இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 04

சேசுநாதர் நாற்பது நாள் உபவாசமாயிருந்து பசாசினால் சோதிக்கப்பட்டதும், நசரேத்தூரில் ஜெப ஆலயத்தில் பிரசங்கித்ததும், கப்பர்நாவும் ஊரில் பேய்பிடித்தவனையும், இராயப்பருடைய மாமியாளையும், வேறு பல வியாதிக்காரர்களையும் சொஸ்தப்படுத்தினதும்.

1. சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவினால் நிறைந்தவராய் யோர்தான் நதியைவிட்டுத் திரும்பி, இஸ்பிரீத்துவினால் வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டு , (மத். 4:1; மாற். 1:12.)

2. அங்கே நாற்பது நாளிருந்து, பசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாமலிருந்தார்; அந்நாட்கள் முடிந்ததும், அவருக்குப் பசியுண்டாயிற்று.

3. அப்பொழுது, பசாசு அவரைப் பார்த்து: நீர் தேவசுதனாகில், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றது.

4. சேசுநாதர் அதற்கு மாறுத்தாரமாக: மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, சர்வேசுரனுடைய எந்த வார்த்தையினாலும் பிழைக்கிறானென்று எழுதப்பட்டிருக்கிறது என்றார். (உபாக. 8:3; மத். 4:4.)

5. பின்பு பசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், ஒரு க்ஷணப் பொழுதிலே உலக இராச்சியங்களையெல்லாம் அவருக்குக் காண் பித்து:

6. இவைகளின்மேல் சர்வ அதிகா ரத்தையும், இவைகளின் மகிமையை யும் உமக்குத் தருவேன். ஏனெனில், இவைகள் எனக்குக் கையளிக்கப்பட் டிருக்கின்றன; எனக்கு இஷ்டமான வனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். 7. ஆதலால் நீர் என் முன்பாக விழுந்து நமஸ்கரித்தால், இவையெல் லாம் உம்முடையதாயிருக்கும் என் றது.

8. அதற்கு சேசுநாதர் மாறுத்தார் மாக: உன் தேவனாகிய ஆண்டவரை நமஸ்கரித்து, அவர் ஒருவரையே சேவிப்பாயாக என்று எழுதியிருக் கிறதே என்றார். (உபாக. 6:13; 10:20.)

9. மீளவும் பசாசு அவரை ஜெருச லேம் நகருக்குக் கொண்டுபோய், தேவா லயத்தின் சிகரத்தின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவசுதனானால், இங்கி ருந்து கீழே குதியும்,

10. ஏனெனில் உம்மைக் காப்பாற் றும் பொருட்டு அவர் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட் டளையிட்டிருக்கிறார் என்றும்,

11. உமது பாதம் ஒருவேளை கல் லில் மோதாதபடிக்கு அவர்கள் தங்கள் கரங்களிலே உம்மை ஏந்திக் கொள் வார்களென்றும் எழுதப்பட்டிருக்கிறது என்ற து. (சங். 90:11.)

12. சேசுநாதர் அதற்கு பிரத்தியத் தாரமாக: உன் தேவனாகிய ஆண்டவ ரைச் சோதியாதிருப்பாயாக என்று சொல்லப்பட்டிருக்கிறதே என்றார். (உபாக. 6:16.)

13. அன்றியும் சோதனையெல்லாம் முடிந்த பின்பு, பசாசு சிலகாலத்துக்கு அவரை விட்டு அகன்றுபோய்விட்டது.

* 13. பசாசு சில காலத்துக்கு அவரை விட்டுப்போனது என்கும்போது அவருடைய பாடுகளின் காலம் வரையில் சோதிக்க வரவில்லை என்பதாகத் தோன்றுகிறது.

14. பின்பு சேசுநாதர் இஸ்பிரீத்து சாந்துவின் வல்லமையால் கலிலேயா நாட்டுக்குத் திரும்பிவந்தார். அவரு டைய கீர்த்தியும் அத்தேசமெங்கும் பரம்பிற்று. (மத். 4:12; மாற். 1:14.)

15. ஏனெனில் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதே சித்து வந்ததுமல்லாமல், எல்லோராலும் மகிமைப்படுத்தவும்பட்டார்.

