இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

04. தேவ சமூகத்தில் நேர்மையோடுந் தாழ்ச்சியோடும் நடந்து கொள்ள வேண்டும்

(கிறீஸ்துநாதர்) மகனே! நமது சமூகத்தில் நேர்மையாய் நடந்துகொள். கபடற்ற இருதயத்தோடு நம்மை எப்போதுந் தேடு, நமது சமூகத்தில் நேர்மையாய் நடந்து கொள்ளுபவன் தீய தந்திர சோதனகளினின்று காப்பாற்றப் படுவான்; மோசக் காரரிடத்தினின்றும், அக்கிரமிகளுடைய அபத்தங்களினின்றும் அவனச் சத்தியம் பாதுகாக்கும். சத்தியம் உன்னை விடுதலையாக்குமானால் நீ மெய்யாகவே மனச்சுதந்திரமுள்ளவனாயிருப்பாய், மனிதருடைய வீண் பேச்சுக்களப் பற்றிக் கவலை கொள்ளவுமாட்டாய்.

(ஆத்துமம்) ஆண்டவரே, நீர் சொல்வது உண்மைதான், அவ்விதமே நடக்கத் தக்கதாகப் பிரார்த்திக்கிறேன். உமது சத்தியம் எனக்குப் போதிக்கப்படக் கடவது; அது என்னக் காக்கவும் நான் உத்தம கதியை அடைகிற வரைக்கும் என்னைக் காப்பாற்றவும் கடவது. சகல துரிச்சையினின்றும் கிரமந் தப்பின பற்றுதலினின்றும் அந்தச் சத்தியமே என்ன விடுதலையாக்கக் கடவது. அப்போது நான் ஏராள மனச் சுதந்தரத்தோடு உம்முடன் நடந்துகொள்ளுவேன்.

2. (கிறீஸ்துநாதர்) சத்தியம் நாமே; நேர்மையானது எது, நமக்குப் பிரியமுள்ளது எது என உனக்குப் படிப்பிப்போம். வெகு அருவருப்போடும் மனஸ்தாபத்தோடும் உன் பாவங்களே நினத்துக்கொள்; உன் நற்கிரியைகளப் பற்றி நீ பெருமையான எண்ணங் கொள்ளாதே.

3. உள்ளபடி நீ அநேக ஆசாபாசங்களுக்கு ஆளாகி, அவைகளுக்கு உட்பட்ட ஒரு பாவியே! உன்னாலேயே நீ எப்போதும் ஒன்றுமில்லாமையை நோக்கிப் போகிறாய்; சீக்கிரத்தில் தத்தளிக்கிறாய், சீக்கிரத்தில் தைரியமற்றவனாகிறாய், சீக்கிரத்தில் புத்தி மயங்குகிறாய், சீக்கிரத்தில் மனஞ் சோர்ந்து போகிறாய். மகிமை பாராட்டுவதற்கு உன்னிடத்தில் ஒன்றுமில்லை; ஆனால் உன்னைத் தாழ்த்தவோ, அநேக முகாந்தரங்கள் உள்ளன. ஏனெனில் நீ கண்டுபிடிக்கக் கூடுமாயிருப்பதை விட அதிக பலவீனனாாயிருக்கிறாய்.

