இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

07. ஆத்துமசோதனையும் சீவியத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள பிரதிக்கினையும்.

1. (கிறீஸ்துநாதர்) இந்தத் திவ்விய பலியை நிறைவேற்றவும், சேசுகிறீஸ்துநாதருடைய சரீரத்தைக் கையில் ஏந்தவும் உட்கொள்ளவும், குருவானவரிடத்தில் மிகுந்த மனத்தாழ்ச்சியும் ஆழ்ந்த வணக்கமும் பூரண விசுவாசமும் தேவனை ஆராதிக்க சுத்தக் கருத்தும் முக்கியமாய் விளங்கவேண்டியது. ஆதலால் உன் ஆத்துமத்தைக் கவனமாய்ப் பரிசோதித்து, கூடுமானவரை உண்மையான மனஸ்தாபத்தாலும் தாழ்ச்சியுள்ள பாவசங்கீர்த்தனத்தாலும் அதைச் சுத்தப் படுத்து; அவ்விதம் உன்னை நம்மிடம் வரத் தடுக்கவும் உன் மனதைக் குத்தவும் கூடிய எந்த தோஷமும் உன் ஆத்துமத்தில் உனக்குத் தெரிந்த மட்டுமாவது நிற்காது. பொதுவில் உன் சகல பாவங்களின் பேரிலும் வெறுப்புக் கொள்வதுமல்லாமல், நாள்தோறும் நீ செய்கிற தவறுகளுக்காக விசேஷமாய் அதிக கஸ்திப்பட்டு அழக்கடவாய். பிறகு அவகாசமிருந்தால், உன் தீய இச்சைகளால் உண்டாகும் சகல பலவீனங்களையும் அந்தரத்தில் தேவனிடம் சங்கீர்த்தனம் செய்.

2. நீ அழுது பிரலாபிக்க வேண்டும், ஏனென்றால்: நீ இன்னும் இவ்வளவு சரீர சுகப் பிரியனும், உலகப் பிரியனும், ஆசாபாசங் களைச் சரியாய் அடக்காதவனும், ஆசாபாச நாட்டம் நிறைந் தவனும், வெளிப்புலன்களை நன்றாய்க் காக்காதவனும், வீண் சிந்தை களில் அடிக்கடி சிக்கிக் கொண்டவனும், இவ்வுலகக் காரியங்களைக் கவனிக்க அதிகச் சார்புள்ளவனும், உன் ஆத்துமத்தைக் குறித்து யோசிப்பதிலோ அசட்டை செய்கிறவனும், உல்லாசத்திற்கும் சிரிப் புக்கும் நாட்டமுள்ளவனும், அழுகைக்கும் மனஸ்தாபத்திற்குமோ கல் நெஞ்சனும், அசட்டையாயிருக்கவும் சரீர சுகபோகம் தேடவும் மிகவும் தீவிரமுள்ளவனும், தபசுக்கும் ஞான சுறுசுறுப்புக்குமோ சோம்பலுள்ளவனும், புதுமையான செய்திகளைக் கேட்கவும் அழகான காட்சிகளைப் பார்க்கவும் அதிக ஆசையுள்ளவனும், தாழ்மையும் இழிந்ததுமானவைகளைத் தெரிந்து கொள்ளவோ பிரியமில்லாதவனும், பணத்தைச் சேகரிப்பதற்குப் பேராசை கொண்டவனும், கொடுப்பதற்கு உலோபியும், வைத்திருக்கிறதைக் காப்பாற்றுகிறதற்குப் கஞ்சத்தனமுள்ளவனும், பேசுகையில் சற்றும் யோசியாதவனும், மவுனம் சற்றும் காக்காதவனும், நடத்தையில் ஒழுக்கமற்றவனும், கிரியைகளில் அவிவேகமுள்ளவனும், உணவில் மிகவும் பிரியமுள்ளவனும், தேவ வாக்கியங்களைக் கேட்பதிலோ பிரியமற்றவனும், இளைப்பாற ஆவலுள்ளவனும், வேலை செய்யவோ மந்தமுள்ளவனும், கதை கேட்பதில் கவனம் செலுத்து பவனும், இரவுப் பிரார்த்தனையில் தூங்கி விழுந்து அது சீக்கிரம் முடியாதா என்று பார்த்து அதைக் கவனியாமல் பராக்காயிருக்கிற வனும், கடமைச் செபங்களைச் செய்வதில் அசட்டையுள்ளவனும், திவ்விய பூசை செய்வதில் பக்தியில்லாதவனும், சற்பிரசாதம் உட்கொள்ளும்போது இருதய வறட்சி உள்ளவனும், வெகு சீக்கிரத்தில் பராக்குக்கு இடம் கொடுக்கிறவனும், வெகு அரிதாய் உள்ளத்தில் முழுதும் அடங்கியிருக்கிறவனும், சீக்கிரத்தில் கோபம் கொள்பவனும், பிறரை வருத்தப்படுத்தலாகாது என்பது பற்றி கவலை யற்றவனும், பிறருடைய கிரியைகளைத் தீர்மானிக்க நாட்டமுள்ள வனும், பிறரைக் கண்டிப்பதில் கடுமையுள்ளவனும், செல்வ காலத்தில் சந்தோஷ மயக்கமுள்ளவனும், துன்ப காலத்திலோ மனங்குன்றிப் போகிறவனும், அநேக நல்ல காரியங்களைச் செய்யத் தீர்மானிக்கிறவனும், ஒன்றும் முடிவுக்குச் சரியாய்க் கொண்டு வராதவனும், இப்படியெல்லாம் நீ இருப்பதைப் பற்றி அழுது மனஸ்தாபக்கடவாய். தீர்மானிக்கிறவனும், ஒன்றும் முடிவுக்குச் சரியாய்க் கொண்டு வராதவனும், இப்படியெல்லாம் நீ இருப்பதைப் பற்றி அழுது மனஸ்தாபக்கடவாய்.

