இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 02

கிறீஸ்துநாதர் பிறந்து, விருத்தசேதனம் செய்யப்பட்டதும், மரியம்மாளின் சுத்திகரச் சடங்கும், சிமையோனும் விதவை அன்னம்மாளும் சொன்ன தீர்க்கதரிசனங்களும், கிறீஸ்துநாதர் சாஸ்திரிகள் நடுவில் சம்பாஷித்ததும்.

1. அந்நாட்களிலே சம்பவித்ததே தெனில்: உலகமுழுமையும் குடிக்கணக்கு எழுதப்படும்படியாக செசார் அகுஸ்துஸ் இராயனிடத்திலிருந்து ஓர் கட்டளை பிறந்தது.

* 1. இங்கே சொல்லப்பட்ட செசார் அகுஸ்துஸ் என்பவன் உரோமாபுரி இராய னாமே. அவனுடைய நாளிலே உரோமருடைய செங்கோன்மை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்னும் மூன்று கண்டங்களிலுஞ் செலுத்தப்பட்டிருந்தது. அவர்களுடைய ஆளுகைக்குட்பட்ட தேசங்கள் மாத்திரம் அக்காலத்திலே பிரபலியமாயிருந்தபடியால், உரோமர் உலகமெல்லாம் இராச்சிய பாரம் பண்ணுகிறார்களென்பது வழக்கப்பேச்சா யிருந்தது. ஆகையால்தான் உலகமெல்லாம் குடிக்கணக்கெழுதும்படி கட்டளை பிறந்ததென்று அர்ச். லூக்காஸ் சொல்லுகிறார்.

2. சீரியதேசத்து அதிபதியாகிய சீரி னுஸ் என்பவனால் இந்த முதலாம் குடிக்கணக்குச் செய்யப்பட்டது.

3. ஆதலால் எல்லோரும் தங்கள் பெயர் எழுதிக்கொடுக்கும்பொருட்டு, தங்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போனார்கள்.

4-5. அப்படியிருக்க, சூசையப்பர் தாவீதின் கோத்திரத்தையும், குடும் பத்தையும் சேர்ந்தவராகையால், கெற்ப வதியான தம்முடைய மனைவி மரியம் மாளோடு பெயரெழுதிக் கொடுக்கும் படியாக, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீது நகரத்துக்குப் போனார். (மிக். 5:2; 1 அரச. 20:6; மத். 2:6.)

6. அவர்கள் அங்கே இருக்கையில் சம்பவித்ததேதெனில், அவளுக்குப் பேறுகாலம் நிறைவேறிற்று.

7. அவள் தன் தலைச்சன் பிள்ளை யைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத் தாள். ஏனெனில் சத்திரத்தில் அவர் களுக்கு இடமில்லாமல் போயிற்று.

* 7. திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப் பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பாரென்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத் திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன் அடிமைத்தனத்தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீதென்பவர் இராஜபட்டம் பெற்ற 1032 - ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவ குமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையால் வச னித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம் நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப் பிறப்பு சம்பவித்ததென்றறிக. அர்ச். கன்னிமரியம்மாள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்றாளென்று சொல்லும்போது, அந்தப் பிள்ளைக்கு முந்தி வேறு பிள்ளைகளைப் பெற்றதில்லையென்று அர்த்தமாகுமேயொழிய பின்பு வேறே பிள்ளைகளையும் பெற்றா ளென்று அது குறிக்கிறதில்லை.

8. அப்போது அந்த நாட்டில் சில இடையர்கள் விழித்திருந்து, தங்கள் கிடைக்குச் சாமக்காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.

9. அப்பொழுது இதோ, ஆண்டவ ருடைய தூதன் அவர்களருகே வந்து நிற்க, தெய்வீகப்பிரகாசம் அவர்க ளைச் சூழ்ந்து ஒளிர அவர்கள் மிகவும் பயந்து அஞ்சினார்கள்.