16. பின்பு தாம் வளர்ந்த நசரேத் தூருக்கு அவர் வந்து, தமது வழக்கத்தின் படி ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். (மத்.13:54-58; மாற். 6:1-6.)

17. அப்பொழுது இசையாஸ் தீர்க்கதரிசியின் ஆகமம் அவருக்குக் கொடுக்கப்பட, அவர் புஸ்தகத்தை விரித்தபோது தென்பட்ட இடத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:

18. ஆண்டவருடைய இஸ்பிரீத்து வானவர் என்மேலிருக்கிறார். ஆதலால் அவர் என்னை அபிஷேகம்பண்ணித் தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங் கிக்கவும், இருதயம் நொறுங்கினவர்க ளைக் குணப்படுத்தவும்,

19. சிறைப்பட்டவர்களுக்கு விடு தலையையும், குருடருக்குப் பார்வை யையும் பிரசித்தப்படுத்தவும், மனமும் டைந்தவர்களைச் சுயாதீனராய் அனுப்பி விடவும், ஆண்டவருக்குப் பிரியமான வருஷத்தையும், பிரதிபலன் நாளையும் பிரசங்கிக்கவும் என்னை அனுப்பினார் என்பதாம். (இசை. 61:1.)

20. பின்னும் அவர் புஸ்தகத்தைச் சுருட்டிப் பரிசாரகனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தன.

* 20. புஸ்தகத்தைச் சுருட்டி :- அக்காலத்தில் கந்தைத் துணிகளால் காகிதம் செய்கிற வகை தெரியாதிருந்தது. அப்போது தோலைப் பதனிட்டு, அதில் எழுதிச் சுருட்டிக் கட்டி வைத்திருப்பார்கள்.

21. அப்போது சேசுநாதர் அவர்களோடு பேசத் தொடங்கி: இன்று இந்த வேதவாக்கியம் உங்கள் காதுகளில் விழுந்து, நிறைவேறிற்று என்றார்.

22. சகலரும் அவருக்குச் சாட்சி கொடுத்து, அவர் வாயிலிருந்து புறப்பட்ட அருள்வாக்கியங்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவர் சூசையின் மகன் அல்லவோ என்றார்கள். (மத். 13:54, 55; மாற். 6:2, 3; அரு. 6:42.)

23. அப்போது அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னையே செளக்கியப்படுத்திக்கொள் என்கிற பழமொழியை எனக்குச் சொல்லி, கப்பர்நாவும் ஊரில் எவ்வளவோ பலத்த காரியங்கள் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டோம்; அவைகளை உன் ஜென்ம ஊராகிய இவ்விடத்திலும் செய்யென்று சந்தேகமற எனக்குச் சொல்லுவீர்கள் என்றார். (மத். 4:23.)

24. மேலும் அவர் திரு வுளம் பற் றினதாவது: எந்தத் தீர்க்கதரிசியும் தன் ஜென்ம நாட்டில் அங்கீகரிக்கப் படானென்று மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன். (மத். 13:57.)

25. எலியாசுடைய நாட்களிலே மூன்று வருஷமும், ஆறு மாதமும் வானம் அடைபட்டுத் தேசமெங்கும் மிகுந்த பஞ்சமுண்டானபோது, இஸ்ரா யேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். (3 அரச. 17:9; 18:1; இயா . 5:17.)

26. ஆயினும் சீதோன் நாட்டில் சரேப்தாவூரிலுள்ள ஓர் கைம்பெண் ணிடத்திலேயன்றி, அவர்களுக்குள் வேறே யாரிடத்திலும் எலியாஸ் அனுப் பப்படவில்லை . (3 அரச. 17:9.)

27. அவ்வண்ணமே எலிசேயு என் னும் தீர்க்கதரிசியின் காலத்திலே, இஸ்ராயேலருக்குள் அநேகம் குஷ்ட ரோகிகள் இருந்தார்கள். ஆயினும் சீரியாதேசத்தானாகிய நாமானொழிய, அவர்களில் வேறொருவனும் சுத்தமாக் கப்படவில்லையென்று சத்தியப்பிர காரம் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (4 அரச. 5:14.)

28. இதைக்கேட்டு ஜெப ஆலயத்தி லிருந்த யாவரும் கோபம் நிறைந்த வர்களாய்,

29. எழுந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப் பட்டிருந்த மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடும் படி அவ்விடமட்டும் அவரைக் கொண்டு போனார்கள்.

