இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 05

சேசுநாதர் இராயப்பருடைய படகிலிருந்து பிரசங்கித்ததும், அற்புதமாய் திரளான மச்சங்களைப் பிடிக்கச்செய்ததும், குஷ்டரோகியையும், திமிர்வாதக்காரனையும் குணமாக்கினதும், மத்தேயு என்பவரை அழைத்ததும்.

1. பின்பு சம்பவித்ததாவது: அவர் ஜெனேசரேத் என்னும் ஏரியினருகே நிற்கையில், திரளான ஜனங்கள் தேவ வாக்கியத்தைக் கேட்கும்படி, அவரிடத்தில் வந்து நெருங்கினார்கள்.

2. அப்போது ஏரியோரத்தில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் கீழேயிறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.

3. அவைகளில் ஒன்றாகிய சீமோனுடைய படகிலே அவர் ஏறி, கரைக்குச் சற்று தூரத்தில் அதைத் தள்ளும்படி அவரைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து ஜனங்களுக்கு உபதேசித்தார்.

4. உபதேசித்து முடிந்த பின், சீமோனை நோக்கி: படகை ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிப்பதற்கு உங்கள் வலைகளை வீசுங்கள் என்றார்.

5. சீமோன் பிரத்தியுத்தாரமாக: போதகரே, நாங்கள் இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் தேவரீருடைய வார்த்தையின்படியே வலையை வீசுவேன் என்றார்.

6. அப்படி அவர்கள் செய்தவுடனே, தங்கள் வலை கிழிந்துபோகத் தக்க ஏராளமான மச்சங்களை வளைத்துப் பிடித்தார்கள்.

7. அப்போது மற்றப் படகிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படி, அவர்களுக்குச் சயிக்கினை காட்டினார்கள். அவர்களும் வந்து, இரண்டு படகுகளையும் நிரப்ப, அவைகள் கிட்டத்தட்ட அமிழ்ந்திப் போகிறதாயிருந்தன.

8. சீமோன் இராயப்பர் இதைக் கண்டவுடனே, சேசுநாதருடைய பாதத்திலே விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன். என்னைவிட்டு அகலும் என்றார்.

9. ஏனெனில் அவர்களுக்கு அகப்பட்ட மீன்பாட்டினிமித்தம், அவரும் அவரோடிருந்த சகலரும் பிரமிப்படைந்திருந்தார்கள்.

10. அவ்விதமே சீமோனுடைய தோழராகிய செபதேயின் குமாரர் இயாகப்பரும் அருளப்பரும் (பிரமிப்படைந்திருந்தார்கள்). ஆனால் சேசுநாதர் சீமோனை நோக்கி: பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். (மத். 4:18-22; மாற். 1:16-20.)

11. ஆதலால் அவர்கள் படகுகளைக் கரைக்குத் தள்ளினபின், எல்லாவற்றையும்விட்டு, அவரைப் பின்சென்றார்கள். (மத். 4;20-23; மாற். 1:20.)

12. மீளவும் சம்பவித்ததாவது: சேசுநாதர் ஒரு பட்டணத்திலிருக்கையிலே, நிறைகுஷ்டனான ஓர் மனிதன் அவரைக் கண்டு, முகங்குப்புற விழுந்து : ஆண்டவரே! தேவரீருக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே கூடுமென்று மன்றாடினான். (மத். 8:2, 4; மாற். 1:40.)

13. அவர் தமது கரத்தை நீட்டி, அவனைத் தொட்டு: சித்தமாயிருக்கிறேன், சுத்தமாயிரு என்றார். என்றவுடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று.

14. பின்னும் அவர் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவனுக்குக் கட்டளையிட்டு: நீ போய் ஆசாரியனிடத்தில் உன்னைக் காண் பித்து, உன் சுத்திகரிப்புக்காக மோயீசன் கட்டளையிட்டபடியே அவர்களுக்கு அத்தாட்சியாகக் காணிக்கையைச் செலுத்து என்றார். (லேவி. 14:2-32.)

* 14. மத். 8-ம் அதி. 6-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.