4. ஆனதால் நீ செய்கிற காரியங்களில் ஒன்றையும் பெரிதாக எண்ணாதே; நித்தியத்திற்கும் நிலைபெற்றிருக் கும் நன்மையையன்றி வேறு பெரிதொன்றுமில்லை, மதிப்புடையதுமில்லை, அதிசயமானதுமில்லை, உந்நதமானதுமில்ல, மதிப்புக்கும் புகழ்ச்சிக்கும் ஆசைக்கும் உரியதுமில்லை என்று நினை. சகலத்துக்கு மேலாக நித்திய சத்தியமானது உனக்குப் பிரியமாயிருக்கக் கடவது. உனது பெருத்த நீசத்தனம் உனக்கு எப்போதும் அருவருப்பா இருக்கக்கடவது. எந்தெந்தப் பொருள் நஷ்டத்தையும் விட உனக்கு அதிக வெறுப்பாயிருக்க வேண்டிய உன் துர்க்குணங்களுக்கும் பாவங்களுக்குமே அதிகமாய்ப் பயப்படு; அவைகளுக்கே அதிகமாய் விலகு. சிலர் நமது சமூகத்தில் நேர்மையாய் நடந்து கொள்ளுவதில்லை; ஆனால் தங்களயும் தங்கள் இரட்சணியத்தையும் கவனிக்காமல், வீண் ஆவலும் கெம்பீரமுங் கொண்டு நமது பரம இரகசியங்கள் அறியவும் தெய்வீக உன்னத காரியங்கஉளக் கண்டுபிடிக்கவும் தேடுகிறார்கள். நாம் அவர்களுடைய நோக்கங்களைத் தடுக்கையில், அவர்கள் தங்கள் ஆங்காரத்தினாலும், வீண் ஆவலினாலும் அடிக்கடி பலத்த தந்திர சோதனைகளிலும் பாவங்களிலும் விழுகிறார்கள்.

5.- நீயோ, என் மகனே, சர்வேசுரனுடைய தீர்வைக்குப் பயப்பட்டு, சர்வ வல்லவருடைய கோபத்திற்கு அஞ்சி நட; உன்னத கடவுளின் செய்கைகளைப் பற்றித் தர்க்கிக்காதே, ஆனால் நீ உன் அக்கிரமங்களச் சோதித்து, எத்தனவிசை தின்மை செய்தாயென்றும் எத்தனவிசை நன்மையை நெகிழ்ந்தாயென்றும் விசாரித்துப் பார். சிலர் ஞானப் புத்தகங்களிலோ, சுரூபங்களிலோ, வெளியடையாளங் களிலோ உருவங்களிலோ பத்தி வைப்பார்கள். சிலர் வாயினால் அடிக்கடி நமது நாமத்தை உச்சரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனதோடு நம்மைத் துதிக்கிறது அபூர்வம். வேறு சிலரோ புத்தித் தெளிவும் இருதயப் பரிசுத்தத்தனமுமுடையவர்களாய், நித்திய காரியங்களில் எந்நேரமும் ஆவலுற்று, உலகப் பேச்சுகளே வருத்தத்தோடு கேட்டு, உலக சீவியத்துக்கு அவசியமானவைகளே விசனத்தோடு நிறைவேற்றி வருகிறார்கள். இவர்கள் சத்தியத்தின் இஸ்பிரீத்தானவர் தங்களிடம் சொல்வதை உணர்கிறார்கள். ஏனென்றால் பிரபஞ்ச காரியங்கள நிந்தித்துப் பரலோக காரியங்கள் நேசிக்கவும், உலகத்தை அசட்டை செய்து இரவும் பகலும் பரலோகத்தை ஆசிக்கவும் அவர் அவர்களுக்குப் போதிக்கிறார்.

யோசனை

பநாம் சர்வ வல்லபமுள்ள கர்த்தர்; நமது சமூகத்தில் நடந்து உத்தமனாயிரு.) விசுவாசிகளின் பிதாவாகிய அபிரகாம் என்பவரிடத்தில் இவ்விதந்தான் ஆண்டவர் பேசினார். சகல உத்தமதனத்தின் மாதிரிகையாகிற சேசுகிறீஸ்துநாதரை அறிந்த கிறீஸ்துவர்களுக்கு இக் கட்டளை அதிக முகாந்தரத்தோடு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனதினால், உங்களுடைய பரலோக பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராயிருங்கள் என்று இவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆச்சரியமான கற்பனை! நீச மனிதன் மீட்கப்பட்டபிறகு எந்த அந்தஸ்திற்கு உயர்த்தப் படுகிறான்! சர்வேசுரனுடைய சமூகத்திற்கு முன்பாகக் கிறீஸ்துவன் எப்பேர்ப்பட்டவனாகிறான்! மாம்ச இச்சைகளின் பாரத்தால் வருத்தப்படும் நாம், சர்வேசுரன் நமக்குக் கட்டளயிடும் உத்தமதனத்தை யடைவதெப்படி? சேசுநாதர் நொமே வழியும் உண்மையும் சீவியமுமாய் இருக்கிறோம் என்கிறார். சர்வேசுரனிடம் கூட்டிப் போகிற வழி. அவர்தான். சர்வேசுரனே உண்மை.

