1. (ஆத்துமம்) “தூசியும் சாம்பலுமாயினும் நான் என் ஆண்டவரிடம் பேசுவேன்.” நான் என்னை அதிகமாக எண்ணுவேனேயாகில், இதோ நீர் என்பேரில் எதிர்த்து நிற்கிறீர், என் அக்கிரமங்களே எனக்கு விரோதமாய் என்னால் மறுக்கப்படாத சாட்சி சொல்கின்றன. ஆனால் நான் என்னை அற்பமாய் எண்ணி சூனியமாக்கி, என் சுயமதிப்பெல்லாம் ஒழித்துவிட்டு, நான் மெய்யாகவே இருப்பது போல என்னையே தூசியாய் ஆக்குவேனாகில், நீர் என்னை தயவாய் நோக்குவீர், உமது திருவொளி என் மனதில் பிரகாசிக்கும். என் பேரிலேயே நான் கொள்ளும் எண்ணம் எவ்வளவு சொற்பமாயிருந்த போதிலும் ஆழமறியாத பாதாளமாகிய என் ஒன்று மில்லாமையில் அது அமிழ்ந்து காணாமல் போய்விடும். அவ்விடத்திலே, இப்போது நான் என்னவென்றும், முன்னால் இருந்தது என்ன வென்றும் எங்கிருந்து வந்தேன் என்றும் எனக்குக் காண்பிப்பீர். ஏனெனில் நான் ஒன்றுமில்லை, அதையோ நான் அறியாமலிருந்தேன். என்னை நீர் கைவிட்டு விடுவீரானால், இதோ ஒன்றுமில்லாமையும், முழு பலவீனனாயும் இருக்கிறேன். ஆனால் நீர் என்னைத் தயவோடு நோக்குவீரானால், உடனே பலவானாகிப் புது சந்தோஷத்தினால் நிரப்பப்படுகிறேன். சுய இச்சையினால் எப்போதும் இவ்வுலக காரியங்களுக்கு இழுக்கப்படுகிறவனாகிய நான் உம்மால் அவ்வளவு அன்போடு அரவணைக்கப்படுகிறதும் அவ்வளவு சீக்கிரம் தைரியமாக்கப்படுகிறதும் மிகவும் ஆச்சரியமாயிருக்கின்றது.
2. அதெல்லாம் உமது நேசத்தாலேதான் உண்டாகிறது; என் பேறு ஒன்றுமின்றி இலவசமாய் எனக்கு உதவி புரிந்து எனது சகல அவசரங்களிலும் எனக்கு ஒத்தாசை செய்து, பலத்த ஆபத்து களில் என்னைக் காப்பாற்றி, உள்ளபடியே எண்ணிறந்த பொல்லாங்கு களினின்று என்னை இரட்சித்து வருகிறது அந்த நேசமே. மெய் யாகவே, நான் என்பேரில் ஒழுங்கற்ற பிரியம் வைத்துக் கெட்டுப் போனேன்; பிறகு உம்மை மாத்திரம் தேடிப் பரிசுத்தமாய் நேசித் ததினால், உம்மையும் உம்மோடு என்னையும் கண்டடைந்தேன், என்னுடைய ஒன்றுமில்லாமையையும் அதிகமாய்க் கண்டுபிடித்து உணர்ந்தேன். ஏனெனில் மிக்க மதுரமுள்ள நண்பரே! என் சகல பேறுபலன்களுக்கு மேலாகவும், நான் நம்பிக் கேட்கத் துணிவதற்கு மேலாகவும் எனக்குக் கிருபை செய்கிறீர். என் சர்வேசுரா! உமக்குத் தோத்திரமுண்டாகக் கடவது; ஏனெனில் மனிதர் எவ்வித நன்மை களுக்கும் தகுதியற்றவர்களாயிருந்த போதிலும், உமது தாராள குணமும் அளவில்லாத நன்மைத்தனமும் சகலருக்கும், நன்றி கெட்டவர் களுக்கும், உம்மை விட்டுத் தூர அகன்று போனவர்களுக்கு முதலாய் நன்மை செய்து கொண்டே வருகிறது. நாங்கள் நன்றியுள்ளவர் களுமாய், தாழ்ச்சியுள்ளவர்களுமாய், பத்திச் சுறுசுறுப்புள்ளவர் களுமாய் ஆகும்படி எங்களை உமது பக்கமாய்த் திருப்பியருளும். ஏனெனில் நீரே எங்கள் இரட்சணியம், எங்கள் பலம், எங்கள் உறுதியாயிருக்கிறீர்.