15. ஆயினும், அவருடைய கீர்த்தி அதிகமாய்ப் பரம்பவே, திரளான ஜனங்கள் அவருடைய வாக்கை கேட்கவும், தங்கள் வியாதிகளில் சொஸ்தமடை யவும் கூடிவருவார்கள்.

16. அவரோவெனில், வனாந்தரத் தில் தனித்துப்போய் ஜெபம் செய்வார். (மத். 14:23; மாற். 6:46, 47.)

17. பின்னும் ஒரு நாள் சம்பவித்த தேதெனில்: சேசுநாதர் உட்கார்ந்து போதித்துக்கொண்டிருக்கையில், கலி லேயாவிலும் யூதேயாவிலுமுள்ள சகல ஊர்களிலுமிருந்தும், ஜெருசலேம் நகரத் திலுமிருந்தும் வந்த பரிசேயரும், நீதி சாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைக் குணப்படுத்துகிறதற்கு கர்த்தருடைய வல்லமையும் இருந்தது.

18. அப்போது இதோ, சில மனிதர் திமிர்வாதமுள்ள ஓர் மனிதனைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு, அவனை உள்ளே கொண்டுவரவும், அவர் முன் பாக வைக்கவும் வகைதேடினார்கள். (மத். 9:2, 3; மாற் 2:3-12.)

19. ஆனால் ஜனக்கும்பலினிமித்தம் அவனை எவ்வழியாய் உள்ளே கொண்டு வருகிறதென்று வகைகாணாமல், வீட் டின் மேல் ஏறி, ஓடுகளின் வழியாய் அவனை சேசுநாதர் முன்பாக மத்தியிலே கட்டிலோடு இறக்கினார்கள்.

20. அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு: மனிதனே, உன் பாவங்கள் உனக்குப் பொறுக்கப்பட்டன என்றார்.

21. அப்போது வேதபாரகரும் பரி சேயரும்: தேவதூஷணஞ் சொல்லுகிற இவன் யார்? கடவுள் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கக்கூடியவர் யார் என்று சொல்லி, யோசிக்கத் தொடங்கினார்கள்.

22. ஆனால் சேசுநாதர் அவர்களுடைய யோசனைகளை அறிந்து, அவர்களுக்குப் பிரத்தியுத்தாரமாகத் திருவுளம்பற்றினதாவது: நீங்கள் உங்கள் இருதயங்களில் யோசிக்கிறதென்ன?

23. பாவங்கள் உனக்குப் பொறுக்கப்பட்டன என்று சொல்லுவதோ, அல்லது நீ எழுந்து நட என்று சொல்லுவதோ எது அதிக எளிது?

24. பூமியிலே பாவங்களைப் பொறுக் கும்படி மனுமகனுக்கு வல்லமை உண் டென்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தென்று சொல்லி, அவர் திமிர்வாதக் காரனைப் பார்த்து: இதோ, உனக்குச் சொல்லுகிறேன், நீ எழுந்து உன் கட்டிலை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

25. உடனே, அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தான் படுத்திருந்த கட்டிலை எடுத்துக்கொண்டு, சர்வேசு ரனைப் புகழ்ந்து கொண்டாடித் தன் வீட்டுக்குப் போனான்.

26. இதனாலே, எல்லோரும் பிர மிப்படைந்து, சர்வேசுரனைத் தோத்த ரித்ததுமன்றி, பயம் நிறைந்தவர்களாய்: ஆச்சரியத்துக்குரியவைகளை இன்று கண்டோம் என்றார்கள்.

27. இவைகளுக்குப் பிற்பாடு , சேசு நாதர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட் கார்ந்திருந்த லேவி என்னும் பெயருள்ள ஒரு ஆயக்காரனைக்கண்டு அவரை நோக்கி: என்னைப் பின் சென்று வா என்றார். (மத். 9:9; மாற். 2:14.)

28. அவர் எல்லாவற்றையும் விட்டு எழுந்து, அவரைப் பின்சென்றார்.

29. மேலும் அந்த லேவியென்பவர் தன் வீட்டில் அவருக்குப் பெரிய விருந்து செய்தார். அப்போது ஆயக்காரரும், அவர்களோடுகூடப் பந்தி யமர்ந்த மற்றவர்களும் பெருங்கூட்டமா யிருந்தார்கள்.

