இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 03

அர்ச். அருளப்பர் ஆயக்காரர், சேவகர் முதலிய ஜனங்களுக்குப் போதித்ததும், கிறீஸ்துநாதரைக் குறித்துச் சாட்சி சொல்லி, அவருக்கு ஞானஸ்நானங் கொடுத்ததும், ஏரோதென்பவனால் சிறையில் வைக்கப்பட்டதும்; கிறீஸ்துநாதருடைய வம்ச வழியுமாவன:

1. திபேரியூ என்னும் செசாருடைய இராச்சியபாரத்தின் பதினைந்தாம் வரு ஷத்திலே, போஞ்சுபிலாத்து என்பவன் யூதேயா தேசத்துக்கு அதிபதியாகவும், எரோது என்பவன் கலிலேயா நாட்டின் சதுர்த்த பாகபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரையா நாட்டுக்கும், திராக்கோனிதி நாட்டுக்கும் சதுர்த்த பாகபதியாகவும், லிசினியாஸ் என்பவன் அபிலினே நாட்டுக்குச் சதுர்த்த பாகபதியாகவும்,

* 1. சதுர்த்தபாகபதி என்பது ஒரு தேசத்தில் நாலிலொரு பங்குக்கு அதிபதி என்றர்த்தமாம்.

2. அன்னாஸ் கைப்பாஸ் என்பவர் கள் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில், வனாந்தரத்திலே சக்கரியாஸ் குமாரனான அருளப்ப ருக்கு ஆண்டவருடைய வாக்கியம் உண்டாயிற்று. (அப். 4:6.)

* 2. ஆண்டவருடைய வாக்கியம் அவருக்குண்டாயிற்று என்பது அவர் வனாந்தரத் தைவிட்டு, நாட்டுக்குள்ளே போய் இரட்சகருக்கு வழியாயத்தம் செய்யத்தக்கதாகத் தவத்தைப் பிரசங்கிக்க ஆண்டவரால் கற்பிக்கப்பட்டாரென்று அர்த்தமாம்.

3-4. அப்பொழுது அவர் யோர்தான் நதிக்கடுத்த நாடெங்கும் வந்து, இசை யாஸ் தீர்க்கதரிசியின் வாக்கியாகமத் தில் எழுதியிருக்கிற பிரகாரம், பாவ விமோசனத்துக்காகத் தவத்தின் ஞானஸ் நானத்தைப் பிரசங்கித்தார். (அதில் எழுதியிருப்பதேதெனில்): வனாந்தரத்திலே சப்திக்கிறவனுடைய குரலொலி (இதோ)! ஆண்டவருடைய வழியை முஸ்திப்புச் செய்யுங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வையாக்குங்கள்.

5. பள்ளத்தாக்கெல்லாம் தூர்க்கப் படும்; மலை குன்றெல்லாம் தாழ்த்தப் படும்; கோணலானவைகள் நேராக வும், கரடானவைகள் சமவழிகளாகவு மிருக்கும்.

6. எந்த மனிதனும் சர்வேசுரனு டைய இரட்சண்யத்தைக் காண்பான் என்பதாம். (மத். 3:1; மாற். 1:4; இசை. 40:3; அரு. 1:23.)

7. அவ்வண்ணமே அவர் தம்மிடத் தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டு வந்த திரளான ஜனங்களைப் பார்த்து: விரியன் பாம்புக்குட்டிகளே! வரப்போகிற கோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? (மத். 3:7; 23:33.)

8. ஆகையால் தவத்துக்கு ஏற்ற பலனைக்கொடுங்கள்; எங்களுக்குப் பிதாவாக அபிரகாம் இருக்கிறாரென்று சொல்லத் தொடங்காதேயுங்கள். ஏனென்றால் சர்வேசுரன் இந்தக் கல்லுகளினின்று அபிரகாமுக்குப் புத்தி ரர்களைப் பிறப்பிக்க வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9. இப்பொழுதே, மரங்களின் வேர ருகில் கோடரி போடப்பட்டிருக்கின் றது. ஆகையால் நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினி யிலே போடப்படும் என்றார்.

10. அப்போது ஜனங்கள்: அப்படி யானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரைக் கேட்டார் கள்.

11. அவர் அவர்களுக்கு மாறுத்தார மாக: இரண்டு சட்டைகளையுடை யவன் இல்லாதவனுக்குக் கொடுப்பா னாக; ஆகாரத்தையுடையவனும் அவ் வண்ணம் செய்வானாக என்றார். (இயா . 2:15, 16; 1 அரு. 3:17.)

12. பின்பு ஆயக்காரரும் ஞானஸ் நானம் பெற வந்து: போதகரே! நாங் கள் என்ன செய்யவேண்டியது என்று அவரைக் கேட்டார்கள்.

13. அவரோ, அவர்களை நோக்கி: உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிற தற்கு அதிகமாய் ஒன்றும் செய்யா திருங்கள் என்றார்.

