இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 01

அர்ச். லூக்காஸ் எழுதிய சேசு கிறீஸ்துநாதருடைய பரிசுத்த சுவிசேஷம்முதல் அதிகாரம்

அருளப்பருடைய பிறப்பும், திவ்விய வார்த்தையின் மனுஷாவதாரமும் முன் அறிவிக்கப்பட்டதும், அர்ச். கன்னிமரியம்மாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததும், அருளப்பர் பிறந்ததும், சக்கரியாசுடைய சங்கீதமும்.

1. நமது மத்தியில் நடந்தேறிய விஷயங்களின் வரலாற்றை ஒழுங் குடன் எழுத அநேகர் முயன்றபடியால்,

2. துவக்கமுதல் கண்ணால் கண்டவர்களும், வாக்கியத்தைப் பிரசங்கிக்கிற உத்தியோகமுள்ளவர்களுமாய் இருந்தவர்கள் நமக்குக் கையளித்தபடியே,

3. ஆதிமுதல் யாவற்றையுங் கவனமாய்க் கற்றுக்கொண்ட நானும், உத்தம தெயோபிலே, உனக்கு ஒழுங்குடன் எழுதுவது நலமென்று எனக்குத் தோன்றிற்று.

* 3. தெயோபிலே என்பது தேவ பக்தனென்றர்த்தமாம். இதனால் சகல கிறீஸ்தவர்களும், குறிக்கப்படுகிறார்களென்றறிக. (அப். 1:1)

4. ஏனெனில், உனக்குப் போதிக் கப்பட்டவைகளின் உண்மையை நீ அறிந்து கொள்ள வேண்டு மென்ப தைப்பற்றித்தான்.

5. யூதேயா தேசத்து அரசனாகிய எரோதின் நாட்களிலே, அபியாவின் கோத்திரத்தார் முறையைச் சேர்ந்தவர் ராகிய சக்கரியாஸ் என்னும் பெயருள்ள ஓர் குருப்பிரசாதியிருந்தார். அவருடைய மனைவி ஆரோன் குமாரத்திகளில் ஒருத்தி; அவளுக்குப் பெயர் எலிசபெத். (1 நாளா. 24:10.)

* 5-ம் வசனத்தில் சொல்லப்படுகிற எரோதன் யாரென்றறியும்படி, மத். 2-ம் அதி. முதல் வசனத்தின் வியாக்கியானம் காண்க.

5. குரு கோத்திரமாகிய ஆரோன் வம்சம் பலுகிப் பெருகினதினால், தாவீது இராஜா அக்கோத்திரத்தாரை 24 குடும்பங்களாகப் பிரித்து, ஒவ்வொரு குடும்பத் தாரும் ஒவ்வொரு வாரம் திருப்பணி செய்யும்படி ஏற்பாடு செய்து அவர்களுக்குள் முறை குறிக்கும்படி சீட்டுப்போட்டதில், 8-வது சீட்டு அபியாஸ் என்பவர் குடும்பத்துக்கு விழுந்தது.

6. அவர்கள் இருவரும் ஆண்டவ ருடைய சகல கற்பனைகளிலும் நீதி முறைமைகளிலும் குற்றமின்றி நடந்து, தேவ சமுகத்தில் நீதிமான்களாயிருந் தார்கள்.

7. எலிசபெத் மலடியுமாய், இரு வரும் வயது சென்றவர்களுமாயிருந்த மையால், அவர்களுக்குப் பிள்ளையில் லாதிருந்தது.

8. அப்படியிருக்கையில் சம்பவித்த தேதெனில், அவர் தேவசந்நிதானத் தில் தமது வரிசை முறையில் குருத்துவத் தொழில் நடத்திவருங் காலத்தில்,

9. குருத்துவத் தொழிலுக்கடுத்த வழக்கப்படி, கர்த்தருடைய ஆலயத் துக்குள் பிரவேசித்துத் தூபங் கொடுக் கும்படி, அவருக்குச் சீட்டு விழுந்தது.