30. அதனிமித்தம் பரிசேயரும், அவர் களுடைய வேதபாரகரும் முறுமுறுத்து, அவருடைய சீஷர்களை நோக்கி: நீங் கள் ஆயக்காரரோடும், பாவிகளோடும் போஜன பானஞ் செய்வானேன் என் றார்கள்.

* 30. மத். 9-ம் அதி. 11-ம் வசன வியாக்கியானம் காண்க.

31. அதற்கு சேசுநாதர் பிரத்தியுத் தாரமாக: சுகமாயிருக்கிறவர்களுக்கு வைத்தியன் அவசியமில்லை; நோயாளி களுக்கே அவசியம். (மத். 9:12.)

32. நீதிமான்களையல்ல, பாவிக ளையே பச்சாத்தாபத்துக்கு அழைக்க வந்தேன் என்றார்.

33. மீளவும் அவர்கள் சேசுநாதரை நோக்கி: அருளப்பருடைய சீஷர்கள் அடிக்கடி ஒருசந்தி பிடித்து, ஜெபம் பண்ணுகிறார்கள்; பரிசேயருடைய சீஷர் களும் அப்படியே செய்கிறார்கள்; உம்மு டைய சீஷரோ, போஜன பானம் பண்ணு கிறார்களே; அது ஏன் என்று கேட்டார் கள். (மாற். 2:18.)

34. அதற்கு அவர்: மணவாளன் தங்களோடு இருக்கையிலே, நீங்கள் மணவாளனுடைய தோழர்களை உப வாசிக்கச் செய்யக்கூடுமோ?

35. ஆகிலும் மணவாளன் அவர்க ளிடத்திலிருந்து எடுபடுகிற நாட்கள் வரும்; அந்த நாட்களிலே அவர்கள் உபவாசம் பண்ணுவார்கள் என்றார்.

* 35. மத். 9-ம் அதி. 15-ம் வசன வியாக்கியானம் காண்க.

36. பின்னும் அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: (அதா வது) எவனும் புதிய வஸ்திரத்தில் துண் டெடுத்துப் பழைய வஸ்திரத்துக்கு ஒட்டுப்போடமாட்டான்; அப்படிச் செய்தால், அவன் புதியதையும் கிழிக் கிறான், புதியதில் எடுத்த ஒட்டும் பழையதுக்கு ஒவ்வாது.

37. அவ்வண்ணமே, எவனும் புதுத் திராட்சை இரசத்தைப் பழைய சித்தை களில் வார்க்கமாட்டான். அப்படிச் செய்தால், புது இரசமானது சித்தைகளை வெடிப்பிக்கவே, இரசமும் சிந்திப்போம், சித்தைகளும் சேதமாகும்.

38. ஆகையால் புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் வார்க்கவேண்டும். அப் பொழுது இரண்டும் காப்பாற்றப்படும்.

* 38. மத். 9-ம் அதி. 17-ம் வசன வியாக்கியானம் காண்க.

39. அல்லாமலும், ஒருவனும் பழைய இரசத்தைக் குடித்து, உடனே புது இரசத்தை விரும்பமாட்டான். ஏனெ னில் பழைய இரசமே தாவிளை என்பான் என்று திருவுளம்பற்றினார்.

* 39. இந்த உவமைக்கு அர்த்தமாவது: பழைய திராட்சை இரசத்திலும், புது திராட்சை இரசம் அதிக மதுரமும் பலமுமுள்ளதாயிருந்தாலும், பழைய இரசத்தைப் பானம் பண்ணப் பழகினவர்கள் புதிய இரசத்துக்குப் பிரியப்படமாட்டார்களென்பதுபோல், பழைய ஏற்பாட்டின் ஆசாரங்களை அநுசரித்துக்கொண்டுவந்தவர்கள் உடனே புதிய ஏற்பாட்டின் முறைமைப்படிக்கு நடக்கப் பிரியப்படமாட்டார்களென்பதால், அவர்களை மெள்ள மெள்ள அதில் உட்படுத்தவேண்டுமென்று அர்த்தமாம்.