10. ஆனால் தேவதூதன் அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; ஏனெனில் இதோ, எல்லா ஜனத்துக் கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக் கிறேன்.

11. அதேதெனில்: இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்.

12. குழந்தையைத் துணிகளில் சுற்றி, முன்னிட்டியில் கிடத்தியிருக்கக் காண் பீர்கள். இதுவே உங்களுக்கு அடை யாளம் என்றார்.

13. என்றவுடனே வானுலகசேனை யின் கூட்டம் அந்தத் தேவதூதனோடு சேர்ந்து, சர்வேசுரனைத் துதித்து:

14. உன்னத ஸ்தலங்களிலே சர்வேசு ரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோ கத்திலே நல்ல மனதுள்ள மனுஷர்களுக் குச் சமாதானமும் உண்டாகக்கடவது என்றார்கள்.

15. பின்னும் நடந்ததேதெனில், தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பர லோகத்துக்குப் போனவுடனே, இடை யர்கள் ஒருவரொருவரை நோக்கி: நாம் பெத்லகேம் மட்டும் போய், சம்பவித் ததும், ஆண்டவர் நமக்கு அறிவித்தது மாகிய இந்தச் சங்கதியைப் பார்ப்போ மாக என்று பேசிக்கொண்டு,

16. தீவிரமாய் வந்து, மரியம்மாளை யும், சூசையப்பரையும் முன்னிட்டி யில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

17. கண்டு, அந்தக் குழந்தையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியை அறிந்துகொண்டார்கள்.

18. அன்றியும் கேட்டவர்களெல் லோரும் இடையர்களால் தங்களுக்குச் சொல்லப்பட்டவைகளின் பேரிலும் ஆச்சரியப்பட்டார்கள்.

19. மரியம்மாள் இந்த வாக்கியங் களையெல்லாம் தன் இருதயத்தில் வைத்துச் சிந்தித்துக்கொண்டு வரு வாள்.

20. இடையரும் தங்களுக்குச் சொல் லப்பட்டபடியே தாங்கள் கண்டதும் கேட்டதுமாகிய யாவற்றையும் பற்றி சர்வேசுரனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டு திரும்பிப்போனார்கள்.

21. பின்பு பிள்ளைக்கு விருத்தசேத னஞ் செய்வதற்கு எட்டுநாளான போது, அவர் தாயின் உதரத்தில் உற்பவிக்கு முன்னே தேவதூதனால் சொல்லப் பட்டபடியே சேசு என்ற நாமதேயம் அவருக்குச் சூட்டப்பட்டது. (ஆதி. 17:12; லேவி. 12:3; மத். 1:21; லூக். 1:31.)

22. மோயீசனுடைய நியாயப் பிர மாணத்தின்படி அவளுடைய சுத்திகர நாட்கள் நிறைவேறினபோது, அவரை ஜெருசலேமுக்குக் கொண்டு போனார் கள். (லேவி. 12:6.)

23. ஏனெனில் தாயின் கருப்பை யைத் திறந்து பிறக்கும் ஆணெல்லாம் ஆண்டவருக்கு அபிஷேகமாக்கப்பட்ட தென்று, கர்த்தருடைய நியாயப்பிரமா ணத்திலே எழுதியிருக்கிறபடி, அவரைக் கர்த்தர் சமுகத்தில் ஒப்புக்கொடுக்கவும். (யாத். 13:2; எண். 8:16.)

24. ஒரு ஜோடி காட்டுப் புறாக்களை யாவது, இரண்டு மாடப்புறாக் குஞ்சு களையாவது பலியாகச் செலுத்த வேண் டுமென்று, கர்த்தருடைய பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி செய்யவும் (அவரை ஜெருசலேமுக்குக் கொண்டு போக வேண்டியதாயிருந்தது.) (லேவி. 12:8.)