* 9. சீட்டினால் குறிக்கப்பட்டாரென்கும்போது, இந்தச் சீட்டு முன் தாவீதன் போட்ட சீட்டைக் குறிப்பதல்ல. கோவில் திருப்பணியில் பலவகைச் சடங்குகளிருந்ததினால் இவருடைய கோத்திரத்தாரே, தங்களுக்குள் சீட்டுப்போட, தூபங் கொடுக்கும்படி இவருக்குச் சீட்டு விழுந்ததென்றறிக.

10. தூபங்கொடுக்கும் வேளையில், ஜனங்க ளெல்லோரும் கூட்டமாய் வெளியே ஜெபம் செய்துகொண்டிருந் தார்கள்.

11. அப்போது ஆண்டவருடைய தூதன் தூபப்பீடத்தின் வலது புறத்தில் நிற்கிறவராய் அவருக்குத் தரிசனை யானார்.

12. சக்கரியாஸ் அவரைக் கண்டு கலங்க, பயமும் அவரைப் பிடித்தது.

13. தேவதூதனோ அவரை நோக்கி: சக்கரியாஸே, நீ பயப்படாதே; ஏனெனில் உன்னுடைய மன்றாட்டு கேட்டருளப் பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத் உனக்கு ஓர் குமாரனைப் பெறுவாள். அவ னுக்கு அருளப்பனென்று பெயரிடுவாய்;

14. உனக்குச் சந்தோஷமும் அக் களிப்பும் உண்டாகும்; அநேகரும் அவ னுடைய பிறப்பினால் மகிழ்வார்கள்.

15. ஏனென்றால், அவன் ஆண்ட வருடைய சமுகத்தில் பெரியவனா யிருப்பான்; திராட்சை இரசத்தையும் மதுவையும் பானஞ்செய்யான். அவன் இன்னும் தாயின் உதரத்திலிருக்கும் போதே இஸ் பிரீத்துசாந்துவினால் நிரப்பப்படுவான் ;

16. இஸ்ராயேல் புத்திரரில் அநே கரைத் தங்கள் தேவனாகிய கர்த்தரி டத்திற்குத் திருப்புவான்;

17. பிதாக்களின் இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், அவிசுவாசி களை நீதிமான்களின் விவேகத்திற்குந் திருப்பி, கர்த்தருக்கு உத்தம் ஜனத்தை ஆயத்தப்படுத்தும்படி அவன் எலியாசு டைய ஞானத்தையும் வல்லமையையும் உடையவனாய் அவருக்கு முன்னாக நடப் பான் என்றார். (மலாக். 4:6; மத். 11:14.)

18. அதற்குச் சக்கரியாஸ் தேவதூ தனை நோக்கி: இதை நான் அறிவ தெப்படி? நானோ விருத்தாப்பியனா யிருக்கிறேன்; என் மனைவிக்கும் நாள் கடந்துபோயிற்றே என்றார்.

19. தேவதூதன் அவருக்கு மாறுத் தாரமாக: நான் ஆண்டவருடைய சந்நிதானத்திலே நிற்கிற கபிரியேல்; உன்னுடன் பேசி இந்தச் சுபசெய்தி களை உனக்கு அறிவிக்கும்படியாய் அனுப்பப்பட்டேன்.

20. தக்க காலத்திலே நிறைவேறப் போகிற என் வாக்கியங்களை நீ விசு வசியாத்தின் நிமித்தம், இவைகள் சம்ப விக்கும் நாளளவும் இதோ, நீ பேசக் கூடாத ஊமையாயிருப்பாய் என்றார்.

21. ஜனங்களோ சக்கரியாசுக்காகக் காத்திருந்து, அவர் தேவாலயத்தில் தாமதிக்கிறதைப்பற்றி, ஆச்சரியப்பட் டுக்கொண்டிருந்தார்கள்.

22. அவர் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாதிருந்தார். அதனாலே அவர் தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டாரென்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவரோ அவர் களுக்குச்சயிக்கினை செய்து ஊமையா கவே இருந்தார்.

23. பின்னும் சம்பவித்ததேதெனில், அவருடைய திருப்பணி நாட்கள் நிறை வேறினபின், அவர் தம்முடைய வீட்டுக் குத் திரும்பினார்.

