இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 06

கிறீஸ்துநாதர் சீஷர்களுக்குச் சனுவாகப் பேசினதும், சூம்பின கரத்தைச் செளக்கியப் படுத்தினதும், அப்போஸ்தலர்களைத் தெரிந்து கொண்டதும், மலையின்மேல் செய்த பிரசங்கத்தின் சங்க்ஷேபமும்.

1. இரண்டாம் முதல் ஓய்வுநாளிலே அவர் விளை நிலங்களின் வழியாய்ப் போகும்போது, சம்பவித்ததேதெனில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளால் கசக்கித் தின்றார்கள். (மத். 12:1; மாற். 2:23.)

* 1. முதல் ஓய்வுநாளில்:- இவ்வாக்கியத்துக்குக் கிரந்தகர்த்தாக்கள் பலவித வியாக்கியானம் செய்கிறார்கள். அதில் ஒன்றை இங்கே குறிப்போம்: யூதர்களுக்குள் வருஷத்திலே முதல் வகுப்புத் திருநாட்கள் மூன்று நடந்தன. அம்மூன்றிலும் பேர்போனது பாஸ்குத் திருநாள். 2-வது, பெந்தக்கோஸ்தஸ் திருநாள். 3-வது, செநோப்பேயியா என்கிற கூடாரத் திருநாள். இம்மூன்றில் 2-ம் திருநாளாகிய பெந்தக்கோஸ்தஸ் இந்த வாக்கியத்தில் 2-ம் முதல் ஓய்வுநாளென்று சொல்லப்படுகின்றது. இந்தக் கணக்கின்படி முதலாம் முதல் ஓய்வு நாளென்றால், பாஸ்குத் திருநாளாகும். 3-ம் முதல் ஓய்வுநாளென்றால் கூடாரத் திருநாள் ஆகும்.

2. பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வு நாட்களிலே செய்யத் தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்றார்கள்.

3. சேசுநாதர் அவர்களுக்கு மாறுத் தாரமாகச் சொன்னதாவது: தாவீதென்பவரும், அவரோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, அவர் செய்ததை நீங்கள் வாசித்ததில்லையா?

4. எப்படி அவர் சர்வேசுரனுடைய ஆலயத்தில் பிரவேசித்து, ஆசாரியர் மாத்திரமேயன்றி மற்றெவரும் உண்ணத்தகாத தேவசமுகத்து அப்பங்களை எடுத்து, தாமும் சாப்பிட்டு தம்மோடு கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தார் என்றார். (1 அரச. 21:6; யாத். 29:32.)

* 4. மத். 12-ம் அதி. 4-ம் வசன வியாக்கியானம் காண்க.

5. மேலும், மனுமகன் ஓய்வுநாளுக்கும் கர்த்தராயிருக்கிறாரென்று அவர்களுக்குத் திருவுளம்பற்றினார்.

6. பின்னும் வேறொரு ஓய்வு நாளிலே அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்துப் போதிக்கும்படியாயிற்று. அங்கே ஒரு மனிதனிருந்தான். அவனுடைய வலது கை சூம்பிப்போய் இருந்தது. (மத். 12:9-14; மாற். 3:1-6.)

7. வேதபாரகரும், பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்ட வழிகிடைக்கும்படி, அவர் ஓய்வுநாளிலே சுகப் படுத்துவாரோ என்று கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

8. அவரோ, அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, சூம்பின் கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து, நடுவிலே நில் என்றார். அவனும் எழுந்து நின்றான்.

9. அப்பொழுது சேசுநாதர் அவர் களை நோக்கி: ஓய்வு நாட்களில் நன்மை செய்யலாமோ தின்மை செய்ய லாமோ, ஜீவனைக் காக்கலாமோ, அழிக்கலாமோ? நான் உங்களைக் கேட் கிறேன் என்று சொல்லி,

10. அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்து அந்த மனிதனை நோக்கி: நீ உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான். உடனே அவனுக்குக் கை சொஸ்தமாயிற்று.

11. அவர்களோ, முழுப்பைத்தியம் பிடித்தவர்களாய் சேசுநாதருக்கு என்ன செய்யலாமென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

12. அந்நாட்களிலே சம்பவித்ததேதெனில்: அவர் ஜெபஞ் செய்யத்தக்கதாக ஒரு மலைக்குப் புறப்பட்டுப் போய், சர்வேசுரனை வேண்டிக்கொள்வதிலே இரவெல்லாம் செலவழித்தார்.