14. பிறகு போர்ச்சேவகரும் அவரை வினாவி: நாங்களும் செய்யவேண்டிய தென்ன என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் ஒருவரையும் பலவந்தஞ் செய்யாதேயுங்கள்; அபாண் டஞ் சொல்லாதேயுங்கள்; உங்கள் சம்பளத்தைக்கொண்டு மனத்திருப்தியா யிருங்கள் என்றார்.

15. அப்படியிருக்க, ஜனங்களெல் லோரும் அருளப்பரைக்குறித்து ஒரு வேளை இவர்தான் கிறீஸ்துநாதரோ என்று எண்ணி, தங்கள் இருதயங் களிலே யோசித்துக்கொண்டிருக்கையில்,

16. அருளப்பர் பிரத்தியுத்தாரமாக எல்லோரையும் நோக்கிச் சொன்ன தாவது: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறது மெய்யே; ஆனால் என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார்; அவருடைய பாதரட்சை களின் வாரை அவிழ்க்க நான் பாத்திரவா னல்ல; அவரே உங்களுக்கு இஸ்பிரீத்து சாந்துவினாலும் அக்கினியினாலும் ஞான ஸ்நானங் கொடுப்பார். (மத். 3:11; மாற். 1:7; அரு. 1:26; அப். 1:5; 11:16; 19:4.)

* 16. அந்த அக்கினி பெந்தக்கோஸ்த் என்ற இஸ் பிரீத்துசாந்து திருநாளிலே அப்போஸ்தலர்கள் பேரில் இறங்கின அக்கினியும், ஆத்துமங்களைச் சுத்திகரித்துத் தேவசிநேகத்தால் எரியப்பண்ணுகிற இஷ்டப்பிரசாதமாகிற அக்கினியுந்தான்.

17. அவருடைய சுளகு அவர் கையில் லிருக்கிறது; அவர் தமது களத்தைத் தூற்றி, கோதுமையைக் களஞ்சியத் திலே சேர்த்துக்கொள்ளுவார்; பதர்க ளையோ அவியாத அக்கினியிலே சுட்டெரிப்பார் என்றார். (மத். 3:12.)

18. மற்றும் அநேக நல்ல புத்திகளை யும் சொல்லி ஜனங்களுக்குப் போதித்தார்.

19. அப்படியிருக்க, இராச்சியத்தின் சதுர்த்தபாகபதியாகிய ஏரோது என்ப வன் தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாளைப்பற்றியும், தான் செய் திருந்த சகல பொல்லாங்குகளைப் பற்றி யும் அருளப்பரால் கண்டிக்கப்பட்ட போது, (மத். 14:3, 4; மாற். 6:17.)

20. அவன் அருளப்பரைச் சிறையில் அடைத்து, (தான் செய்த) மற்ற அக்கிர மங்களோடு இதனையும் கூட்டினான்.

21. ஜனங்களெல்லோரும் ஞானஸ்நானம் பெறுகிறபோது சம்பவித்த தேதெனில், சேசுநாதரும் ஞானஸ் நானம் பெற்று ஜெபஞ்செய்கையில், பரமண்டலம் திறக்கப்பட்டு, (மத். 3:13-17; மாற் 1:10; அரு. 1:32-34.)

22. இஸ்பிரீத்துசாந்துவானவர் தேக வடிவாய் புறாவைப்போல் அவர்மேல் இறங்க, பரலோகத்தினின்று ஓர் குர லொலியும் உண்டாகி: நீரே நமது நேச குமாரன்; உமது பேரில் பிரியமாயிருக்கி றோம் என்று சப்தித்தது. (மத். 3:17; 17:5: லூக். 9:35; 2 இரா. 1:17.)

23. அப்போது சேசுநாதருக்கு ஏறக் குறைய முப்பது பிராயமாகத் துவக் கினதுமன்றி, அவர் சூசையப்பருக்குக் குமாரனாக எண்ணவும் பட்டிருந்தார். சூசையப்பர் ஏலியினின்றும், ஏலி மத்தாத்தினின்றும்,

24. மத்தாத் லேவியினின்றும், லேவி மெல்க்கியினின்றும், மெ ல்க் கி ஜான்னையினின்றும், ஜான்னை யோசேப்பினின்றும்,

25. யோசேப் மத்தாத்தியாவினின் றும், மத்தாத்தியா ஆமோஸினின்றும், ஆமோஸ் நாகூமினின்றும், நாகூம் எஸ்லியினின்றும், எஸ்லி நாகேயி னின்றும்,

26. நாகே மாகாத்தினின்றும், மாகாத் மத்தாத்தியாவினின்றும், மத்தாத்தியா செமேயினின்றும், செமேய் யோசேப்பி னின்றும், யோசேப் யூதாவினின்றும்,

27. யூதா யோவான்னாவினின்றும், யோவான்னா ரெஸாவினின்றும், ரெஸா சொரோபாபெலினின்றும், சொரோ பாபெல் சலாத்தியேலினின்றும், சலாத்தி யேல் நேரியினின்றும், (1 நாளா. 3:17.)