24. அந்நாட்களுக்குப்பின் அவரு டைய மனைவியாகிய எலிசபெத் கெஜ் பந்தரித்து, ஐந்து மாதமாக வெளிப் படாதிருந்து:

25. மனிதருக்குள்ளே எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க, ஆண்டவர் என்னைக் கிருபாகடாட்சத்தோடு நோக்கின இந்த நாட்களிலே, எனக்கு இப்படிச் செய் தருளினார் என்று சொல்லிவந்தாள்.

26. ஆறாம் மாதத்திலே, கபிரியேல் என்னும் தேவதூதன் கலிலேயா நாட்டி லுள்ள நசரேத்தூருக்குச் சர்வேசுரனால் அனுப்பப்பட்டு,

27. தாவீதின் கோத்திரத்தாராகிய சூசையப்பர் என்னப்பட்ட ஓர் மனிதனுக்கு விவாக பந்தனமான ஓர் கன்னிகையிடத்தில் வந்தார். அந்தக் கன்னிகையின் பெயர் மரியம்மாள். (மத். 1:18.)

* 27. இந்த வசனத்திற்கு மத்.1-ம் அதிகாரம் 18-ம் வசனத்தின் வியாக்கியானத்தைக் காண்க. 

28. தேவதூதன் அவளிருந்த இடத்தில் பிரவேசித்து: பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம் முடனே; ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக் கப்பட்டவள் நீரே என்றார்.

* 28. இந்த வாக்கியத்தினாலே தேவதூதன், அர்ச். கன்னிமரியாயை மூன்று வகையாய் விசேஷித்துப் புகழுகிறார். 1-வது, பிரியதத்தத்தினால், அதாவது: இஷ்டப்பிரசாதத்தினால் பூரணமானவளே அல்லது நிறைந்தவளேயென்றும்; 2-வது, கர்த்தர் உம்முடனிருக்கிறார், அதாவது: உம்முடைய ஆத்துமம் சர்வேசுரனுடைய சிம்மாசனம், அல்லது தேவாலயமாய் இருக்கிறதென்றும்; 3- வது, ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, அதாவது: உலகமுண்டானது முதல் உலகமுடியுமட்டும் உண்டான ஸ்திரீகளுக்குள்ளே அநேகர் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாயிருந்தாலும், எல்லோருக்கும் மேலாக நீர் மாத்திரம் விசேஷமாய் ஆசீர்வதிக்கப்பட்டவளென்றும் வசனிக்கிறார். ஓர் தேவதூதனால் இப்படிப்பட்ட புகழ்ச்சி சொல்லப்படுவதைப் பார்க்க மேலான மகிமை வேறேது?

29. இதை அவள் கேட்ட மாத்திரத்தில், அவருடைய வார்த்தையினால் கலங்கி, இந்த மங்களம் எத்தன்மையானதோ என்று யோசனையாயிருக் கையில்,

30. தேவதூதன் அவளை நோக்கி: மரியே! நீர் அஞ்சவேண்டாம், ஏனெனில் சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.

31. இதோ, உமது உதரத்தில் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமஞ் சூட்டுவீர். (இசை . 7:14; லூக். 2:21.)

32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய சுதன் என்னப்படுவார்; ஆண்டவரான சர்வேசுரன் அவர் தந்தையாகிய தாவீதின் சிங்காச னத்தை அவருக்குத் தந்தருளுவார்; ஆதலால் அவர் யாக்கோபின் கோத்திரத் தில் என்றென்றைக்கும் அரசாளுவார். (மிக். 4:7; தானி. 7:14, 27.)

33. அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது என்றார்.

* 32, 33. தாவீதின் சிங்காசனம் என்பது திருச்சபையின் அரசாட்சியாம். யாக்கோபு கோத்திரத்தில் என்றென்றைக்கும் அரசாளுவார் என்றதினால், அப்போஸ்தலர்களும் முந்தின விசுவாசிகளும் மாத்திரம் யாக்கோபின் வம்சத்தாரல்ல, ஞானஸ்நானம் பெற்ற அஞ்ஞானிகளெல்லோரும், விசுவாசத்தினால் அபிரகாம் யாக்கோபு என்பவர்களுடைய புத்திரராயிருக்கிறார்கள். 