3. இவைகளையும், இன்னும் உனக்குள்ள மற்ற துர்க்குணங் களையும் ஏற்றுக்கொண்டு அவைகளுக்காக மிகவும் மனஸ்தாபப் பட்டு உன் பலவீனம் எம்மாத்திரமென்று நன்றாய்க் கண்டுணர்ந்து புலம்பியழுதபின், உன் நடத்தையைத் திருத்துவதாகவும் நன்மையில் வளர்வதாகவும் கெட்டியான பிரதிக்கினை செய்.

அதன்பிறகு உன் சரீரத்தையும் ஆத்துமத்தையும் நமக்கு நம்பிக்கையோடு கையளித்து நமது நாமத்திற்குத் தோத்திரமாக உன் இருதயமென்னும் பீடத்தின்மீது உன்னையே இடைவிடாத சர்வ தகனப்பலியாக முழுமனதோடும் குறையற்ற பணிவோடும் ஒப்புக் கொடு. அப்படிச் செய்வாயானால், தேவனுக்குத் திவ்விய பலியைச் சிறந்த விதமாய் ஒப்புக்கொடுக்கவும் நமது சரீரத்தின் தேவத்திரவிய அநுமானத்தை பலனோடு உட்கொள்ளவும் நீ பீடத்தை அணுகத் தகுதியுடையவனாவாய்.

4. ஏனெனில், திவ்வியபூசையிலும் தேவ நற்கருணை வாங்கும் போதும் கிறீஸ்துநாதருடைய சரீரத்தை ஒப்புக்கொடுக்கும் சமயத்தில், சுத்தக் கருத்தோடு தன்னையே முழுதும் தேவனுக்கு ஒப்புக்கொடுக் கிறதை விட, தன் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அதிக பலனுள்ள பரிகாரமுமில்லை, அதிக தகுதியான காணிக்கையுமில்லை.

மனிதன் பாவப் பொறுத்தலையும் வரப்பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ள நம்மிடம் வரும்போதெல்லாம், தன்னால் கூடிய முயற்சி செய்தும் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டும் வருவானாகில், “பாவியினுடைய மரணத்தையல்ல, ஆனால் அவன் மனந்திரும்பி ஜீவிக்க வேண்டுமென்று விரும்புகிற தேவனாகிய நாம், அவனுடைய பாவங்களை இனி நினைக்க மாட்டோம், அவனுக்குச் சகலமும் மன்னிக்கப்படும் என்று வாக்களிக்கிறோம்.” 

