இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

03. சமாதான குணமுள்ள நீதிமான் பேரில்

1. முதலில் நீ சமாதானத்தில் நிலைத்திரு. பிற்பாடு மற்றவர் களைச் சமாதானப்படுத்தலாம். கல்விமானைவிட சமாதான குணமுள் ளவன் பிறருக்கு உதவியாயிருப்பான். மூர்க்கக் குணமுள்ளவன் நன்மையை முதலாய்த் தின்மையாய் மாற்றி விடுகிறான். அவன் மற்றவர்கள் தவறி நடக்கிறார்கள் என்று எளிதாய் நினைக்கிறான். தயவும் சமாதானமும் உள்ளவனோ எல்லாவற்றையும் நன்மையாய் மாற்றி விடுகிறான். சமாதானத்தில் நிலையாயிருக்கிறான்; எவர் பேரிலும் சந்தேகப்படுவதில்லை. சந்தேகமுற்று ஏக்கமுற்று இருப்பவனோ பல சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுகிறான். தானும் அமைதியாயிருப்பதில்லை, பிறரையும் அமைதியாயிருக்க விடுவ தில்லை. சொல்லத் தகாததை அடிக்கடி சொல்கிறான், தான் செய்யத் தகுதியானதைச் செய்யாமல் விடுகிறான்; மற்றவர்கள் செய்ய வேண்டியதென்னவென்று கவனிக்கிறான். தான் செய்ய வேண்டிய தையோ அசட்டை பண்ணுகிறான். ஆகையால் நீ முதலில் உன்பேரிலேயே ஜாக்கிரதை எடுத்துக்கொள்; பிற்பாடு பிறர்மட்டில் ஜாக்கிரதை எடுத்துக்கொள்வது நியாயத்திற்கு உகந்ததாகும். 

2. உன் செயல்களைப் பற்றி மிகச் சாமர்த்தியமாய்ச் சாக்குப் போக்குச் சொல்ல நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்கள் சொல்லும் சாக்குப்போக்குகளையோ நீ ஏற்றுக்கொள்வதில்லை. நீ உன்பேரில் தானே குற்றஞ்சாட்டி உன் சகோதரனை மன்னிப்பது அதிக நியாய மாகும். பிறர் உன்னைச் சகித்துவர வேண்டுமானால் நீயும் அயலானைச் சகித்துவா. தன் பேரிலேயே தவிர மற்றெவர்பேரிலும் கோபிக்க வாவது அல்லது எரிந்து விழவாவது அறியாத மெய்யான சிநேகத் தினின்றும் தாழ்ச்சியினின்றும் நீ எவ்வளவு தூரத்தில் இன்னுமிருக் கிறாய் என்று பார். நல்லவர்களோடும் சாந்த குணமுள்ளவர் களோடும் சகவாசம் பண்ணுவது கடினமல்ல, ஏனெனில் இது எல்லோருக்கும் இயல்பிலே பிரியமான காரியம். ஒவ்வொருவனும் சமாதானத்தைக் கொள்ளப் பிரியப்படுகிறான், தன் கருத்துக்கு இசைந்தவர்களை அதிகமாக நேசிக்கிறான். ஆனால் முரடரோடும், பொல்லாதவர்களோடும், அடங்காதவர்களோடும், விரோதம் செய்பவர் களோடும் சமாதானமாய்ச் சீவிக்கக் கூடுமாயிருப்பது பெரிய அனுக்கிரகமும் புகழ்ச்சிக்குரிய வீரத் தன்மையுள்ள செயலுமாம்.

3. சிலர் தாங்களும் சமாதானத்தில் நிலைத்திருக்கின்றார்கள், மற்றவர்களோடும் சமாதானமாய்ச் சீவித்து வருகிறார்கள். வேறு சிலரோ தாங்களும் சமாதானத்தில் இருப்பதில்லை, மற்றவர்களையும் சமாதானத்தில் விடுவதில்லை; மற்றவர்களுக்குத் துன்பமாய் இருப் பதோடுகூட, தங்களுக்கே எப்போதும் அதிக துன்பமாகவுமிருக் கிறார்கள். தாங்களும் சமாதானத்தில் நிலைத்திருந்து மற்றவர்களையும் சமாதானத்திற்குக் கொண்டுவர முயற்சிக்கிறவர்களும் சிலர் உள்ளனர். மேலும் இந்த நிர்ப்பாக்கியமான ஜீவியத்தில், நமது முழு சமாதானம் எதில் அடங்கியிருக்கிறதென்றால், இடையூறுகளை உணராமல் இருப்பதிலல்ல, அவைகளைச் தாழ்ச்சியோடு சகிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. அதிக நன்றாய்ச் சகிக்கத் தெரிந்தவன் அதிக சமாதானமுள்ளவனாய் இருப்பான். அவனே தன்னை வென்றவன், உலக எஜமான்; கிறீஸ்துநாதருடைய சிநேகிதனும் பரலோக உரிமையாளனும் அவனே. 

யோசனை

“சமாதானமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில்; சர்வேசுரனுடைய மக்கள் என்று அழைக்கப்படுவார்கள்.” இந்த உன்னத நாமத்தின் பெருமையை நன்றாய்க் கண்டுபிடி. சமாதானம் உத்தம ஒழுங்காய் இருக்கிறது. அதற்கு விரோதமாய்ச் சண்டை, சச்சரவு, விரோதம், கலகம், கட்சி, இவை யாவும் பாவத்திலும் ஒழுங்கீனத்தினாலும் உண்டாகின்றன. பாவம் இருக்கும் இடத்தில் சமாதானமில்லை. நினைவு, பற்றுதல், மனது, யாரிடத்தில் ஒழுங்குப்படி, உண்மைப்படி, சர்வேசுரனுடைய சித்தப்படி இல்லையோ, அவனிடம் சமாதானம் இராது. சர்வேசுரனுடைய கற்பனைகளுக்கும் போதகங்களுக்கும் விரோதமான கொள்கைகளும் படிப்பினைகளும் எந்தக் கூட்டங்களில், சபைகளில் இருக்கின்றனவோ, அவைகளில் சமாதானம் இராது. இந்தப் போதகங்களைச் சொற்பமாய் முதலாய் மீறுகிற மனிதர்கள் உடனே தண்டிக்கப்படுகிறார்கள், அவர்களிடம் சமாதானமில்லை; அமைதி இல்லை; நாலாபக்கமும் அலைக்கழிக்கப் படுவார்கள்; கொலைபாதகனான காயினைப் போலப் பயப்படுகிறார்கள். சர்வேசுரனுடைய மக்களிடம் மட்டுமே சமாதானத்தைக் காணலாம்; அவர்களே அதையனுபவிக்கிறார்கள். நமது ஆதித் தகப்பன் மாசற்றதனத்துடன் வாசம் செய்துவந்த சிங்காரத்தோப்பில் பாய்ந்த நதிகளைப் போல, அவர்களுடைய சமாதானமும் மற்ற மனிதரிடத்தில் பாய்ந்து ஓடுகின்றது. கடைசிநேரம் வரும்போது சமாதானம்தான் நிலைத்திருக்கும். ஏனெனில், “சர்வேசுரனுடைய இராச்சியம் நீதியும், சமாதானமும் நிறைந்திருக்கின்றது”. சர்வேசுர னுடைய மக்களே! “உலகத்தின் தொடக்கம் முதற்கொண்டு உங்களுக்கு ஆயத்தம் செய்யப்பட்ட இராச்சியத்தில் பிரவேசியுங்கள்.”