34. அப்போது மரியம்மாள் தேவ தூதனைப் பார்த்து: இது எப்படியாகும்? நான் புருஷனை அறியேனே என்று சொல்ல,

35. தேவதூதன் அவளுக்கு மாறுத் தாரமாக: இஸ்பிரீத்துசாந்து உமதுமேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்; ஆகை யால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்.

* 35. இதிலே தேவதூதன் அர்ச். கன்னிமரியாயிக்குச் சொன்ன மறுமொழிக்கு அர்த்தம் ஆவது: நீர் புருஷனையறியாத கன்னியாயிருக்கிறீரென்று எனக்குத் தெரியும். ஆனால் ஒரு கன்னி ஒரு குழந்தையைப் பெறுவாளென்றும், அந்தக் குழந்தை எம்மானுவேல், அதாவது: நம்முடன் வாசம்பண்ணுகிற சர்வேசுரன் என்று பெயரிடப்படுவாரென்றும் இசையாஸ் தீர்க்கத்தரிசியானவர் வசனித்திருக்கிறார். அந்தக் கன்னி நீர்தான். நீர் பெறப் போகிற திவ்விய பாலன் சர்வேசுரனுடைய குமாரன் எனப்படுவாரென்றும், இஸ்பிரீத்துசாந்து வானவர் தம்முடைய தேவ வல்லமையைக் கொண்டு உம்முடைய பரிசுத்த உதரத்தில் உமது இரத்தத்தினால், அந்தத் திருக்குழந்தையின் சரீரத்தை உண்டாக்குவாரென்றும் அர்த்தமாம்.

36. இதோ, உமக்குப் பந்துவாகிய எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஓர் புத்திரனைக் கெற்பந்தரித்திருக்கிறாள். மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.

37. ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார்.

38. அப்போது மரியம்மாள்: இதோ, நான் ஆண்டவருடைய அடிமை, உம் முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றாள். என்றவுடனே தேவதூதன் அவளைவிட்டு அகன்று போனார்.

* 38. ஆழ்ந்த தாழ்ச்சியும், மட்டற்ற கீழ்ப்படிதலுமுள்ள இந்த வார்த்தையினாலே சம்மனசு சொன்ன காரியத்திற்கு அர்ச். கன்னிமரியாயி சம்மதித்தவுடனே கர்த்தரு டைய மாம்ச ஐக்கியத்தின் பரமரகசியம் நிறைவேறிற்று.

39. அந்நாட்களிலே மரியம்மாள் எழுந்து, மலைநாட்டிலே யூதா தேசத் திலுள்ள ஓர் பட்டணத்துக்குத் தீவிர மாய்ப் போய்,

40. சக்கரியாசுடைய வீட்டில் பிரவே சித்து, எலிசபெத்தம்மாளை வாழ்த்தி னாள்.

* 40. அர்ச். சூசையப்பர் திருக்கன்னிகையோடு எலிசபெத் வீட்டிற்கு வரவில்லை. வந்திருப்பாராகில், எலிசபெத்தம்மாள் தேவதாயாராக அவளைப் புகழ்ந்து கொண் டாடினபோது, தேவமாதா கர்ப்பிணியாயிருப்பதின் இரகசியத்தை அறிந்திருப்பார்.

41. அப்போது சம்பவித்ததேதெனில், மரியம்மாள் சொன்ன வாழ்த்துதலை எலிசபெத்தம்மாள் கேட்ட மாத்திரத் தில், அவளுடைய உதரத்திலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்தம்மாளும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு,

42. உரத்த சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னதாவது: ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக் கப்பட்டதாமே.

43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக் குக் கிடைத்ததெப்படி ?

44. இதோ, நீர் வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று.

* 44. ஸ்நாபக அருளப்பர் தாய்வயிற்றில் எந்தச் சமயத்தில் துள்ளினாரோ, அப்போதே அவருக்கு ஜென்ம தோஷம் நீங்கிப்போயிற்று. அதனிமித்தம் அவர் பிறந்த திருநாளும் திருச்சபையில் கொண்டாடப்படுகிறது. மேலும் இரட்சகர் செய்த இந்த முந்தின அற்புதத்தைத் தமது மாதாவின் வழியாகச் செய்ததினாலே, நாம் அவள் மட்டிலே எவ்வளவு உறுதியான நம்பிக்கை வைக்கத்தகுமென்று அறிந்துகொள்ளலாம்.