அப்போஸ்தலர் சொல்லுவதுபோல, உண்மையில் நடக்கிறவர்களுக்கு, உண்மையை நிறைவேற்றுகிறவர்களுக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற சீவியம் அவர்தான். ஆனதால் சகலமும் சேசுகிறீஸ்துநாதரிடத்தில்; சகலமும் சேசுகிறீஸ்து நாதரால்; நமது நினைவுகளும் பற்றுதல்களும் சேசுகிறீஸ்து நாதருடைய நினைவுகளோடும், பற்றுதல்களோடும் கிரியைகளோடும் ஒன்றித்திருக்கும் போது சகலமும் பரிசுத்தமாகின்றன. சுதனுடைய உத்தமதனம் பிதாவினுடைய உத்தமதனமானபடியால், சுதனுடன் இவ்வுலகத்தில் ஆரம்பித்துப் பரலோகத்தில் மூடிவுபெறும் நமது ஒன்றிப்பினால் பிதா உத்தமராயிருப் பதுபோல நாமும் உத்தமராகிறோம். இவ்விதமே கிறீஸ்துநாதர்: பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தருளினவர்கள் நாம் ஒன்றாயிருப்பது போல, அவர்களும் ஒன்றாயிருக்கும்படி அவர்களே உமது நாமத்தால் காப்பாற் றியருளும்; சத்தியத்தில் அவர்களப் பரிசுத்தமாக்கும்;

அவர்கள் சத்தியத்தில் பரிசுத்தமாகும்படி நான் அவர்களுக்காக என்னைப் பரிசுத்தமாக்குகிறேன் என்று வேண்டிக் கொண்டார். ஆனால் திவ்விய இரட்சகருடைய அளவில்லாத பேறு பலன்களுக்கு நம்மைப் பங்காளிகளாக உயர்த்தும் இந்த மேலான ஒன்றிப்பு எவ்வளவாகு மென்றால், நம்மை நாமே சர்வேசுரனைப் பற்றிப் பலியாக ஒப்புக்கொடுக்கிற அளவாகத்தான்; அதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது தாழ்ச்சியே அதின் அளவு. நமது நீசத்தனத்தை நாம் கண்டு அறிவதினாலும், உலக காரியங்கள் வெறுப்பதினாலும் சர்வேசுரனுடைய சமூகத்தில் நம்மைத் தாழ்த்துவதினாலும் ஒன்றிப்பு உண்டாகுமே தவிர மற்றபடியல்ல. எங்கே சுய இச்சையுண்டோ , எங்கே சுபாவீக நாட்டம் உயிரோடிருக்கின்றதோ, அங்கே சேசுநாதருடன் முழு ஒன்றிப்பிராது. சுதன் பிதாவோடொன்றித்திருப்பது போல, நாமும் சுதனோடொன்றித்திருக்க வேண்டு மானால், நாமும் சத்தியத்தில் பரிசுத்தமாக்கப் பட வேண்டுமானால், நமக்கும், நமதாசைகளுக்கும், நமது நாட்டங்களுக்கும் நமது மனதுக்கும் நமது குருட்டுப் புத்திக்கும் நாம் மரித்தவர்களாக வேண்டியது. மெய்யான சீவியத்தையும், சர்வேசுரனையும், அவருடைய பரிசுத்ததனத்தையும் அவருடைய நித்திய சத்தியத்தையும் அடையச் செய்யும் மரணமே பாக்கியமான மரணம்.