13. மேலும் பொழுது விடிந்த போது, அவர் தம்முடைய சீஷர்களை அழைத்து, அவர்களில் பன்னிருவரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார். (மத். 10:1-4; மாற். 3:13-19.)

14. (அவர்கள் யாரெனில்) இராயப்பரென்று தாம் காரணப்பெயரிட்ட சீமோனும், இவருடைய சகோதரனாகிய பிலவேந்திரரும், இயாகப்பரும், அருளப்பரும், பிலிப்பும், பர்த்தலோமேயும்,

15. மத்தேயும், தோமையாரும், அல்பேயின் குமாரனாகிய இயாகப்பரும், செலோத்தேஸ் என்னப்பட்ட சீமோனும்,

16. இயாகப்பருடைய சகோதரனா கிய யூதாவும், துரோகியான யூதாஸ் இஸ்காரியோத்து என்பவனுமாம்.

17. பின்னும் அவர் அவர்ளோடு கூட இறங்கி, மைதானமான ஓரிடத் திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற்கரை களிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள்.

18. இவர்கள் அவருடைய வாக் கைக் கேட்கவும், தங்கள் நோய்களி னின்று சுகமாக்கப்படவும் வந்திருந் தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக் கப்பட்டவர்களும் சொஸ்தமானார்கள்.

19. அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோ ரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள்.

20. அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத் துப்பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களுடையது. (மத். 5:2, 3.)

21. இப்பொழுது பசியாயிருக்கிற வர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெ னில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான் கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். (மத். 5:6.)

22. மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களை விலக் கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கிய வான்களாயிருப்பீர்கள். (மத். 5:11.)

23. அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமா யிருக்கின்றது. அவர்களுடைய பிதாக் களும் தீர்க்கதரிசிகளுக்கு இவ்வண் ணமே செய்தார்கள்.

24. ஆனால் ஐசுவரியவான்களே, உங்களுக்கு ஐயோ கேடு; ஏனெனில் நீங்கள் உங்கள் ஆறுதலையடைந்திருக் கிறீர்கள். (சர்வப். 31:7; ஆமோஸ். 6:1.)

25. திருப்தி அடைந்திருக்கிறவர் களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெ னில் பசியாயிருப்பீர்கள்; இப்போது சிரிக்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் அழுது புலம்புவீர்கள். (இசை . 65:13.)

26. ஜனங்கள் உங்களைப் புகழும் போது (உங்களுக்கு) ஐயோ கேடு! ஏனெனில் அவர்களுடைய பிதாக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் இவ் வாறே செய்தார்கள்.

27. எனக்குச் செவிகொடுக்கிற உங்க ளுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங் கள்; (மத். 5:44.)

28. உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்கள்மேல் அபாண் டம் சொல்லுகிறவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்;

29. உன்னை ஒரு கன்னத்தில் அடிக் கிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன்னிடத்திலிருந்து உன் போர்வை யைப் பறிக்கிறவனுக்கு உன் அங்கியை யும் எடுத்துக்கொள்ளத் தடைசெய் யாதே. (மத். 5;39-42; 1 கொரி. 6:7.)

30. உன்னைக் கேட்கிற எவனுக் கும் கொடு; உன்னுடையவைகளைப் பறித்துக் கொள்ளுகிறவனிடத்தில் அவைகளைத் திரும்பக் கேளாதே;

31. மனுஷர் உங்களுக்கு எவ்விதம் செய்யவேண்டு மென்று விரும்புகிறீர் களோ, அவ்விதமே நீங்களும் அவர் களுக்குச் செய்யுங்கள். (மத். 7:12.)

32. அன்றியும் உங்களை நேசிக்கிற வர்களையே நீங்கள் நேசித்தால், உங்க ளுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கி றார்களே. (மத். 5:46.)

33. உங்களுக்கு நன்மை செய்கிற வர்களுக்கே நீங்கள் நன்மை செய் தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் இவ்விதம் செய்கிறார்களே.

34. எவர்களிடத்திலிருந்து (பிரதி பலன்) பெற்றுக்கொள்ள நம்புகிறீர் களோ, அவர்களுக்கே நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்குப் பலன் என்ன? சரிக்குச்சரி பெற்றுக்கொள்ள லாமென்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. (மத். 5:42; உபாக. 15:8.)