45. அன்றியும் விசுவசித்தவளாகிய நீரே பாக்கியவதி: ஏனெனில் ஆண்ட வரால் உமக்கு வசனிக்கப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.

46. அப்போது மரியம்மாள் வசனித்த தாவது: என் ஆத்துமமானது ஆண்ட வரை மகிமைப்படுத்துகின்றது;

47. என் இரட்சண்யமாகிய சர்வே சுரனிடத்தில் என் மனமும் ஆனந்த மாய் எழும்பி மகிழ்கின்றது;

48. ஏனெனில் தமது அடிமையா னவளுடைய தாழ்மையைக் கிருபா கடாட்சத்தோடு பார்த்தருளினார். ஆகையால் இதோ, இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். (சங். 112:6.)

49. ஏனெனில் வல்லபமிக்கவர் பெரு மையுள்ளவைகளை என்னிடத்தில் செய் தருளினார்; அவருடைய நாமம் பரிசுத்த முள்ளது.

50. அவருடைய கிருபையும் தலை முறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மேலிருக்கின் றது. (சங். 33:11; 102:17.)

51. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார்; தங்கள் இருதய சிந்தனையில் கர்வ முள்ளவர்களைச் சிதறடித்தார். (இசை. 51:9; சங். 32:10.)

52. வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி, தாழ்ந்த வர்களை உயர்த்தினார்.

53. பசித்திருக்கிறவர்களை நன்மை களினால் நிரப்பித் தனவான்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். (1 அரச. 2:1-10.)

54. தமது கிருபையை நினைவுகூர்ந்து, தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை பரிக்கிரகம் பண்ணினார். (இசை. 41:8.)

55. அப்படியே நமது பிதாக்களா கிய அபிரகாமுக்கும், ஊழியுள்ள காலம் அவர் சந்ததியாருக்கும் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார் என்றாள். (ஆதி 17:9; 22:16; சங். 131:11; இசை . 41:8.)

56. பின்னும் மரியம்மாள் அவ ளோடு ஏறக்குறைய மூன்றுமாதம் இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப் போனாள்.

57. அப்படியிருக்க, எலிசபெத்தம் மாளுடைய பிரசவகாலம் நிறைவேறி, அவள் ஓர் குமாரனைப் பெற்றாள்.

58. அப்போது ஆண்டவர் தமது கிருபையை அவளிடத்தில் விளங்கச் செய்தாரென்று அவளுடைய அய லகத்தாரும் சுற்றத்தாரும் கேள்விப் பட்டு, அவளுடன் மகிழ்ந்து அவளை வாழ்த்தினார்கள்.

59. எட்டாம் நாளில் சம்பவித்த தேதெனில்: பிள்ளைக்கு விருத்த சேதனஞ்செய்ய அவர்கள் கூடிவந்து, அதன் தகப்பனுடைய நாமத்தின் படியே சக்கரியாஸ் என்று அதற்குப் பெயரிடப்போகையில்,

60. அதன் தாய் எதிர்மொழியாக: அப்படியல்ல, அதற்கு அருளப்பன் என்று பெயரிடவேண்டும் என்றாள்.

61. அவர்களோ அவளை நோக்கி: உன் உறவின்முறையாரில் இந்தப் பெயர் கொண்டவன் ஒருவனுமில் லையே என்று சொல்லி,

62. அதன் தகப்பனுக்குச் சயிக்கினை காட்டி, அதற்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டார்கள்.

63. அவர் ஓர் எழுத்துப்பலகை யைக் கேட்டு வாங்கி, அதன் பெயர் அருளப்பனென்று எழுதினார். அதனால் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

64. அக்ஷணமே அவருடைய வாய் திறக்கப்பட்டு, நாவும் கட்டவிழ்க்கப் பட்டு, சர்வேசுரனைத் தோத்தரித்துப் பேசினார்.

65. ஆகையால் அவருடைய அய லகத்தாரெல்லோருக்கும் பயமுண்டா னதுமன்றி, யூதாவின் மலைநாடெங் கும் இந்தச் செய்திகளெல்லாம் பிர சித்தமுமாயிற்று.