25. அப்பொழுது, இதோ ஜெருசலே மில் சிமையோன் என்னும் பெயருள்ள ஓர் மனிதன் இருந்தார். அந்த மனிதன் நீதிமானுமாய், பயபக்தியுடையவருமாய், இஸ்ராயேலின் தேற்றரவுக்கு எதிர்பார்த் திருக்கிறவருமாய் இருந்தார். இஸ்பிரீத்து சாந்துவானவரும் அவரிடத்தில் இருந்தார்.

26. அன்றியும், தாம் ஆண்டவரு டைய கிறீஸ்துவைக் காண்பதற்கு முன்னே சாவைக் காண்பதில்லையென்று அவர் இஸ்பிரீத்துசாந்துவினால் வாக்குப் பெற்றிருந்தார்.

27. அப்படியிருக்க, அவர் இஸ்பி ரீத்துசாந்துவின் ஏவலால் தேவாலயத் துக்கு வந்தார். குழந்தையாகிய சேசு நாதருக்காக வேதமுறைமைப்படி செய் வதற்கு அவருடைய பிதா மாதா அவரை உள்ளே கொண்டுவரும்போது,

28. அவர் தம்முடைய கரங்களில் அவரை ஏந்திக்கொண்டு, சர்வேசுர னைத் தோத்தரித்து வசனித்ததாவது:

29. ஆண்டவரே! உம்முடைய வாக் கியத்தின்படியே உம்முடைய தாசனை இப்பொழுது சமாதானத்தோடு போக விடுவீர்;

30. ஏனெனில் தேவரீர் சகல ஜனங் களுக்கும் முன்பாக ஏற்படுத்தின

31. உம்முடைய இரட்சிப்பை என் னுடைய கண்கள் கண்டுகொண்டன.

32. (அது) புறஜாதிகளைப் பிரகா சிப்பிக்கிற ஒளியாகவும், உமது ஜன் மாகிய இஸ்ராயேலருக்கு மகிமை யாகவும் இருக்கிறது என்றார். 33. அவருடைய பிதாவும், மாதாவும் அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவை களின்பேரில் அதிசயித்துக்கொண்டிருந் தார்கள்.

34. அல்லாமலும், சிமையோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாராகிய மரியம்மாளை நோக்கிச் சொன்னதாவது: இதோ, இவர் இஸ்ரா யேலில் அநேகருக்குக் கேடாகவும் உத்தானமாகவும், விரோதிக்கப்படும் குறியாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். (இசை. 8:14; உரோ . 9:33; 1 இரா . 2:7.)

* 34. இரட்சகர் இராஜ மகிமையோடு வருவாரென்று யூத ஜாதியார் எண்ணியிருக்க, சேசுநாதருடைய தரித்திரமும், பாடுகளும், சிலுவை மரணமும் அநேகருக்கு இடறலாயிருக்கு மென்று அறிவிக்கிறார்.

35. உம்முடைய ஆத்துமத்தையும் ஓர் வாள் ஊடுருவும்; இதனாலே அநே கருடைய இருதய சிந்தனைகள் வெளிப் படும்படியாகும் என்றார்.

36. அன்றியும், ஆசேர் கோத்திரத் தாளும், பானுவேல் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஓர் தீர்க்கதரிசினி இருந்தாள். அவள் கன்னிமைப் பிராய முதல் தன் புருஷனோடு ஏழு வருஷம் வாழ்ந்தவளும், அதிக வயது சென்ற வளுமாயிருந்தாள்.

37. எண்பத்து நாலு வயதுமட்டும் விதவையாயிருந்த அவள் தேவாலயத் தைவிட்டு அகலாமல், இரவும் பகலும் உபவாசித்து ஜெபஞ்செய்து (ஆண்டவ ருக்கு) ஊழியஞ்செய்து கொண்டு வந்தாள்.

38. அவளும் அந்நேரத்தில் சடுதி யிலே வந்து, ஆண்டவரை ஸ்துதித்து, இஸ்ராயேலின் இரட்சிப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த யாவரோடும் அவரைக்குறித்துப் பேசினாள்.