28. நேரி மெல்க்கியினின்றும், மெல்க்கி ஆத்தியினின்றும், ஆத்தி கோசனினின்றும் கோசன் எல்மாதனி னின்றும், எல்மாதன் ஏரினின்றும்,

29. ஏர் ஜெசுவினின்றும், ஜெசு எலியேசரினின்றும், எலியேசர் யோரிமி னின்றும், போரிம் மத்தாத்தினின்றும், மத்தாத் லேவியினின்றும்,

30. லேவி சிமையோனினின்றும், சிமையோன் யூதாவினின்றும், யூதா யோசேப்பினின்றும், யோசேப் யோனா வினின்றும் யோனா எலியாக்கிமினின் றும்,

31. எலியாக்கிம் மெலெயாவினின் றும், மெலெயா மென்னாவினின்றும், மென்னா மத்தாத்தாவினின்றும், மத் தாத்தா நாத்தானினின்றும், நாத்தான் தாவீதினின்றும், (2 அரச. 5:14.)

32. தாவீது ஜெசேயினின்றும், ஜெசே ஒபேதியினின்றும், ஓபேது போவோஸினின்றும், போவோஸ் சலோமோனினின்றும், சலோமோன் நாஸ்ஸோனினின்றும், (1 நாளா. 2:1-15.)

33. நாஸ்ஸோன் அபினதாபினின் றும், அபினதாப் ஆறாமினின்றும், ஆறாம் எசரோனினின்றும், எசரோன் பாரேஸினின்றும், பாரேஸ் யூதாவி னின்றும், (ஆதி. 29:35.)

34. யூதா யாக்கோபினின்றும், யாக்கோப் ஈசாக்கினின்றும், ஈசாக் அபிரகாமினின்றும், அபிரகாம் தாரே யினின்றும், தாரே நாக்கோரினின்றும்,

35. நாக்கோர் சாளுக்கினின்றும், சாரூக் இராகாவினின்றும், இராகாவு பாலேக்கினின்றும், பாலேக் ஏபேரி னின்றும், ஏபேர் சாலேயினின்றும்,

36. சாலே காயினானினின்றும், காயினான் அற்பக்சாதினின்றும், அற் பக்சாத் சேமினின்றும், சேம் நோவா வினின்றும், நோவா லாமேக்கினின்றும்,

37. லாமேக் மத்துசலேயினின்றும், மத்துசலே ஏனோக்கினின்றும், ஏனோக் ஜாரேத்தினின்றும், ஜாரேத் மலாலே யேலினின்றும், மலாலேயேல் காயி னானினின்றும், (ஆதி. 5:3-31.)

38. காயினான் எனோஸினின்றும், எனோஸ் சேத்தினின்றும், சேத் ஆதா மினின்றும், ஆதாம் கடவுளினின்றும் உண்டானவர்களாம். (ஆதி. 11:10-26.)

* 38. சேத் ஆதாமினின்றும், ஆதாம் கடவுளினின்றும் உண்டானவர்களென்று சொல்லும்போது, சேத் வரையிலுள்ளவர்கள் தங்கள் பிறப்பு வகையால் உண்டான வர்களென்றும், ஆதாமோ கடவுளினின்றும் சிருஷ்டிப்பு முறையால் உண்டானவரென் றும் அறிக. இந்த வம்ச வரிசைக்கும் அர்ச். மத்தேயு கொடுத்த வம்ச வரிசைக்கும் சில வித்தியாசங்கள் உண்டாம். அர்ச். மத்தேயு தாவீது மகன் சாலோமோன் வழி யாக அர்ச். சூசையப்பரைப் பெற்ற யாக்கோபு வரிசையிலே கோத்திர வழியை எடுத்துக் காட்டுகிறார். அர்ச். லூக்காஸோவென்றால், தாவீதின் மற்றொரு குமாரனாகிய நாத்தான் வழியாக அர்ச். சூசையப்பரை வளர்த்த தகப்பனாகிய ஏலியின் வரிசையிலே வம்ச வழியை எழுதிக் காண்பிக்கிறார். எப்படியிருந்தாலும் இருகிளையும் தாவீதின் பிதிர்வழிதான். அர்ச் லூக்காஸ் அர்ச். சூசையப்பரை ஏலியின் மகனாக வரைந்ததற்கு வேதபாரகர்கள் பல முகாந்தரஞ் சொல்லுகிறார்கள். அவைகளில் இரண்டு முகாந் தரங்களை மாத்திரம் இவ்விடத்தில் எடுத்துக் காட்டுகிறேன். 1-வது, ஏலி, யாக்கோபு இருவரும் கூடப்பிறந்த சகோதரர் முறையில், ஏலி என்பவர் கலியாணஞ் செய்து பிள்ளையின்றி இறந்துபோயிருந்தால், அவர் பெண்சாதியைத் தேவகட்டளைப்படிக்கு, யாக்கோபு கலியாணம் செய்து பிள்ளையைப் பெற்றால், அந்தப் பிள்ளையை யாக்கோபின் மகனென்றாவது ஏலியின் மகனென்றாவது சொல்லலாம். 2-வது, யாக்கோபு சூசையப் பரைப் பெற்றபின் இறந்துபோயிருந்தால், ஏலி அவரை வளர்த்திருக்கலாம். அப்படியிருந்தால் சூசையப்பரை ஏலியின் மகனென்று சொல்லவும் நியாயமுண்டு.