35. நீங்களோ உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; நன்மை செய்யுங்கள்; எதுவும் எதிர்பாராமல் கடன் கொடுங் கள். அப்பொழுது உங்கள் சம்பாவனை மிகுதியாயிருக்கும், அதி உன்னதருக் குப் புத்திரருமாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றியறியாதவர்களுக்கும், தீயோர்களுக்கும் காருண்யராயிருக் கிறார்.

36. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராய் இருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

37. ஒருவரையும் குற்றவாளிகளாகத் தீர்க்காதேயுங்கள்; நீங்களும் குற்றவா ளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். எவன்மேலும் ஆக்கினைத் தீர்வையிடா தேயுங்கள். உங்கள்மேலும் ஆக்கினைத் தீர்வையிடமாட்டார்கள். மன்னியுங் கள், நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். (மத். 7:1.)

38. கொடுங்கள், உங்களுக்கும் கொடுக் கப்படும்; அமுக்கவும் குலுக்கவும்பட்டுச் சரிந்துவிழும் நல்ல அளவை உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில் நீங்கள் அளந்த அளவினாலேயே உங்களுக்கும் பதில் அளக்கப்படும் என்றார். (மத். 7:2; மாற். 4:24.)

39. மீளவும் அவர் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: குருட னுக்குக் குருடன் வழிகாட்டக் கூடுமோ? இருவரும் குழியிலல்லோ விழுவார்கள்?

40. சீஷன் குருவுக்கு மேற்பட்டவர் னல்ல; எவனும் தன் குருவைப்போல் இருப்பானாகில், உத்தமனாயிருப்பான். (மத். 10:24; அரு. 13:16.)

41. நீ உன் கண்ணிலிருக்கிற உத் திரத்தைக் கவனியாமல், உன் சகோ தரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (மத். 7:3-5.)

42. அல்லது, உன் கண்ணிலிருக் கிற உத்திரத்தை நீயே பாராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே பொறு, உன் கண்ணிலிருக்கிறதுரும்பை எடுத்துவிடுகிறேன் என்று சொல்லக் கூடுவது எப்படி? கள்ள ஞானியே, முந்த முந்த உன் கண்ணிலிருக்கிற உத்திரத் தைத் தள்ளிவிடும். அதன்பின் உன் சகோ தரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடப் பார்ப்பாய்.

43. ஏனெனில் கெட்ட கனியை கொடுக்கிற நல்ல மரமுமில்லை; நல்ல கனியைக் கொடுக்கிற கெட்ட மரமு மில்லை . (மத். 7:18; 12:33.)

44. ஆகையால் ஒவ்வொரு மரமும் தன் தன் கனியைக் கொண்டே அறி யப்படும். ஏனென்றால் முட்செடி களில் அத்திப்பழங்களைப் பறிக்கிறது மில்லை; முள்ளியில் திராட்சைக் குலைகளை அறுக்கிறதுமில்லை .

45. நல்ல மனிதன் தன் இருதயமா கிய நல்ல பொக்கிஷத்தினின்று நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான். கெட்ட மனிதனும் கெட்ட பொக்கிஷத்தினின்று கெட்டவைகளை எடுத்துக் காட்டுகிறான். ஏனெனில் இருதயத்தின் நிறைவாகவேதான் வாய் பேசுகின்றது.

46. நான் சொல்லுகிறவைகளை நீங்கள் செய்யாதிருக்கையில், என்னை நோக்கி, நீங்கள்: சுவாமி! சுவாமி! என்று அழைப்பானேன்? (மத்.7:21; உரோ . 2:13.)

47. என்னிடத்தில் வந்து, என் வாக்கியங்களைக் கேட்டு, அவைகளை அநுசரிக்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். (இயா. 1:22, 23; மத். 7:21, 24.)

48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திவாரமிட்டு, வீட்டைக் கட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் புரண்டு வந்து, நதியானது அந்த வீட்டின் மேல் மோதியும், அதை அசைக்கமாட்டாமற் போயிற்று; ஏனெனில் அது கற்பாறையின் மேல் அஸ்திவாரமிடப்பட்டிருந்தது.

49. ஆனால் கேட்டும், அநுசரியாதவன் அஸ்திவாரமின்றி, மண்ணின் மேல் தன் வீட்டைக் கட்டின மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான். நதியானது அந்த வீட்டின் மேல் மோதவே, அது விழுந்தது; அதன் சேதமும் மிகுதியாயிற்று என்றார்.