39. கர்த்தருடைய வேதகட்டளைப் படி அவர்கள் சகலத்தையும் நிறைவேற்றினபின்பு கலிலேயாவிலுள்ள நசரேத்தென்னும் தங்கள் ஊருக்குத் திரும்பிப்போனார்கள்.

* 39. மூன்று இராஜாக்கள் திவ்விய குழந்தையைச் சந்தித்ததையும், திருக்குடும்பம் எஜிப்து தேசத்துக்கு ஓடிப்போனதையும், அர்ச். லூக்காஸ் எழுதாமல் விட்டுவிட்டபடியால், சுத்திகரச் சடங்கு நிறைவேறின பிறகு அவர்கள் நசரேத்தூருக்குப் போனார்களென்று தொடர்பாகச் சொல்லுகிறாரொழிய, அப்போது உடனே நசரேத்தூருக்குப் போனார்க ளென்று நினைக்ககூடாது. எஜிப்திலிருந்து திரும்பி வந்தபின் நசரேத்தூருக்குப் போனார்க ளென்று நிச்சயமாயிருக்கிறது.

40. பிள்ளை வளர்ந்து, ஞானத்தால் நிறைந்து, பலப்பட்டு வந்தது; சர்வே சுரனுடைய அருளும் அவரிடத்தில் இருந்தது.

41. அவருடைய பிதாவும், மாதாவும் வருஷந்தோறும் பாஸ்கா என்னும் மகா பண்டிகை நாளிலே ஜெருசலேம் நகருக் குப் போவார்கள். (யாத். 23:15; 34:18; உபாக. 16:1.)

42. அவ்வண்ணமே அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கிறபோது, அவர்கள் பண்டிகையின் வழக்கப்படி ஜெருசலேமுக்குப்போய்,

43. பண்டிகை நாட்கள் முடிந்து திரும்பி வரும்போது, பாலனாகிய சேசு நாதர் பிதா மாதாவுக்குத் தெரியாமல் ஜெருசலேமிலே தங்கிவிட்டார்.

44. அவர் தங்கள் கூட்டத்தாரோடு இருப்பாரென்று அவர்கள் எண்ணிக் கொண்டு, ஒரு நாள் பயணம் வந்து, தங்கள் இனத்தாரிடத்திலும், அறிமுக மானவர்களிடத்திலும் விசாரித்தும்,

45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டு, ஜெருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

46. பின்னும் சம்பவித்ததேதெனில், மூன்று நாளைக்குப் பிறகு தேவாலயத் திலே அவர் சாஸ்திரிகள் நடுவிலே உட்கார்ந்து, அவர்கள் சொல்லுகிற தைக் கேட்கவும் அவர்களை வினாவ வும் கண்டார்கள்.

47. அவருடைய வாக்கைக் கேட்ட யாவரும் அவருடைய ஞானத்தையும் மாறுத்தாரங்களையும் பற்றிப் பிரமித் துக்கொண்டிருந்தார்கள்.

48. (அவருடைய மாதா பிதாவும்) அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்போது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே, ஏன் எங்களுக்கு இப் படிச் செய்தீர்? இதோ, உம்முடைய தந்தையும், நானும் துக்கித்து, உம்மைத் தேடினோமே என்றாள்.

49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலர் யிருக்கவேண்டு மென்று உங்களுக்குத் தெரியாதோ என்றார்.

50. ஆனால் அவர்கள் தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையைக் கண்டு பிடிக்கவில்லை .

51. பின்பு அவர் அவர்களோடு கூடப் புறப்பட்டு, நசரேத்தூருக்கு வந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்த வாக்கியங் களையெல்லாம் தன்னிருதயத்தில் வைத் திருந்தாள்.

52. சேசுநாதரோவென்றால் சர்வேசுரனுக்கும், மனிதருக்கும் முன்பாக ஞானத்திலும், பிராயத்திலும், வரப்பிரசாதத்திலும் வளர்ந்து கொண்டு வந்தார்.