66. (இவைகளை) கேள்விப்பட்ட யாவரும் தங்கள் இருதயங்களில் இவை களை வைத்துக்கொண்டு, ஒருவனொரு வனைப்பார்த்து: இந்தப்பிள்ளை எப் படிப்பட்டதாய் இருக்குமென்று நினைக் கிறாய் என்பார்கள். ஏனெனில் ஆண்ட வருடைய கரம் அதனோடிருந்தது.

* 66. ஆண்டவருடைய கரம் அதனோடு இருந்தது என்பதற்கு சர்வேசுரனுடைய வல்லபமும், அவருடைய கிருபையுள்ள பராமரிப்பும் அவரோடு இருந்ததென்று பயனாம்.

67. மீளவும் அதன் தந்தையாகிய சக்கரியாஸ் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டுத் தீர்க்கதரிசனமாய் உரைத்ததாவது:

68. இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தர் தோத்தரிக்கப்படுவாராக. ஏனெனில் அவர் தம்முடைய பிரஜை களைச் சந்தித்து, அவர்களை மீட்டுக் கொண்டார். (சங். 73:12.)

69-70. பூர்வீக முதலிருந்த தம்மு டைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகளின் வாயால் அவர் திருவுளம்பற்றினபடியே, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்தில் நமக்கு ஓர் இரட்சண்யக் கொம்பை ஏற்படுத்தினார். (சங். 131:17; எரே. 23:6.)

* 69. கொம்பு :- மூலபாஷையில் கொம்பு என்னும் பெயரால் வல்லமையைக் குறிக்கிறது வழக்கம். இவ்விடத்தில் இரட்சண்ய கொம்பு என்பது உலக இரட்சகரென்றறிக.

71. நம்முடைய சத்துருக்களிடத் தினின்றும், நம்மைப் பகைக்கிறவர்க ளுடைய கையினின்றும் நம்மை இரட் சிக்கவும், (எரே. 30:10.)

72. (இவ்விதமாய்) நம்முடைய பிதாக்களுக்கு இரக்கஞ் செய்யவும், தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூரவும் (அவ்வண்ணஞ் செய்தார்).

73. நம்முடைய பிதாவாகிய அபிர காமுக்கு அவர் இட்ட ஆணையேதெனில்:

74. நம்முடைய சத்துருக்களின் கையினின்று நாம் விடுதலையாகி, அச்சமின்றி,

75. நம்முடைய வாழ்நாளெல்லாம் தமது சமுகத்தில் பரிசுத்தத்தோடும் நீதியோடும் தமக்கு ஊழியஞ்செய்யும் படி அனுக்கிரகம் செய்வோம் என்பதே. (ஆதி. 22:16; எரே. 31:33; எபி. 6:13,17)

76. நீயோ பாலனே! உன்னத மானவருடைய தீர்க்கதரிசி எனப் படுவாய்; ஏனெனில் ஆண்டவருடைய வழிகளை ஆயத்தஞ் செய்யும்படி யாகவும், (மலக். 3:1).

77. நமது கடவுளின் இரக்க உருக் கத்தால் அவருடைய ஜனத்தின் பாவ மன்னிப்புக்காக அவர்களுக்கு இரட் சண்ய அறிவைக் கொடுக்கும்படியாக வும், அவருடைய சமுகத்துக்கு முன் நடந்துபோவாய். (மலக். 4:5).

78. அந்த இரக்க உருக்கத்தால் உன்னதத்தினின்று உதயமானவர், (சக். 3:8; 6:12; மலக். 4:2.)

79. அந்தகாரத்திலும் மரண நிழலி லும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு ஒளி வீசவும், நமது பாதங்களைச் சமாதானத் தின் பாதையில் நடத்தவும் நம்மைச் சந்தித்திருக்கிறார் என்றார். (இசை. 2:4.)

80. பிள்ளையோ வளர்ந்து, ஞானத்தில் தேறி, தம்மை இஸ்ராயேல் ஜனத்துக்குக் காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தார்.

* 80. எரோதரசன் குழந்தைகளைக் கொல்லத்தேடின சமயத்தில், எலிசபெத்தம்மாள் தன் குமாரனை வனாந்தரத்துக்கு எடுத்துக்கொண்டு போனாளென்று நினைக்க இடமுண்டு.