30. அவரோவெனில் அவர்கள் நடுவே நடந்து, போய்விட்டார்.

31. பின்பு அவர் கலிலேயா நாட் டின் பட்டணமாகிய கப்பர்நாவும் நக ருக்குப் போய், அங்கே ஓய்வுநாட் களில் அவர்களுக்குப் போதித்து வந்தார். (மத். 4:13; மாற். 1:21-28.)

32. அவருடைய வாக்கியம் அதி காரமுள்ளதாயிருந்தபடியால், அவரு டைய போதகத்தைப்பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். (மத். 7:28.)

33. அப்பொழுது, ஜெப ஆலயத் தில் அசுத்தப் பேய் பிடித்த ஒரு மனி தனிருந்தான். அவன் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு : (மாற். 1:23.)

34. நசரேனுவாகிய சேசுவே! என் னைச் சும்மாவிடும்; எங்களுக்கும் உமக் கும் என்ன? எங்களைக் கெடுக்க வந் தீரோ? உம்மை இன்னாரென்று அறி வேன்; நீர் சர்வேசுரனுடைய பரிசுத்தர் என்றான்.

35. சேசுநாதர் அவனை அதட்டி: நீ பேசாதே, இந்த மனிதனை விட்டுப் போ என்றார். அப்பொழுது பேய் அவனைச் (சபை) நடுவில் விழத்தாட்டி, அவனுக்கு ஒரு பொல்லாப்புஞ் செய் யாமல், அவனை விட்டுப்போயிற்று.

36. இதனாலே எல்லோரும் திகி லடைந்து, ஒருவர் ஒருவரை நோக்கி: இது என்ன வாக்கு? வல்லமையோடும் அதிகாரத்தோடும் பேய்களுக்கும் கட்ட ளையிடுகிறார் அவைகளும் ஓடிப் போகின்றதே என்பார்கள்.

37. இதனிமித்தம் அவருடைய கீர்த்தி அந்நாட்டில் எவ்விடத்திலும் பரம்பிற்று.

38. பின்பு சேசுநாதர் ஜெப ஆலயத்தை விட்டெழுந்து, சீமோன் என்பவரு டைய வீட்டுக்குள் வந்தார். அங்கே சீமோனுடைய மாமியாள் கடுங்காய்ச் சலாய்க் கிடந்தமையால் அவளுக்காக அவரை மன்றடினார்கள். (மத். 8:14-16; மாற் 1:29-34.)

39. அவர் அவள் பக்கமாய்க் குனிந்து நின்று, காய்ச்சலுக்குக் கட்டளையிட் டார்; அது அவளைவிட்டு நீங்கிற்று. உடனே அவள் எழுந்து அவர்களுக் குப் பணிவிடை செய்தாள்.

40. பின்பு சூரியன் அஸ்தமித்த போது, சகலரும் தங்களுக்குள்ளே பற்பல பிணிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரும் ஒவ்வொருவர் பேரிலும் தம்முடைய கைகளை வைத்து அவர்களைச் செளக்கியப்படுத்தினார்.

41. அநேகரிடமிருந்த பசாசுகளும்: நீர் சர்வேசுரனுடைய குமாரனென்று சத்தமிட்டு சொல்லிக்கொண்டு, அவர் களை விட்டுப்போயின. ஆயினும், அவரைக் கிறீஸ்துநாதரென்று அவைகள் அறிந்திருந்தபடியால், அவர் அவைகள் ளைப் பேசவொட்டாமல், அதட்டினார். (மாற். 1:34.)

42. பொழுது விடியவே, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்துக் குப் போனார். ஜனங்கள் அவரைக் தேடிக்கொண்டு, அவரிடம் வந்து, அவர் தங்களைவிட்டுப் போகாதபடி அவரை நிறுத்திக்கொள்ளப் பார்த்தார்கள். (மாற். 1:35-38.)

43. அவர் அவர்களை நோக்கி: நான் மற்றப் பட்டணங்களுக்கும் சர்வேசுர னுடைய இராட்சியத்தைப் பிரசங்கிக்க வேண்டும்; ஏனெனில் அதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றார்.

44. பின்னும் அவர் கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கித்துக்கொண்டுவந்தார்.