யோசனை

பலிப் பீடத்தை அண்டிவருவதற்கு மிக்க பிரயோசனமும் அதிக அவசியமுமானது என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்கள் மனச் சாட்சியை நுணுநுணுக்கமாய்ப் பரிசோதிப்பதுதான். நமது மனச் சாட்சியின் அடிப்பாகம் இருளின் இராச்சியத்தைப் போல் இருக் கிறது. அதில்தான் ஆதிகாலத்திலேயே ஆசாபாசத்தினால் கெட்டுப் போன மனித சுபாவத்தின் சகல துர்க்குணங்கள் முளைத்து வளர்ந்து மேன்மேலும் அதிகரிக்கின்றன. தன் மனச்சாட்சியைக் கவனமாய்ச் சோதிக்கிற எவனும் சகல துர்க்குணங்களின் முளைகளை அங்கு காண்பான். ஆங்காரம், பகை, வர்மம், கள்ள ஞானம், பேராசை, கோள், குண்டுணி, அவதூறு, காய்மகாரம், கொலை, கல்நெஞ்சத்தனம், இவை இன்னும் மற்றுமுள்ள துர்க்குணங்களுக்கெல்லாம் விதையான தைக் காண்பான். ஒரே விதமாய் எல்லாரிடத்திலும் வளராமல் போன போதிலும், சகலரிடத்திலும் கொஞ்சமாயினும் உண்டு; தேவ வரப் பிரசாதம் ஒன்றே அவைகளைக் கொஞ்சமோ அதிகமோ அடக்கு கின்றது. ஆதாமுடைய மக்களின் கதி இவ்விதம் தான் இருக்கின்றது. இந்த நிர்ப்பாக்கியத் துர்க்குணத்தைப் பற்றிச் சர்வேசுரனை நோக்கி அவருடைய ஒத்தாசையை மன்றாடாதவன் யார்? “தங்கள் அக்கிர மங்களை மறைக்கிறவர்களை அவர் கைவிடுகிறார். தங்கள்மேல் குற்றம் சாட்டிக் கொள்கிறவர்களையோ மன்னிக்கிறார். பாவிகள் மட்டில் கொண்ட இரக்கத்தினால், சேசுநாதர் சுவாமி பச்சாத்தாபம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார். செம்மறிப் புருவையின் இரத்தத்தில் அது அவர்களைச் சுத்திகரிக்கின்றது. மாசற்ற தனத்தால் அவர்களைப் போர்த்துகிறது. திவ்விய பத்தாவின் விருந்திற்குப் போவதற்குத் தரித்துக்கொள்ள வேண்டிய கலியாண உடை அந்த மாசற்ற தனமே. பாவச் சுமையினால் வருந்தித் தவிக்கிறவர்களே, குருவானவரிடம் போகத் தீவிரியுங்கள், அவரே சேசுநாதருடைய ஸ்தானத்தில் இருக்கிறார். மனஸ்தாபத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கை யோடும், நேசத்தோடும் போய் அவருடைய பாதங்களில் உங்கள் பாவச் சுமையை இறக்கி வைத்து விடுங்கள்; போய் உங்களைத் தாழ்த் துங்கள், போய் அழுங்கள்; தேவ கரம் உங்கள் கண்ணீரைத் துடைக்கும், தேவனுடைய வரப்பிரசாதத்தால் சமாதானமாவீர்கள், உங்கள் மனதில் அமைதியுண்டாகும். நீங்களும் சந்தோஷமாய்ப் பொறுத்தலின் சங்கீதத்தைப் பாடுவீர்கள்: “எவரெவர் பாவம் பொறுக்கப் பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்; எவரெவர் பாவம் மறைக்கப் பட்டதோ அவர்களும் பாக்கியவான்கள். ஆண்டவர் எவனுடைய பாவத்தை அவன்மேல் சாட்டாமலிருக்கிறாரோ அவன் பாக்கிய வான். எவனுடைய மனதில் கபடமில்லையோ அவனும் பாக்கிய வான்.” நான் என் பாவங்களை வெளிப்படுத்தாமல் மவுனமாகி நாளெல்லாம் கூக்குரலிட்டதினால் என் எலும்புகள் தளர்ந்து போயின; ஏனென்றால் உமது கைப்பாரம் அல்லும் பகலும் என்மேல் சுமந் ததினால் முள் தைத்து இறங்கினாற்போலக் கடினத் துயரப்பட்டு ஆறாட்டமாய்ப் புரண்டு கிடந்தேன், என் பாவத்தை உமக்கு அறிக்கை யிட்டேன், என் அநீதத்தை உமக்கு மறைத்தேனில்லை; நான் எனக்கு விரோதமாக என் அக்கிரமத்தை ஆண்டவரிடத்தில் சங்கீர்த்தனம் செய்வே னென்று சொல்லவே நீர் என் பாவக் கேட்டைப் பரிகரித் தருளினீர். இதைப்பற்றி புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் தக்க சமயம் பார்த்து உம்மை மன்றாடுவார்கள்; இத்தன்மையாய் வெள்ளம் எப்படிப் புரண்டு வந்தாலும் அவர்கள் வரைக்கும் ஏறாது.