவியாது. (இசை . 66:24.)

46. உன் கண் உனக்கு இடறலா யிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; நீ இரு கண்ணுள்ளவனாய் அக்கினி நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒற்றைக் கண்ணனாய்ச் சர்வேசுர னுடைய இராச்சியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். (மத். 5:29.)

47. அங்கே அவர்களுடைய புழுவும் சாகாது, அக்கினியும் அவியாது.

48. எப்படியெனில் எல்லாப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவது போல, எவனும் அக்கினியால் உப்பிடப்படுவான். (லேவி. 2:13.)

49. உப்பானது நல்லதுதான்; ஆகி லும் உப்பு காரமற்றுப்போனால் எதைக் கொண்டு அதைச் சுவையாக்குவீர்கள்? உங்கள் உள்ளத்தில் உப்பையும், உங்களுக்குள்ளே சமாதானத்தையும் கொண் டிருங்கள் என்றார். (மத். 5:13; லூக். 14:34.)

* 49-ம் வசனத்துக்கு மத்தேயு 5-ம் அதி. 13-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க. பின்னும், உங்கள் உள்ளத்தில் உப்பைக் கொண்டிருங்கள் என்பதின் அர்த்தமாவது: உப்பினால் சகல போஜன பதார்த்தங்களும் உருசியடைந்து, பிரியமும், சுகமும் கொடுப்பது போல, விசுவாசிகள் தங்களுக்குள் விமரிசை, ஞானமென்கிற உப்பின் குணத்தை யடைந்து ஒருவர்க்கொருவர் பிரியப்படவும், ஒன்றித்திருக்கவும், ஒருவரொருவரைக் காப்பாற்றவும் முயற்சியுள்ளவர்களாயிருக்கவேண்டுமென்று அர்த்தமாம்.