யோசனை
மனிதன் தன் சுபாவ பலவீனத்தினால் கட்டிக்கொள்ளும் பாவங்கள் விஷயத்தில், தேவன் இரக்கமுள்ளவராயிருக்கிறார். ஆனால் கெடுதிக்கெல்லாம் காரணமாயிருக்கும் ஆங்காரத்தை மிகவும் அருவருக்கிறார். ஆங்காரம் கெட்டுப்போன சம்மனசுக்களின் பாவம்; அது சர்வேசுரனுடைய அதிகாரத்தை எதிர்க்கிறது. “நாம் சர்வ வல்ல தேவன், அது நமது நாமம், நமது மகிமையை மற்ற எவருக்கும் கொடுக்க மாட்டோம்” என்றார். ஆங்காரம் இயற்கையாகவே சர்வேசுரனுக்குச் சமானமாகத் தேடுகின்றது. சர்வேசுரனாகத் தேடுகிறது எவ்வளவோ பெரும் துரோகம். இந்தத் துரோகமும் சாத்தியமோ? சர்வேசுரன் அதை அகோரமாய்த் தண்டிக்கிறார். “இதோ ஆதாம் நமக்குள் ஒருவரைப் போலானான்.” எந்த ஆதாம்? நிர்வாணியாய்ப் பாவத்தோடு சிங்காரத் தோப்பினின்று துரத்தப் பட்ட ஆதாம், “நீ சாகவே சாவாய்” என்ற பயங்கரமான வார்த்தை களைக் கேட்ட ஆதாம். அவனுடைய மக்கள் அவன் துரோகத்தைக் கண்டுபாவிக்கிறார்கள்; அவர்கள் ஆங்காரம் அதிகரிக்கின்றது. அப்போது கடவுள்: “விடியற்கால நட்சத்திரத்தைப் போல உயர எழும்பின நீ எவ்விதம் விழுந்தாய்? வான மண்டலங்களில் ஏறி நட்சத்திரங்களுக்கு மேல் என் சிம்மாசனத்தை ஸ்தாபிப்பேன்; உன்னத கடவுளுக்குச் சமானமாவேன் என்றாயே! இதோ நீ நரகத் திற்கு இழுக்கப்படுவாய். பாதாளங்களில் தள்ளப்படுவாய்” என்கிறார். ஆங்காரியான பரிசேயனைச் சுவாமி தண்டிக்கிறார்: தாழ்ச்சியுள்ள ஆயக்காரனை ஆசீர்வதிக்கிறார். ஒரு ஸ்திரீ சேசுநாதருடைய பாதத்தில் விழுந்து அழுகிறாள். தன் பாவங்களைப் பற்றித் தன்னைத் தாழ்த்து கிறாள். அவள் முன்பு செய்ததோ பெரும் துரோகம். இந்தத் துரோகமும் சாத்தியமோ? சர்வேசுரனிடம் பொறுத்தல் கேட்க அஞ்சுகிறாள்; அவளுடைய மெளனமே மன்றாட்டாக இருக்கிறது! இரட்சகர் அவளை நோக்கி: அவள் மிகவும் நேசித்தபடியால், மிகுதி யான பாவங்கள் அவளுக்கு மன்னிக்கப்பட்டன என்று ஆறுதல் சொல்லுகிறார். ஆங்காரம் நேசிப்பதில்லை. நரக சாயலாயிருக்கிறது. அதன் குணம், பகை, காய்மகாரம், கொடுமை, பிடிவாதம், முரட்டுத்தனம் இவைகளின் காரணம் பாதாளத்தினின்று புறப்பட்டு பாதாளத்தில் அமிழ்ந்து போகின்றது. சர்வேசுரா! பாவியான என் மட்டில் இரக்கமாயிரும். நெற்றி தரையில்பட என்னை உமக்கு முன்பாக நிர்மூலமாக்கிக் கொள்கிறேன். என் நிர்ப்பாக்கியத்தை, என் துர்நாட்டத்தை, என் துர்ப்பலத்தை வெளிப்படுத்துகிறேன். நீர் எனக்கு உதவியாக வராவிடில் நான் உம்மை விட்டுப் பிரிந்து கெட் டழிந்து போவேன். ஆண்டவரே! என் இருதயத்தில் உமது வரப்பிரசாதத்தை வைத்தருளும், என்னைக் கைவிடாதேயும், என்னை இரட்சித்தருளும்; இல்லையோ, அழிந்து போவேன். சர்வேசுரா! உமது நிர்ப்பாக்கிய சிருஷ்டியின் மேல் இரக்கமாயிரும். இரட்சித்தருளும்; இல்லையோ, அழிந்து போவேன். சர்வேசுரா! உமது நிர்ப்பாக்கிய சிருஷ்டியின் மேல் இரக்கமாயிரும்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